தி.மு.கழக உறுப்பினர் சேர்த்தல்! கட்சியின்விதிமுறை களை பின்பற்றுங்கள் அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!!
- உறியடி செய்திகள்

- Apr 9, 2023
- 1 min read

ஆசிரியர் மணவை.எம்.எஸ்.ராஜா.
விழுப்புரத்தில் நடைபெற்ற தி.மு.கழகத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதில் கழகத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அமைச்சர் பேராசியர் க.பொன்முடி எச்சரிக்கை!
திமுகவிற்கு ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கட்சியின் தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் கட்சியினர் உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தொகுதியில் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர்.தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது.

திமுக தலைமை கழகத்தின் மூலமாக புதிய நிர்வாகிகளை பூத்து கமிட்டி நிர்வாகிகளாக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறி இருந்திருக்கிறார்கள். ஆனால் அந்தந்த பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களையே பூத் கமிட்டி நிர்வாகிகளாகவும், ஒரே குடும்பத்தில் பலரையும் தேர்வு செய்யப்பட்டு படிவங்களை பூர்த்தி செய்து அதை அமைச்சர் பேராசியர் க. பொன் முடியிடம் வழங்கி இருக்கிறார்கள்.....
இதனை கவனித்தஅமைச்சர் பொன்முடி அந்த படிவத்தை ஏற்க மறுத்ததுடன், கழகத்தின் விதிமுறைகள், கழகத்தலைவர் தளபதியாரின் அறிவுறுத்தல், வழிகாட்டு நெறிமுறைகளையும் கழக விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி பூர்த்தி செய்த படிவங்கள் மட்டும்தான் ஏற்க முடியும். அதனை விடுத்து கழக விதிமுறைகளை மீறி நடப்போர் மீது கழகத் தலைவர், தலைமைக்கழகம் வரை கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன்.
எனவே தொண்டர்களும், நிர்வாகிகளும் இதனை முழுமையாக பின்பற்றி கழகப் பணிகள் சிறக்க ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்..
இவ்வாறாக அவர் பேசினார்.
இதனை யித்து அமைச்சர், பேராசியர்,கபொன்முடி, அங்கிருந்த நிர்வாகிகளிடம் புதியதாக மீண்டும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றார்.




Comments