தாக்கலானது வளர்ச்சியை நோக்கிய வேளாண்மை பட்ஜெட்! அனைத்து கட்சியினர் பாராட்டு!! ஒர் சிறப்பு பார்வை!!!
- உறியடி செய்திகள்

- Mar 21, 2023
- 5 min read



இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கலானது வேளாண் பட்ஜெட், அனைத்து கட்சியினர் பாராட்டி வரவேற்பு!
ஆர்கானிக் விவசாயத்திற்கு 26 கோடி இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் விருது ரூபாய் 5 லட்சம் பரிசு வேளாண் பட்ஜெட்டில் விவரம் பற்றிய ஓர் சிறப்பு பார்வை..!
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ரூபாய் 26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது.தி.மு.கழக உயர்மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் மாவட்ட தி.மு.கழக செயலாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் (2023) இந்த ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து.
பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் .


அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டத்திற்கு ரூபாய் 230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2021 முதல் 2022 வரை 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்துள்ளார்கள்.

தமிழ்நாடு அரசால் 1,695 கோடி காப்பீட்டு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டது.
6.77 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 783 கோடி இழப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை, மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது ஏற்கனவே இரண்டு சிறு தானிய மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கம்பு கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்து கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும்.


கம்பு குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவைக்கும் விவசாயிகளுக்கு 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நியாய விலை கடைகளில் கேழ்வரகு கம்பு போன்ற தானியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முதற்கட்டமாக தர்மபுரி நீலகிரி மாவட்டங்களில் கம்பு கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள் வழங்கப்படும்.
60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்புக்கு ஒரு 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வட்டார அளவில் விவசாயிகள் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ள whatsapp குழு அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் தெரிவித்தார்.

கிராம பஞ்சாயத்துகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தல 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.
இயற்கை உரம் தயாரிக்க கட்டமைப்புகள் உருவாக்கப்படும் கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை அதிகரிக்க 2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் பட்டதாரிகள் 200 நபர்கள் தேர்ந்தெடுத்து புதிதாக தொழில் தொடங்க 5 லட்சம் நிதி வழங்கப்படும்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க 26 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த இயற்கை விவசாயிக்கு நம்மாழ்வார் பெயரில் விருது ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் தமிழ்நாடு முழுவதும் 14,500 ஹெக்டரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள 750 தொகுப்புகள் உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மேலும்
தமிழ்நாடு அரசின் சீரிய நடவடிக்கையால் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் ஆக அதிகரிப்பு.
இரண்டே ஆண்டில் 150000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5.3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழாண்டு 127 லட்சம் மெட்ரிக் டன் பயிர் உற்பத்தி செய்ய இலக்கு
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் ரகம் பாதுகாப்பு இயக்கத்திற்கு 50 லட்சம் ஒதுக்கீடும்,
சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க 82 கோடி ஒதுக்கீடு.
கூடுதலாக 50,000 ஏக்கரில் சிறுதானிய உற்பத்தி செய்ய நடவடிக்கை.
சிறுதானியங்களை பயன்படுத்தி மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிக்க மானியம் வழங்கப்படும்.


5 மாவட்டங்களில் சிறுதானிய மண்டலங்கள் விரிவாக்கப்படும்.
முதலமைச்சரின் சிறுதானிய இயக்கம் 25 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
நியாய விலைக் கடைகளில் கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் விநியோகிக்கப்படும்.
முதல் கட்டமாக தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் இத்திட்டம் தொடக்கம்.
மாநிலம் முழுவதும் சிறுதானிய விழாக்கள் நடத்தப்படும்.
செளசெள, பட்டாணி, பீன்ஸ் காய்கறிகளுக்கு மானியம்.
செளசெள, பட்டாணி, பீன்ஸ் போன்ற குளிர்கால காய்கறிகளின் சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும்.
கருவேப்பிலை சாகுபடியை அதிகரிக்க 5 ஆண்டுகளில் 1,500 ஹெக்டேரில் செயல்படுத்த ரூ.2.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட வாழைக்கு தனி அடையாளம் உருவாக்கிட ரூ.130 கோடியில் தனி திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
23 லட்சம் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம்
23 லட்சம் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.6,536 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் விவசாயிகளுக்கு ரூ.14,000 கோடி கூட்டுறவு கடன் வழங்கப்படும்.
25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
வைகை, மேட்டூர் அணைகளை மேம்படுத்தி பராமரிக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருக்கும் வேளாண் தொழில்நுட்பங்களை நம் மாநில விவசாயிகளும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு புதிய திட்டம் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 முன்னோடி விவசாயிகளை தேர்வு செய்து, அவர்களை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பனை மேம்பாட்டுத் திட்டம்; பனை சாகுபடியினை ஊக்குவித்து, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு.
உயர் ரக தொழில்நுட்பத்தை அறிந்துகொள்ள 150 விவசாயிகளை இஸ்ரேல், நெதர்லாந்து, தாய்லாந்து, எகிப்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

