டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை! புகார்கள் மீது கடும் நடவடிக்கை! அமைச்சர் சு.முத்துசாமி அதிரடி!
- உறியடி செய்திகள்

- Jul 3, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா...
அரசு மதுபான கடைகளில் (டாஸ்மாக்)கூடுதல் விலைக்கு மதுவிற்போர் மீது உரிய கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது! அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி!
உள்துறை முதன்மை செயலாளர் அமுதா, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் தொழிற்சங்கத்தினர். ஆகியோருடன். தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள். ஆலோசனைகளின்படியும், அரசு மதுபான கடைகளில் பணியாற்றும்,
ஊழியர்கள் குறைகள் முதல் டாஸ்மாக் நிறுவன பணிகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, கடந்த காலங்களில் எழுந்த சர்ச்சைகளுக்கு நிறைந்தர முடிவு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து தீவிரப்படுத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்ட தி.மு.கழக செயலாளர் தமிழ்நாடு வீட்டு வசதி நகர்புறே மேம்பாடு, மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி......


கூடுதல் விலைக்கு அரசு மதுபான கடைகளில் விற்பனையை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரபடுத்துவதுடன், மதுபானங்களை பில் போட்டு விநியோகம், டாஸ்மாக் கணனிமயமாக்கல், மதுபானங்களை விவசாயத்திற்கு மறுசுழற்சி செய்து நன்மைபயக்கும் வகையில் டெட்ரா பேக்கில் விநியோகம்,உள்ளிட்ட மேலும் அதிரடி நடவடிக்கைகளையும், தீவிரப்படுத்தி, டாஸ்மாக் நிறுவனத்தில் எந்தவொரு சர்ச்சைகளுக்கும் இடமிருக்க க்கூடாது என்று அதற்கான பணிகளை, சம்மந்தபட்ட துறை அதிகாரிகளை முடுக்கிவிட்டு துரிதபடுத்தியும் வருகிறார் அமைச்சர் முத்துசாமி.!
இந்நிலையில், ஈரோடு அடுத்த பவானியில் செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது!

பவானியாற்றில் கழிவுநீர் கலப்பதால், மாசுபடுவதாக வந்த புகாரை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பாவானி சாகர் அணையிலிருந்து, விவசாயத்திற்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கீழ்பவானியாற்றுவாய்க்கால்கள் மறு சீரமைப்பு குறித்து இருதரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
டாஸ்மாக் கடைகளில், சில இடங்களில் கூடுதல் விலைக்கு மதுவிற்கப்படுவதாக வந்த தகவல்களின் பேரில் உரிய நடவடிக் கை எடுக்கப்பட்டும் வருகிறது.!

தனியார் பள்ளிக்கு இணையாக, சிறந்த தரத்துடன் செயல்பட்டுவரும் தொட்டாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கூடுதல் பள்ளிக் கட்டிடங்கள் புதிதாக கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருடன் ஆலோசித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.!

தமிழ்நாட்டின் கவர்னர் தனது கடமையில் , அரசியல் சாசனத்தை மீறி செயல்படுன்றார்.
அவருக்கான வர முறை உண்டு, அரசு அனுப்பும் கோப்புகளை ஒருமுறைதிருப்பி அனுப்பலாம், ஆனால் அரசின் கொள்கை
சார்ந்த முக்கிய விசயங்களை சட்டத்திற்குட்பட்டு மீண்டும் அனுப்பும்போது அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமை, பொருப்பு அவருக்கு உள்ளது.
கவர்னர் எழுப்பும் சந்தேகங்களுக்கும். கேள்விகளுக்கும் அரசு உரியமுறையில் விளக்கமளித்து தெளிவுபடுத்தியும் தான் வருகின்றது.!
இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்




Comments