15. மாத தி.மு.கழக ஆட்சியில் அனைத்து அரசு துறைகளிலும் முன்னேற்றம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!
- உறியடி செய்திகள்

- Nov 30, 2022
- 2 min read

அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது முடிவுற்ற பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்து, நலதிட்ட உதவிகளையும் வழங்கினார்.
அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற இவ்விழாவில், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் விழா பேரூரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது,......

முத்தமிழறிஞர் கலைஞரை, தலைவராக எழ வைத்த பெருமை அரியலூர் மாவட்டத்திற்கு உண்டு.தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கை எப்படியாவது கெடுக்க முடியுமா என்று சிலர் சதி செய்கிறார்கள். ‘ஐய்யோ தமிழ்நாடும், மக்களும் அமைதியாக நிம்மதியாகயிருக்கின்றார்களே, சட்டம்- ஒழுங்கு கெடவில்லையே,’ என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் வயிறு எரிகிறது.
அதனால், ‘புலிக்கு பயந்தவன், என் மேல வந்து படுத்துக்கோ’ என்று சொல்வார்களே அதுபோல, ஆபத்து – ஆபத்து,என்று சிலர் அலறிக் கொண்டு இருக்கிறார்கள்.
இருக்கும் பதவி நிலைக்குமா என்று அவர்களுக்கு பயமாக இருக்கிறது. அதனால்தான் மக்களைப் பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சிதான் இந்த தி.மு.கழகத்தின்ஆட்சி........

தமிழ்நாட்டில், கழக ஆட்சியில் தொழில் நிறுவனங்கள் அதிகரித்து, ஏற்றுமதியில் இந்திய ஒன்றியத்திலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது.
வேளாண்மை உற்பத்தியும் - பாசன பரப்புகளும் அதிகமாகியுள்ளது. பள்ளிக் கல்வி,உயர்கல்வியில் சிறப்பாக பணியாற்றி, பல விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளோம், ஆட்சி பொருப்பேற்ற 15. மாதத்தில், 1.50 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பை கொடுத்துள்ளோம். பெண்கள் சமூதாயத்தில் உயர்ந்திடும்வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, வருமானத்தையும் - வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க தொடர்ந்து தனி கவனத்துடன் திட்டங்களை செயல்படுத்தியும் வருகின்றோம். இப்படி ஒரு ஆட்சி எப்படி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்பதற்கு உதாரணமாக, தி.மு.கழக ஆட்சி நடைபெற்று வருகின்றது.......

அதேசமயம்,கையில் அதிகாரம் இருந்தபோது, கைகட்டி வேடிக்கைப் பார்த்து, கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தியதோடு, பத்தாண்டு காலத்தில் தமிழகத்தையும், மக்களையும் பாதாளத்திற்குள் தள்ளி நாசமாக்கியவர்கள், அதையெல்லாம் மக்கள் இன்று மறந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு புகார் கொடுப்பதையும், பேட்டிகள் அளிப்பதையும் கண்டு மக்கள் சிரிக்கிறார்கள்.
உங்கள் யோக்கியதைதான் எங்களுக்குத் தெரியுமே என்று ஏளனமாகச் சிரிக்கிறார்கள்.
விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை உள்ளபடியே வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு, அதை செய்வதற்கான அருகதை அவர்களுக்கு இருக்க வேண்டும்.
தங்கள் கையில் ஆட்சி இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரைப் போல, உலக மகா உத்தமனைப் போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான தகுதி இல்லை.

ஒரு ஆட்சி எப்படி நடத்த கூடாது என்பதற்கு, கடந்த , 10 ஆண்டுகால அதிமுக, ஆட்சி உதாரணம், ஒரு ஆட்சி எப்படி மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டாக திராவிட முன்னேற்றக் கழக அரசு நடைபெறுகிறது. ஆனால், ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது, ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக கடந்த கால அதிமுக ஆட்சி நடைபெற்றது.
தமிழகம் இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளையும், அனைத்து துறைகளிலும், உயரத்தையும் அடையச் செய்வதுதான் நமது ஆட்சியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளை அடைய என்னை ஒப்படைத்துக் கொண்டு நான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றேன்
ஆனால் பலரின் கவலை,இருக்கும் பதவி நிலைக்குமா?என்று அவர்களுக்கு பயமாக இருக்கிறது. அதனால்தான் மக்களைப் பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சிதான் இந்த ஆட்சி.
இவ்வாறாக அவர் பேசினார்....

முன்னதாக முதல்வர், மு.க.ஸ்டாலின், அரியலூர் மாவட்ட அகல்ஆராய்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து அரியலூர் மாவட்டச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் கார்த்தி வீட்டிற்கு நேரில் சென்று அடுக்குமாடி குடியிருப்பு வீட்டு ஆணையையும் வழங்கினார்....
விழாவில்,தி.மு.கழக முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், கே.என்.நேரு, தி.மு.கழக செயல்திட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர், கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.அரியலூர் மாவட்ட தி.மு கழக செயலாளர், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன். அமைச்சர்கள் ரகுபதி, கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.




Comments