பட்டாணி, பீன்ஸ் உள்ளிட்ட குளிர்கால காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு
ட்ரகன் ப்ரூட், அவகேடா, லிச்சி பழங்களை 1000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
1000 ஹெக்டேரில், பேரீட்சை, அத்தி பயிர்களை சாகுபடி செய்ய பயிற்சி - ரூ.2 கோடி ஒதுக்கீடு.
ஒவ்வொரு கிராமத்திலும் 300 வேளாண் குடும்பங்களுக்கு பல்லாண்டு பழச் செடி தொகுப்பு வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக கல்வித் துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு பண்ணை சுற்றுலா செயல்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.


நுண்ணீர் பாசனம் நிறுவதற்கு ₹450 கோடி ஒதுக்கீடு
முந்திரி சாகுபடியை கூடுதலாக 550 எக்டர் அதிகரிக்கவும், வயது முதிர்ந்த, விளைச்சல் குறைந்துள்ள முந்திரி மரங்களை அகற்றி, உயர் விளைச்சல் ரக செடிகளை 500 எக்டரில் நடவுசெய்து புதுப்பிக்கவும் நடவடிக்கை.
பாரம்பரிய நெல் வகைகளை உருவாக்க மற்றும் பராமரிக்க 200 ஏக்கர் பரப்பளவில், விதை உற்பத்தி செய்து மானிய விலையில் விநியோகிக்க ₹50 லட்சம் ஒதுக்கீடு,

பண்ருட்டி பலாவிற்கு ஒருங்கிணைந்த தொகுப்பு அமைத்து, பகுதிகளுக்கு ஏற்ப பலா ரகங்களை அறிமுகம் செய்து, கடலூர், கன்னியாகுமரி, உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பலா சாகுபடியினை 5 ஆண்டுகளில் 2500 ஹெக்டேரில் உயர்த்திட ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு.
பலாவில் புதிய ரகங்கள், உயர் மகசூல், மதிப்பு கூட்டும் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்காக கடலூர் மாவட்டம் பாலூர் காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் பலா ஆராய்ச்சி.
மாடு, ஆடு, தேனி வளர்ப்பு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள ரூ.50 கோடி நிதியுதவி மற்றும் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

3-4 கிராமங்களுக்கு ஒரு வேளாண் விரிவாக்க அலுவலர் நியமனம்; ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு வேளாண் விஞ்ஞானி நியமனம்.
நெல் ஜெயராமன் மரபுசார் நெல் இரகங்கள் உற்பத்திக்கு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு
4300 ஹெக்டேரில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது; மதுரை மல்லிகை இயக்கத்துக்கு ரூ7 கோடி ஒதுக்கீடு
கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ195 ஊக்கத் தொகை; கூட்டுறவு சர்க்கரை ஆலை கழிவுகளில் இயற்கை உரம் தயாரிக்க ரூ3 கோடி நிதி.
ரூ. 33 கோடியில் எண்ணெய் வித்துக்களுக்கான சிறப்பு மண்டலம் திட்டம்.
உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம்-2.0 செயல்படுத்தப்படும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கருவேப்பிலை தொகுப்பு.
ரூ. 12 கோடியில் பருத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கை.
சேலம், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் கழிவு மண்ணிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட இயற்கை உரம் தயாரிக்க ₹3 கோடி நிதி ஒதுக்கீடு.
தக்காளி மற்றும் வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க நடவடிக்கை.
தக்காளி ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ.19 கோடி ஒதுக்கீடு; வெங்காயம் ஆண்டு முழுவதும் சீராக கிடைக்க ரூ. 29 கோடி ஒதுக்கீடு.


தேனி, திண்டுக்கல்,கரூர், தூத்துக்குடி, திருப்பூர், அரியலூர், மதுரை மாவட்டங்களை உள்ளடக்கி முருங்கை ஏற்றுமதி மண்டலத்தில் 1000 எக்டரில் சாகுபடியினை உயர்த்திட ரூ.11 கோடி ஒதுக்கீடு.
மிளகாய் மண்டலம்
இராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் மிளகாய் உற்பத்தியை அதிகரித்திட மிளகாய் மண்டலம் அறிவிப்பு.

