திரும்பெறப்படும் 2.ஆயிரம் நோட்டு! கர்நாடக தேர்தல் தோல்வி,மடை மாற்றமா? எப்போது தான் ஊழல் ஒழியும்!!
- உறியடி செய்திகள்

- May 20, 2023
- 2 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுகிறது ரிசர்வ் வங்கி - செப்.30 கடைசி நாள்!
கர்நாடகா தேர்தல் தோல்வியை திசைதிருப்பும் முயற்சி இது!
முதலில் 2 ஆயிரம் புதிய நோட்டை கொண்டு வரும் போது இனி ஊழல் ஒழியும் என்றதும். இப்போது 2 ஆயிரம் நோட்டை தடைசெய்வதால் ஊழல் ஒழியும் என்பது முன்னுக்கு பின் முரண்ணான ஒன்றாகவே உள்ளது! என்கிற கருத்துக்களையும்
எளிதாக கடந்து செல்லவும் இயலாது!!
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் பின் வருமாறு:
“2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23-ம் தேதி முதல் வங்கிகளில் கொடுத்து கணக்கில் வரவு வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம். ஒரு நேரத்தில் அதிகபட்சம் 20,000 ரூபாய் வரை வங்கிகளில் இவ்வாறு வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும்.
எந்த ஒரு வங்கிக் கிளையிலும் பணத்தை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வரும் செப்டம்பர் 30-ம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுக்கள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதேநேரத்தில், அவை திரும்பப் பெறப்படுகின்றன. வங்கிகளில் வரவு வைப்பது என்பது வழக்கமாக வரவு வைப்பது போன்றதே. இதில் கட்டுப்பாடுகள் கிடையாது" என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுவரைக்கும் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 375 கோடி இருக்கும்.
ஒரு நோட்டு அச்சடிக்க ஆன செலவு மட்டும் சராசரியாக 4 ரூபாய்..
ஆக மொத்தம் அச்சடிக்கிற செலவு மட்டும் 1500 கோடி ரூபாய்.
இந்த நீளமான நோட்டை ஏடிஎம் மெசின்களில் அடுக்க முடியாததால் மெசின்களை மாற்றியமைக்க வேண்டி இருந்தது.
நாட்டில் ஏடிஎம்கள் எண்ணிக்கை அப்போது சுமார் 2 இலட்சம்.
ஒரு ஏடிஎம்மின் விலை சராசரியாக 7 இலட்சம் ரூபாய்.
மாற்றியமைக்க ஏடிஎம் விலையில் 10% ஆனது என்றால் மொத்த செலவு,
கிட்டத்தட்ட 1400 கோடி.
இது போக 15 இலட்சம் பொதுத் துறை, தனியார் துறை வங்கி ஊழியர்களுக்கு பயிற்சிக்கான செலவு,
375 கோடி நோட்டுகளை நாடு முழுக்க லாரிகளில் கொண்டு சென்று விநியோகிக்க ஆன செலவு,
எல்லாத்தையும் சேர்த்தால்,
2000 ரூபாய் நோட்டுகளை அவசர கோலத்தில் அறிமுகப்படுத்தி, இப்போது திரும்பப் பெற்ற, துக்ளக் கோமாளித் தனத்தினால் ஆன மொத்த தண்ட செலவு 5000 கோடி ரூபாயைத் தாண்டும்!
இது போக கள்ள நோட்டு ஒழிப்பு, கருப்பு பண ஒழிப்பு, மின்னணு வர்த்தகப் பரவலாக்கம் என எல்லா குறிக்கோள்களிலும் முற்று முழுவதுமாகத் தோற்ற, இந்திய நாட்டின் வரலாற்றிலேயே, மனிதனால் நிகழ்த்தப்பட்ட ஆகப்பெரிய பொருளாதார பேரழிவுத் தாக்குதலான பண மதிப்பிழப்பினால்,
பொருளாதாரம் 1.5% சுருங்கியதால், ஆண்டு ஒன்றுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு மட்டும்
2,50,000,00,00,000 (இரண்டேகால் இலட்சம் கோடி) ரூபாய்!
ஏற்பட்ட வேலை வாய்ப்பு இழப்பு மட்டும் 15,00,000! ஆமாம், அதே பதினைந்து இலட்சம்!
உயிரிழப்பு நூற்றுக்கு மேல்!
என்கின்ற வைரல் பதிவுகளும் சமூக வளைதளங்களில் வரத்தான் செய்கின்றன!
கர்நாடகா தேர்தல் தோல்வியை திசைதிருப்பும் முயற்சி இது!
முதலில் 2 ஆயிரம் புதிய நோட்டை கொண்டு வரும் போது இனி ஊழல் ஒழியும் என்றதும். இப்போது 2 ஆயிரம் நோட்டை தடைசெய்வதால் ஊழல் ஒழியும் என்பது முன்னுக்கு பின் முரண்ணான ஒன்றாகவே உள்ளது! என்கிற கருத்துக்களையும்
எளிதாக கடந்து செல்லவும் இயலாது!!




Comments