கூட்டுறவு சங்கங்கள்-பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை! அமைச்சர். ஐ.பெரியசாமி தகவல்!!
- உறியடி செய்திகள்

- Nov 20, 2022
- 1 min read

மணவை, எம்.எஸ்.ராஜா.....
தமிழக கூட்டுறவு சங்கங்களின் தேவைகள், பணியாளர்களின் கோரிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்...
கரூரில் நடைபெற்ற 69வது தேசிய கூட்டுறவு வாரவிழாவில், தி.மு.கழக துணை பொதுச்செயலாளர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு 1926 பயனாளிகளுக்கு ௹.12.33 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவர்கள் - சிறப்பாக பணியாற்றிய கூட்டு றவு சங்ககளுக்கு பாராட்டு கேடயங்கள், பரிசுகள் வழங்கினார்...
தொடர்ந்து விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது....

தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் பொருப்பேற்றபின்னர், தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை பல்வேறு வளர்ச்சிகளையும், மாற்றங்களை ஏற்படுத்தி அனைத்து தரப்பு மக்களும் பயனடையில் வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறது...
உதாரமாக, விளைநிலங்கள் வைத்திருப்போர், விவசாயம் சார்ந்தோர் மட்டும் இது நாள்வரை பயனடைந்த நிலைமாற்றப்பட்டு விவசாயம் சாராதவர்களும், மாணவர்களும், கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாகி கால்நடை உள்ளிட்ட பல்வேறுவிதமான கடன்களை இலக்கி நிர்ணயமின்றி அனைவரும்,பெறலாம் என்று இந்திய ஒன்றியத்திலே தமிழ்நாட்டில் மட்டுமே,தமிழக முதல்வர் தளபதி, மு.க.ஸ்டாலின் வழிவகை செய்து தந்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் வாடகை கட்டிடங்களில் இயங்கிவரும். கூட்டுறவு சங்கங்கள், நியாயவிலைக்கடைகள்சொந்த கட்டிடங்களில் செயல்பட விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிப்பது தொடர்பாக குழு அமைத்து விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் செயல்பட்டுவரும், 4.481. கூட்டுறவு சங்கங்களில் 1.717. சங்கள் லாபத்தில் செயல்பட்டு வருகின்றது. இதேபோல் பிறஅனைத்து சங்கங்களையும் லாபத்தில் செயல்பட வைப்பதற்கான நடவடிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். லாபத்தில் இயங்கும் சங்கங்களின் ஒரு பகுதி நிதியை எடுத்துவரும் காலங்களில் அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கவும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது........

இப்படி தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்று கூட்டுறவுத்துறை ரூ.68 கோடிக்கு மேல் வைப்புதொகையை பெற்றுள்ளது. 4.441. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உள்ள பொதுமக்களின் தங்க நகை வைப்புதொகை குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறாக அவர் பேசினார்......முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி பொருட்களை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டு, உற்பத்திவிவரங்களை கேட்டறிந்து, ஆலோசனைகளையும் வழங்கினார்....

தமிழக மின்சார துறை அமைச்சர், வி.செந்தில்பாலாஜி. எம்.எல்.ஏ.க்கள்குளித்தலைநகர தி.மு.கழக செயலாளர். இராமாணிக்கம். அரவாக்குறிச்சி இளங்கோ,கிருஷ்ணராயபுரம், சிவகாமசுந்தரி, மாநகர மேயர் கவிதா, கலெக்டர் பிரபுசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.....

இதனை தொடர்ந்து கருரூரில் நடைபெறவிருந்த
தி.மு.கழக இளைஞரணி செயலாளர், சேப்பாக்கம் - திருவல்லிகேணி எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் 45. வது பிறந்ததின விழா கபாடி போட்டியை கரூரில் தி.மு.கழக துணைப்பொதுச் செயலாளர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கிவைத்து, விளையாட்டு வீரர்களை உற்படுத்தி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்,தெரிவித்தார்.




Comments