ரூ.300 கோடியில் கட்டுமான பணிகள். திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர்.சேகர் பாபு அதிரடி ஆய்வு!
- உறியடி செய்திகள்

- Dec 30, 2022
- 1 min read
Updated: Dec 31, 2022


திருச்செந்தூர் முருகன் கோவிலில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு அதிரடி ஆய்வு மேற்கொண்டு கட்டுமான, அன்னதானம் உள்ளிட்ட பணிகளையும் கள ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளையும் வழங்கினார்......
தமிழ் நாட்டில், தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொருப்பேற்றவுடன் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொருப்பேற்று சென்னை மாவட்ட தி.மு.கழக செயலாளர், தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு தலைமையில் துறைசார்ந்தவர்கள் இணைந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் ஆலோசனைகளின்படி, தமிழ்நாடு முழுவதும் இந்து அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான பல கோடி மதிப்பீலான சொத்துக்கள், சுவாமி சிலைகளையும் மீட்டெடுத்தது டன், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்கிற தந்தைபெரியாரின் கனவையும் நிறைவேற்றி ஆலயங்களின் கட்டமைப்பு, புனரமைப்பு.திருக்கோவில்களின் கும்பாபிஷேகங்கள், விழாக்களிலும் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனி கவனம் செலுத்தி திட்டப் பணிகளை முடுக்கிவிட்டு வருகின்றார்.
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழக அரசில் இந்துசமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளும் இந்தியாவின் பிற மாநிலங்கள் பிரமிக்கும் வகையில் முன்மாதிரியாக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


இந்நிலையில் இன்று டிச.30. வெள்ளிக்கிழமை, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு அதிரடிஆய்வு மேற்க்கொண்டார். அங்கு,௹ 300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து. பணிகளை விரைந்து முடிக்கவும். பக்தர்களின் தேவைகளுக்கேற்ப அனைத்து வசதிகளையும் துரிதமாக மேம்படுத்திடவும் கேட்டுகொண்டார். தொடர்ந்து, நீண்டநாள் பக்தர்களின் கோரிக்கையினை ஏற்று. பக்தர்களின்|கைப்பேசிகள் (செல்போன்) பாதுகாப்பு பெட்டகத்தினையும் திறந்துவைத்தார்....


தொடர்ந்து கோவிலுக்கு சுவாமிதரிசனத்திற்குவரும் மாற்றுத்திறனாளிகள்முதியோர்களை அழைத்துச் செல்ல 4. புதிய வாகனங்களை கொடியசைத்து துவக்கிவைத்தார். மேலும் கோவிலில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய 10 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் பணமுடிப்பையும் வழங்கி உற்ச்சாக படுத்தினார்.



பின்னர்கோவில் வளாகத்தில் வழங்கப்படும் அன்னதான திட்டத்தை ஆய்வை செய்து, பக்தர்களின் குறைகளையும் கேட்டறிந்து, கோவிலில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி.செயல்பாடுகளையும் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல் களையும் வழங்கினார்....
இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கலெக்டர் செந்தில்குமார். அறங்காவல் குழுத் தலைவர் அருள்முருகன்.மாவட்ட ஊராட்சி தலைவர், பிரம்ம சக்தி கோவில் அறங்காவலர்கள். மற்றும்இணை ஆணையர் கார்த்திக் உள்ளிட்டவர்கள் உடன் சென்றார்கள்.




Comments