10 ஆண்டு இருண்ட தமிழகம்! மீட்டெடுத்துவரும் முதல் வருக்கு துணை நிற்ப்போம்! அமைச்சர் எம்.ஆர்.கே.பேச்சு
- உறியடி செய்திகள்

- May 10, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா...
10, ஆண்டாக இருண்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டெடுத்து, எல்லோருக்கும் எல்லாம் என்கிற லட்சியத்தில் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்துவரும் தமிழக முதல்வர் தளபதியின் பின்னே ஆர்பரித்து துணை நிற்ப்போம் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்,
கடலூர் கிழக்கு மாவட்டம் குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் குள்ளஞ்சவடி அண்ணா திடலில் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் தி.மு.கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். பேசும் போது கூறிய தாவது ......
இரண்டாண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழக அரசு, தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதிகளை|பெரும்பான்மையா வைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது..
முதல்அமைச்சர் தளபதியாரின் தலைமையிலான கழக ஆட்சியில், அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள். மகளீர் , கழனியில் உணவு உற்பத்திக்காக பாடும் படும் உழவர்கள் விவசாயிகள், வேளாண்மை உற்பத்தி சார்ந்தவர், ஆலையில் உழைக்கும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தமிழ் மக்களுக்கும், அனைத்து துறைசார்ந்தஅரசின் திட்டங்களை முழுமையாக கொண்டு சேர்த்துள்ளார் என்பதை நாடும், மக்களும்நன்கு அறிவார்கள்.....

எஞ்சி காலங்களிலும் மக்களுக்கான பணிகளையும், வளர்ச்சிப் பணி திட்டங்களையும் முழுமையாக தமிழக மக்களுக்கு நிறைவேற்றி தருவார் என்பதற்க்கு உதாரணம்தான், முதல்வர் தளபதியாரின் இந்த இரண்டாண்டு ஆட்சியின் சாதனைகள் என்றே கூறலாம். தமிழக மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரம் உயர்வு என்று
மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றி வரும் நம் முதல்வர் தேர்தல் நேரத்தில் சொன்ன திட்டங்களை மட்டுமல்ல சொல்லாமலே அனைத்து தரப்பிலும் வாழும் பலதரப்பட்ட மக்கள் பயன்பெற்றிடும்வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை அறிவித்து, அதனை நிறைவேற்றியும் அனைவருக்குமான திராவிட மாடல் அரசை வழிநடத்தி வருகின்றார். என்றால் அது மிகையில்லை!
எஞ்சிய காலங்களில், மேலும் தமிழகமும் - தமிழ் மக்களும் பயன்பெறும் வகையிலான அரசாகவும் பணிகளைமுன்னெடுத்தும் வருகின்றார்.
தமிழ்நாட்டில் எந்த மூலைமுடுக்கிலும் நடக்கும், அனைத்துத்துறை சார்ந்த மக்கள் நல திட்ட வளர்ச்சிப் பணிகளை தானே நேரடியாக கண்காணித்து தேவையான ஆலோசனைகள், அறிவுறுத்தல்களை வழங்கி, உரிய காலத்தில் கடைகோடி தமிழனும் பயனடைய வேண்டும் என்று பாடுப்பட்டுவரும் திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் தளபதியின் பின்னால் அணிதிரண்டு கடந்த 10 ஆண்டாக இருண்டு போன
தமிழ்நாட்டை மீட்டெடுத்திட ஆர்பரித்து துணை நிற்க்க வேண்டிய நமது கடமையாகும்...
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

ஒன்றிய அவைத்தலைவர் ராமமூர்த்தி,கோ.ஆறுமுகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் நாராயணசாமி ஒன்றிய பொருளாளர் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள்,மகளீர் அணி, உள்ளிட்ட அனைத்து சார்பு அணிகளின நிர்வாகிகள் கழக தோழர்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர்.




Comments