top of page
Search

24 மணி நேர வேலை சட்ட முன்வடிவு நிறுத்தம்! முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Apr 24, 2023
  • 2 min read
ree

ஆசிரியர் மணவை, எம்.எஸ்.ராஜா...


தமிழ்நாட்டில் 12.மணி நேர வேலை சட்டமுன்வரவு நிறுத்தப்பட்டதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!


தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத்திருத்தம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது பல்வேறு கேள்விகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை பார்க்கச் சொல்வது தொழிலாளர்களுக்கு அதிக பாரத்தைக் கொடுக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகள் சட்டம் 1948ன் படி நாளொன்றுக்கு 8 மணி நேரம், வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஒன்றிய அரசு தொழிலாளர் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்க வகை செய்யும் மசோதா ஒன்றைக் கொண்டு வந்தது. அந்த மசோதாவின் படி, அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் இந்த விதியைப் பொருத்த முடிவு செய்தது.

அந்த மசோதாவை அப்போது திமுக கடுமையாக எதிர்த்தது. சில குறிப்பிட்ட (குளிர்சாதன வசதி போன்றவை) வசதியான பணிச்சூழலில் வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு வேண்டுமானால் இந்த ஏற்பாடு பொருத்தமாக இருக்கலாம். ஆனால் கெமிக்கல் தொழிற்சாலைகளிலோ அல்லது கடினமான பணிகள் உள்ள தொழிற்சாலைகளிலோ 12 மணி நேர வேலை என்பது தொழிலாளர்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுக்கும் என்பது திமுகவின் கருத்து. தற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்த அந்த மசோதா அமலுக்கு வராமல் கிடப்பில் உள்ளது. இதற்கிடையில் மாநிலங்கள் விரும்பினால், தேவைக்கு ஏற்ப தாங்களே இது தொடர்பாக மசோதா கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்து விட்டது.

இதன் அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்காக கர்நாடகா இந்த மசோதாவை நிறைவேற்றி, அது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. அந்த மசோதாவும் அனைத்து நிறுவனங்களுக்கும் ஏற்கெனவே 12 மணி நேர வேலை நேரம் பொருந்தும் என்றுதான் சொல்கிறது.

இப்போது தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் பன்னாட்டு நிறுவனங்களையும், முதலீடுகளையும் ஈர்க்க வேண்டியது தொழில் வளர்ச்சிக்கு அவசியமாகிறது. எனவே பன்னாட்டு நிறுவனங்கள் சொல்லும் தொழிலாளர் பணி நேரத்தில் தளர்வு இருக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை ஏற்க வேண்டியதும் அவசியமாகிறது. அப்படி ஏற்காவிட்டால் அந்தத் தொழிற்சாலைகள் முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்ற போட்டியில் உள்ள கர்நாடகத்திற்குச் சென்று விடும். எனவே தொழில் நிறுவனங்களையும் கொண்டு வந்து அதன்மூலம் தொழில் வளர்ச்சியையும் வேலை வாய்ப்பையும் உருவாக்க வேண்டும். அதே சமயத்தில் தொழிலாளர் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்று இரண்டையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அதற்கேற்ற ஒரு மசோதாவைக் கொண்டு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள மசோதாவின் படி

வாரத்திற்கு 48 மணிநேர பணி நேர வரம்பு 4 நாட்களில் எட்டப்படும். மீதி மூன்று நாட்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

12 மணி நேரப் பணியைத் தேர்வு செய்து, வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்வதோ அல்லது 8 மணி நேரப் பணியைத் தேர்வு செய்து வாரத்தில் ஒரு நாள் மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்வதோ தொழிலாளர்களின் விருப்பத்தைப் பொருத்தது.

இந்த 12 மணி நேரப் பணியை அமல்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு தமிழ்நாடு அரசு மசோதாவின் படி

பணியிடம் பரந்து இருக்க வேண்டும்.

பணி கடினமாக இருக்கக் கூடாது.

தொழிலாளிகள் தங்கும் இடம் தொழிற்சாலைக்கு அருகில் இருக்க வேண்டும்.

போன்ற பல்வேறு நிபந்தனைகள் சுட்டிகாட்டப்பட்டது. இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தொழிற்சாலைகள் மட்டுமே 12 மணி நேரப் பணியை அமல்படுத்த முடியும். இந்த விதிமுறைகளை தொழிற்சாலைகள் மீறும் பட்சத்தில், தொழிலாளர் நலத்துறையில் தொழிலாளர்கள் முறையிடவும், அதன் மூலம் தங்கள் குறைகளுக்கு, பிரச்சளுக்குத் தீர்வு காணவும் முடியும். இந்த விதிமுறைகள் அனைத்துமே தொழிலாளர் நலனுக்காக விதிக்கப்பட்டவை.

இந்த மசோதா விஷயத்தில் பண்ணாட்டு முதலீடு தொழிற்சாலைகள்

இந்த இரண்டையும் பேலன்ஸ் செய்யும் விதத்தில் தமிழ்நாடு அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி, பெரும்பாலோரின் கருத்துக்கள் இந்த மசோதவுக்கு எதிரானதாகவேயிருந்தது. மேலும் இதுகுறித்த விரிவான கருத்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச்செயலகத்தில், 3. தமிழக அமைச்சர்கள்-அரசுத்துறை அதிகாரிகள் தொழிற்ச்சங்கங்கத் தலைவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு தங்களின் கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள். கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்கள் குறித்து உடனடியாக தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடி பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து


தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..


தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,..



2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருச்சசட்டமுன்வடிவு) மீதான மேல்நடவடிக்கை நிறுத்தப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிலவும் அமைதியான தொழிற்சூழலின் காரணமாகவே பெருந்தொழில் நிறுவனங்கள் முதலீடுகள் செய்தன. தென்மற்றும் வட மாவட்டங்களில் வேலைவாய்ப்ப்ய்களை ஏற்படுத்தும் நோக்கில் சட்டமுன் வடிவு நிறைவேற்றப்பட்டது.

தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் மசோதா நிறுத்தி வைக்கப்படுகிறது.

தொழிலாளர் நலத்துறையின் சட்டமுன்வடிவு மீதான செயலாக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

தொழிலாளர் நலன் காக்கப்பட்டதால் தான் தொழில் அமைதி நிலவும் என்பதை உணர்ந்து அரசு செயல்பட்டு வந்துள்ளது.

தற்போதும் அதே சிந்தனையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

தொழிலாளர் நலன் பேணும் அரசாகவே மாநில அரசு செயல்பட்டு வருகிறது. சட்டங்கள் குறித்த மாற்றுக்கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாநில அரசு செயல்படுகிறது.

அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் 12 மணி நேர வேலை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page