சங்பரிவார சக்திகளின் ஆதரவாளரா? ரிஷிசுனக்! மே 17 இயக்கம் கருத்து!!
- உறியடி செய்திகள்

- Oct 26, 2022
- 1 min read

பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் பின்புலம் பற்றிே மே 17 இயக்க குரல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது......
ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு தற்போது 6850 கோடி ரூபாய் (730 மில்லியன் பவுண்டுகள்) என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து நாட்டிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினார்களிலேயே அதிக செல்வம் உடையவராக உள்ளார். பிரித்தானிய பேரரசின் (UK) அரசரான சார்லசின் ஆபரணங்கள் தவிர்த்த சொத்து மதிப்பை விட இரண்டு மடங்கு சொத்து மதிப்பு இவருடையது.
ரிஷி சுனக் தனது முழுமையான சொத்துக்களை அறிக்கையிடாமல், தன் பெயரிலும் தன் மனைவி பெயரிலும் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களை மறைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் தற்போது எழுகின்றன. இத்தகைய வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளோடு நாம் அதிகம் கவனிக்க வேண்டியது அரசியலில் இவர் கொண்டுள்ள வலதுசாரி கண்ணோட்டமே.
கடந்த ஜூலை

கடந்த ஜூலை மாதம் நெருக்கடியின் போது ரிஷி சுனக் தனது நிதியமைச்சர் பதவியை முதலில் ராஜினாமா செய்துள்ளார். இவரைத் தொடர்ந்து பல அமைச்சர்கள் வெளியேறினர். இறுதியில் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு, தன்னை வளர்த்துவிட்டவரையே முதுகில் குத்தியவர் தான் ரிஷி சுனக்.
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழையபடி கொண்டு செல்ல கடுமையான முடிவுகள் எடுப்பேன் என்கிறார் ரிஷி சுனக். ஆனால் எதிர்க்கட்சியை சேர்ந்த ஜெரமி கோர்பைன் உட்பட பலர், இது 1% செல்வந்தர்களை காப்பாற்ற 99% மக்கள் பொருளாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளிவிடும் என்கின்றனர்................
சீக்கியர்களுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர் பிரீத்தி படேல். இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் பதவியில் இருந்த பிரீத்தி படேல் ஆர்.எஸ்.எஸ்.-ன் வெளிப்படையான ஆதரவாளர் என்று தெரிந்தும் அவரை ஆதரித்தவர் ரிஷி சுனக்.
இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.




Comments