60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ₹15 கோடி செலவில் வழங்கப்படும்.
பருவத்திற்கு ஏற்ற பயிர் தொழில்நுட்பம் பற்றிய தகவல்களை உழவர்களுக்கு பகிர்வதற்காக விவசாயிகளை ஒருங்கிணைத்து கிராம வேளாண் முன்னேற்ற குழு அமைக்கப்படும்.
உழவர் நலன் சார்ந்த தகவல்களை கணினி மயமாக்கி GRAINS (One Stop Solution) இணையதளம் அறிமுகம்.
வரும் ஆண்டில் 37 மாவட்டங்களில், 385 வேளாண் வட்டார மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை அமல்படுத்தப்படும்.
சூரியகாந்தி, எள், நிலக்கடலை, சோளப் பயிர் சாகுபடியைப் பரவலாக்க ரூ.33 கோடி ஒதுக்கீடு.
நெல்லுக்கு பின்னான பயிர் சாகுபடிக்கு ரூ.24 கோடி மானியம்.



நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும்.
"சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்; ரூ.82 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்"
"தரிசு நிலங்களை கண்டறிந்து மா, பலா, கொய்யா நட நடவடிக்கை எடுக்கப்படும்"
"சந்தனம், செம்மரம், தேக்கு போன்ற உயர் ரக மரக்கன்றுகள் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் நடப்பட்டுள்ளன"
மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக இருக்கலாம்.
2,504 கிராம பஞ்சாயத்துகளில் தென்னங்கன்று இல்லாத குடும்பங்களுக்கு தலா 2 தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.
கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு.
கேழ்வரகு, கம்பு போன்றவற்றை நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் சிறுதானியங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள குடும்பத்தினர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படும்
வேளாண் பட்டப்படிப்பு பயின்ற இளைஞர்கள், 200 பேருக்கு வேளாண் சார்ந்த தொழில் தொடங்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு.
வரலாறு காணாத அளவில் நேரடி நெல் கொள்முதல் அதிக அளவில் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவைகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை.
தமிழ்நாடு அரசால் ₹1695 கோடி காப்பீடு கட்டணம் மானியமாக வழங்கப்பட்டு, 6.77 லட்சம் விவசாயிகளுக்கு ₹783 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது”
கடந்த 2 ஆண்டுகளில், 1.5 லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
127 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு
2504 ஊராட்சிகளில் ரூ230 கோடியில் தானிய உற்பத்திக்கான திட்டம் செயல்படுத்தப்படும்
15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்:
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் - ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க ரூ.82 கோடி நிதி ஒதுக்கீடு.
கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்.
ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளின் நிலங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் இணைப்பு வழங்கப்படும்"
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் 2021-22ல் 40.74 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 26 லட்சம் விவசாயிகள் பதிவு செய்தனர்.
2021-22ல் வேளாண் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தியதால் 1,930 ஹெக்டேர் வியசாய பரப்பு அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 63.48 லட்சம் ஹெக்டேராக சாகுபடி பரப்பு அதிகரித்தது
மகசூலை அதிகரிப்பதே இலக்கு"..
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மகசூலை அதிகரிப்பதே இலக்கு


கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெள்ளம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டைமலை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற 730 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது
கடலூர் கோட்டைமலை கத்திரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு பெற ₹30 லட்சம் மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் அடிப்படை தகவல்களை சேகரித்து, ‘GRAINS' இணையதளம் அறிமுகப்படுத்தப்படும்; இதன்மூலம் விவசாயிகளுக்கு ஒரே தளத்தில் எல்லா பயன்களும் கிடைக்கும்
வேளான் பட்ஜெட் தாக்கலில் 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை- செங்கரும்பு
தூத்துகுடி- விளாத்தி குளம் மிளகாய்
சிவகங்கை- கருப்பு கவுணி அரிசி
தஞ்சாவூர்- பேராவூரணி தென்னை, வீரமாங்குடி அச்சு வெல்லம்
கடலூர்- கோப்டிமுனை கத்திரி
விருதுநகர்- சாத்தூர் வெள்ளரி
கரூர்- மூலனூர் குட்டை முருங்கை
கிருஷ்ணகிரி- பன்னீர் ரோஜா, அரசம்பட்டி தென்னை,

பள்ளி மாணவர்களுக்கு பண்ணைச் சுற்றுலா - ₹ 1 கோடி நிதி ஒதுக்கீடு
வேளாண்மையின் மகத்துவத்தை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ள கல்வித்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். என்பது உள்ளிட்ட மேலும் பல்வேறு திட்டங்கள் இன்று தாக்கள் செய்த வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்தது.

தி.மு.கழக கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள். விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், அரசியல் பார்வையாளர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையினர், இன்றைய வேளாண் பட்ஜெட்டை பாராட்டி வரவேற்றுள்ளார்கள்.
முன்னதாக பேறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி வந்தபின்னர், தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின்முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.




Comments