திருச்சியில்அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஜூலை.7-ல் நடக்கிறது இலவச திருமணம்! வக்கீல் வைரமணி அழைப்பு
- உறியடி செய்திகள்

- Jul 4, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா...
திருச்சி சமயபுரத்தில், இந்து அறநிலையத்துறை சார்பில் இலவச திருமண திட்டத்தில் திருமணம் அமைச்சர்
கே.என்.நேரு நடத்தி வைக்கிறார்!
திருச்சி மத்திய மாவட்ட தி.மு.கழகச் செயலாளார் வழக்கறிஞர் வைரமணி அறிக்கை!

தி.மு.கழக தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர், மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, இந்துசமய அறநிலைத்துறையின் சார்பில் வருகின்ற
ஜூலை 07-ம் நாள்
வெள்ளிக்கிழமை அன்று இலவச திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமண ஜோடிகளுக்கு திருமணம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் தி.மு.கழக முதன்மைச் செயலாளர் சேலம் மாவட்ட பொருப்பாளர் தமிழ்நாடு
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு
சீரிய தலைமையில் நடைபெற உள்ளது.!

இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளோர், (இந்து மதத்தினர் மட்டும்)
ஜூலை,03- திங்கட்கிழமை அன்றய தேதிக்குள்
பதிவு செய்திட வேண்டும்.
எனவே நமது மாவட்டத்தில் உள்ள திருமண ஜோடிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென,
அன்புடன் அழைக்கின்றோம் .
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்




Comments