5. முறை ஆண்ட கட்சிக்கு அண்ணாமலை பாடம் நடத்துவதா? அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி!!
- உறியடி செய்திகள்

- Dec 1, 2022
- 1 min read

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் பாதுகாப்பு முறை பற்றி பா.ஜ.கட்சியினர் கடும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அமைச்சர் மனோதங்கராஜ்.
தமிழக பா.ஜ.க.தலைவராக முன்னால் கர்நாடகா, ஐ.பி.எஸ்.அதிகாரி அண்ணாமலை பொருட்பேற்றபின்னர், தமிழ்நாட்டில், மைக்கேல் பட்டி பள்ளி மாணவி இறப்பு முதல், மதுரை விமான நிலையத்தில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு, இறுதி மரியாதை செய்வதிலும், கோவை கார் வெடிப்பு சம்பவம் வரை முன்னுக்கு பின் முறைகேடான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்னெடுக்கும் வகையில் தமிழ்நாட்டில், அண்ணாமலை தலைமையிலான சகாக்களும் தொடர் குற்றம். குறைகூறிவருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதனை தி.மு.க. அரசும் மறுத்தும் வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர்,
சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு,தமிழக அரசு உரிய பாதுகாப்பு தரவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து புகார் பகொடுத்த பின்னர் செய்தியாளர்களிடம் தமிழக அரசையும் - .காவல்துறையினரையும் மிக கடுமையாக அண்ணாமலைசாடினார்.....
இந்நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது...
நாட்டின் பல்வேறு பகுதிகளில், பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் சாதாரண மக்களுக்கு கூட பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருக்கின்ற நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்போடு இருக்கக்கூடிய சூழ்நிலை தமிழக அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நான் இன்னும் கேட்கிறேன் அண்ணாமலை போன்றவர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிந்து வெறுப்பு பிரச்சாரத்தைக் கக்கி, மக்களைப் பிரிக்கின்ற முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கே நல்ல பாதுகாப்பு இருக்கிறது..........

அப்படி இருக்கக்கூடிய நிலையில் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்க இந்த அரசுக்கு தெரியாதா? பொது மக்களுக்கே தெரியும் அண்ணாமலை சொல்வது எவ்வளவு வேடிக்கையானது என்று. பிஜேபி ஆளுகின்ற மாநிலங்களில் பாருங்கள், சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று.
NIA. தகவல் தருவதாக கூறுகிறார், அரசுக்கு தகவல் தரமாட்டார்களா? தன்னை விளம்பரபடுத்திக் கொள்ள அண்ணாமலை முன்னெடுக்கும், மக்கள் விரோத போக்கை பொதுமக்கள் நன்கு அறிவார்கள். என்.ஐ.ஏ.தகவல் தருவதாக கூறுவது அப்பட்டமான பொய் குற்றச்சாட்டு, அப்படி என்றால், அரசுக்கு தகவல் தெரிவித்திருப்பார்கள். ஆனால் அண்ணாமலை கூறுவது வெறுப்பு பிரச்சார யுக்தியாகும். தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பாதுகாப்பு. உள்ளிட்டவைகள் பற்றி நன்கு தெரியும். அண்ணாமலை யூகத்திற்கெல்லாம் பதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்புடன் இருக்கிறான். அதை இந்த அரசு உத்தரவாதப்படுத்தியுள்ளது. பிரதமரைப் பாதுகாப்பதற்கு அரசுக்கு தெரியாதா? அதை எங்களுக்கு கற்றுத் தரப் போகிறாரா? இந்த அரசு என்ன எல்.கே.ஜி.யில் இருக்கிறதா? ஐந்தாறு முறை தமிழகத்தை ஆண்ட ஒரு கட்சி அதெல்லாம் அவர் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்......
இவ்வாறாக அவர்கூறினார்.




Comments