சட்டமன்றத்தில் உருக்கமான நிகழ்வு! கண்கலங்கிய துரைமுருகன்!! சமாதானபடுத்திய சபாநாயகர் அப்பாவு!!!
- உறியடி செய்திகள்

- Mar 29, 2023
- 1 min read

தமிழ்நாடு சட்டமன்றத்தில் உருக்கம், விவதாங்களுக்கு பதிலளித்து
பேசும்போது உருக்கமுடன் கண்கலங்கிய அமைச்சர் துரை- முருகன். சபாநாயகர் அப்பாவு ஆறுதல் பேச்சு!
தமிழக சட்டசபையில் இன்று நீர் வளத்துறை மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது. இந்த கோரிக்கைகளுக்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:

கேள்விக் கேட்பதும், வெட்டுத் தீர்மானங்களை தருவதும் உறுப்பினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
அதற்காக உறுப்பினர்களுக்கு நன்றி. எதிர்க்கட்சிகள் என் மீது காட்டும் மரியாதைக்கும் நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன். 1989 ஆம் ஆண்டில் இருந்து எப்போதெல்லாம் அமைச்சராக உள்ளேனோ அப்போதெல்லாம் இந்த துறை சார்பில் நான் தான் பதில் சொல்லி வருகிறேன். நீர் வளத் துறைதான் எனக்கு வேண்டும் என முதல்வரிடம் கேட்டேன்.
ஆனால் பொதுப் பணித் துறை என்ற பெயரில் இருக்காது என முதல்வர் சொன்னார். அதை பற்றி எனக்கு கவலையில்லை, ஆனால் இந்த துறையில்தான் விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய முடியும் என கருதுகிறவன்.
என்னை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலம் கட்சியில் இருந்தவன், இன்னும் இருக்க போகிறவன், என்றைக்காவது ஒரு நாள் மறையப் போகிறவன். நான் மறைந்துவிட்ட அன்று எனக்காக சமாதி எழுப்பப்படும். அந்த சமாதியில் கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான் என எழுதினால் போதும் என கண்கலங்கினார்....

அப்போது சபாநாயகர் அப்பாவு, இன்னும் 100 ஆண்டுகளை கடந்து நீங்கள் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள் என சொல்ல, துரைமுருகனும் நிச்சயமாக என கூறிய பின் “என்றைக்குமே தனக்கு வயது ஆகிடுச்சினு நினைக்கவே கூடாது, எப்பவும் இளமையாகவே நினைக்கணும்னு கருணாநிதி சொல்வார். எனவே நான் 100 வயது வரை நிச்சயம் இருப்பேன் கவலைப்படாதீர்கள் என்றார் அமைச்சர் துரைமுருகன்.




Comments