தமிழ்நாட்டில் வேளாண்மை அடுக்கு திட்டம்! 13.அரசு துறை மூலம் நடவடிக்கை!! விவசாயிகள் பயனடைய அழைப்பு!!!
- உறியடி செய்திகள்

- Apr 3, 2023
- 1 min read


தமிழ்நாட்டில், வேளாண்மை உழவர் நலத் துறை மூலமாக வேளாண் அடுக்கு எனும் திட்டம், 13.அரசுத்துறைகளின் செயல்படுத்தப்படவுள்ளது..
இது குறித்து வேளாண்மை - உழவர் நலத்துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது.....
தமிழ்நாட்டில்
ஒன்றிய , மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக வேளாண்
அடுக்கு
(Agri Stack) என்ற திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
வருவாய் மற்றும்
பேரிடர் மேலாண்மை துறை,
வேளாண்மை துறை,
தோட்டக்கலைத் துறை,
கூட்டுறவுத்துறை ,
பட்டு வளர்ச்சி துறை,
உணவு வழங்கல் துறை ,
வேளாண் பொறியியல் துறை,
ஊரக வளர்ச்சி துறை,
கால்நடை பராமரிப்பு துறை ,
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை,
விதை சான்றளிப்பு துறை ,
சர்க்கரை துறை ,
உள்ளிட்ட 13 துறைகளில்
அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்டப்பலன்களும் கிடைக்கச்செய்யும் வகையில்
GRAINS
(Grower Online Registration of Agricultural Input System) என்ற வலைதளத்தில் விவசாயிகளுடைய விபரங்கள் குறிப்பாக நில உடமை விபரம் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் அந்தந்த கிராமங்களின்
கிராம நிர்வாக அலுவலர்கள்
உதவி வேளாண்மை அலுவலர்கள்
உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாய பெருமக்கள் அனைவரும் தங்களது
நில உடமை ஆவணம்,
ஆதார் அட்டை நகல்,
புகைப்படம்,
குடும்ப அட்டை நகல்,
வங்கி கணக்கு புத்தகம்
ஆகியவற்றுடன் உரிய கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ளகேட்டுக் கொள்ளப்படுகிறது.




Comments