129 ஆண்டு,ஏற்காடு காவல் நிலையம்! பழைமைமாறா -புதுமையுடன் திகழுகின்றது!! அமைச்சர் கே.என்.நேரு தகவல்!!
- உறியடி செய்திகள்

- May 7, 2023
- 1 min read



மணவை எம்.எஸ்.ராஜா....
ஏற்காடு, 129, ஆண்டுகள் பழைமை வாய்ந்த காவல்நிலையம் தமிழக முதல்வர் தளபதியாரின் முயற்சியால், பழைமை மாறா - புதுமையுடன் காட்சியளிக்கின்றது. என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்!
சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 129. பழைமை வாய்ந்த காவல்நிலைய கட்டிடம், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி புனரமைப்படும் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தி.மு.கழக முதன்மைச் செயலாளர்.சேலம் மண்டல தி.மு.க. பொருப்பாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஏற்காட்டில் புதுப்பிக்கப்பட்ட காவல்நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது....
தமிழ்நாட்டில் பழமைவாய்ந்த தமிழர்களின் கலாச்சாரம், நாகரீகம். பண்பாடு, வாழ்வில் முறைவழிப்பாட்டுடன் தொடர்புடைய புராதான அடையாளங்கள், பழங்கால பழமைவாய்ந்த கலைகள், விளையாட்டு, தொல்பொருட்களை மீட்டெடுத்து தமிழர்களின் பண்டைக்கால பெருமைகளை உலகறியச்செய்துவரும் தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியாரின் பணிகள், உலக அளவில் பாராட்டுக்குறியதாக திகழுகின்றது.


கீழடி தொல்பொருள் ஆய்வுகள் அரங்கம், கலை இலக்கிய, புத்தக வாசிப்புத்தன்மைகளை ஊக்கப்படுத்தும் வகையில், மாவட்டங்கள் தோறும் இவை தொடர்பான விழாக்கள், கண்காட்சி, ஆகியவற்றுடன், எதிர்கால சந்ததியான மாணவச்செல்வங்களையும் இதில் ஆர்வமும் பங்கே ற்கச்செய்து ஊக்கப்படுத்தியும் வருகின்றார்.
அந்த அடிப்படையில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞருக்கு மிக நெருக்கு மிகு சேலம் மாவட்டத்தில், முக்கிய சுற்றுலா மையமாக உள்ள ஏற்காட்டில் உள்ள காவல்நிலையம் சுமார் 129. ஆண்டுகள் பழமைமிக்க ஒன்றாகும்.
இதனை முதல்வர் தளபதியார். பழமைமாறா புதுமையுடன் புதுப்பித்து அடுத்துதலை முறையினரும் இதுப்பற்றி அறிந்திடும்வகையில் அதற்கான பணிகளைச் செய்ய உத்தரவிட்டு பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக அவர் கூறினார்.

முன்னதாக சுற்றுப்புற மலைவாழ் கிராம மக்கள் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் ரூ.10.77. கோடி மதிப்பீட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டப் பணிகளை தொடங்கியும், கூட்டுறவுத்துறை சார்பில் மகளீர் சுயஉதவிக்குழுக்கான சுழல்நிதி உள்ளிட்ட ரூ.78. லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மீண்டும் மஞ்சப்பை திட்டத்தையும் தொடங்கிவைத்த அமைச்சர் நேரு, இதுகுறித்து சுற்றுலாப்பயணிகள், உள்ளிட்டோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.


அதன்பின் நடைபெற்ற விழா பேரூரையில் பேசிய அமைச்சர் நேரு தமிழகமுதல்வரின் தலைமையிலான 2 ஆண்டு தி.மு.கழக அரசில் நிறைவேற்றப்பட்ட மக்கள்நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறி பேசினார்.


பின்னர் ஏற்காடு மலைப்பாதை மண்சரிவை தடுக்கும் வகையில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மலைப்பாதை சீரமைப்பு - சாலைபலப்படுத்தும் பணிகளையும் ஆய்வு செய்து, மீதமுள்ள ப் பணிகளை விரைந்து முடித்திடவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக
சேலம் அண்ணாப் பூங்காவில் நடைபெற்று வரும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் திருவுறுவ சிலை அமைக்கும் பணியை கொட்டும் மழையில் பார்வையிட்டு, ஆலோசனைகளும் வழங்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கெளதமசிகாமணி, சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், முன்னால் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட பலர் உடன் சென்றார்கள்.




Comments