+2தேர்வில்அனைத்து பாடங்களிலும் முதலிடம்! மாணவி நந்தினிக்கு அமைச்சர்பெரியசாமி வாழ்த்து!!
- உறியடி செய்திகள்

- May 9, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா...
+2 தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவி நந்தினிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி வாழ்த்து!
ப்ளஸ், 2.பொதுத் தேர்வுகள் முடிவுகள் நேற்று மே. 8. திங்கட்கிழமை காலை வெளியிடப்பட்டன....
தேர்வு முடிகளின்படி
97.85 சதம் தேர்ச்சி விகிதத்துடன் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தையும், 97.79 சதத்துடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 97.58 தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
மாவட்டம் வாரியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு சதவிகிதம்
விருதுநகர் 97.85
திருப்பூர் 97.79
பெரம்பலூர் 97.59
கோவை 97.57
தூத்துக்குடி 97.36
சிவகங்கை 97.26
கன்னியாகுமரி 97.05
ஈரோடு 96.98
நாமக்கல் 96.94
அரியலூர் 96.88
திருநெல்வேலி 96.61
ராமநாதபுரம் 96.3
திருச்சி 96.02
தென்காசி 95.96
மதுரை 95.84
தஞ்சாவூர் 95.18
கரூர் 94.31
சேலம் 94.22
சென்னை 94.14
நீலகிரி 93.85
திண்டுக்கல் 93.77
புதுச்சேரி 93.45
தேனி 93.17
புதுக்கோட்டை 92.81
தருமபுரி 92.72
செங்கல்பட்டு 92.52
திருவள்ளூர் 92.47
கடலூர் 92.04
திருவாரூர் 91.46
திருப்பத்தூர் 91.13
கள்ளக்குறிச்சி 91.06
காஞ்சிபுரம் 90.82
நாகப்பட்டினம் 90.68
விழுப்புரம் 90.66
மயிலாடுதுறை 90.15
திருவண்ணாமலை 89.8
கிருஷ்ணகிரி 89.69
வேலூர் 89.2
காரைக்கால் 88.57
ராணிப்பேட்டை 87.3
8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதமாகும். இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும்.

+2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி, 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
அனைத்து பாடத்திலும் சதம் வாங்கிய மாணவி நந்தினி
வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து 600 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இந்நிலையில், +2 பொதுத்தேர்வில்,
முதல் இடத்தைப் பிடித்த
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வாழ்த்துகளை
பெற்றார். அமைச்சர் பெரியசாமி மாணவிக்கு இனிப்பு ஊட்டி, பாராட்டி வாழ்த்தினார். மேலும் மாணவியின் பெற்றோர்கள் மற்றும் அவர் பயின்ற பள்ளியின் ஆசிரியர்களையும் அமைச்சர்பாராட்டினார்.




Comments