top of page
Search

சிறுபான்மை மக்களின் காயங்களை குருதி கொண்டு கழுவமுயலும் அதிமுக-பா.ஜ.க!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Feb 24, 2023
  • 2 min read
ree

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலம், சிறுபான்மை மக்களை, காயங்களை குருதி கொண்டு கழுவும் முயற்சியை அதிமுக- பா.ஜ.க. முன்னெடுத்துள்ளதா?


சமூக வளைதள சிந்திக்கத் தூண்டும் ஓர் கட்டுரை!


மிக பரிதாபமாகதான் எண்ணுகிறேன் .. உண்மையில் சமுதாய மேம்பாடெல்லாம் இவர்கள் லட்சியம் இல்லை .. பேசுபொருளாக வேண்டும் என்பதே இவர்களின் ஆசை எண்ணம்,.. ஆனால் எதற்கெடுத்தாலும் திமுக எதிர்ப்பை காட்டி சொரிந்துக்கொள்கிறார்கள் ..

திமுக ஏமாற்றிவிட்டதாம் ..

..

இன்றைக்கு தமிழகத்தில் முஸ்லிம் சமுதாய மக்கள் கல்வி வேலைவாய்ப்பில் அதிகரிக்க காரணமாக இருந்தது உள்ஒதுக்கீடு அதை தந்தவர் கலைஞர் கடுமையாக எதிர்த்தவர்தான் ஜெயலலிதா .. ஆனால் ஜெயலலிதா நல்லவர் .. இவர்கள் திமுக மீது சொல்லும் காரணம் கோவை குண்டுவெடிப்பும் அதனால் பாதிக்கபட்டவர்கள் விடுதலையிலும் பாராமுகமாக திமுக இருக்கிறது விடுதலையை எதிர்க்கிறது என்கிறார்கள் ..

முறையாக நீதிமன்றத்தை அணுகி நிறைய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி தொடர்ந்து வாதிட்டிருக்கலாம் .. பேரறிவாளன் வழக்கு ஒன்றே போதும் எப்படி தொடர்ந்து நீதிமன்ற படிகட்டுகளில் ஏறிஇறங்கினர் .. ஆனால் இங்கே அரசை குறைச் சொல்லிக்கொண்டு "சொகுசு" வாழ்க்கை வாழ்கிறார்கள் ..

ஆரம்பகாலங்களில் பல இடங்களில் வெளிநாடுகளில் கூட வசூல் செய்தார்கள் அவையெல்லாம் என்னானது வழக்கிற்காக செலவிடபட்டதா என்பதெல்லாம் விடை தெரியா கேள்விகள் ..

..

சரி விடயத்திற்கு வருவோம் .. கர்நாடகாவில் "இஜாப் " பிரச்சனைக்கு திமுக குரல் கொடுக்கவில்லையாம் .. இங்கே இஜாப் கட்ட தடை போட்டதா என்ன.. இவர்கள் வைக்கும் குற்றசாட்டுகள் ஒன்று கூட லாஜிக் இல்லாதது .. காலங்காலமாக திமுகவை ஆதரித்தோம் என்கிற பழைய பல்லவி .. அதில் கூட உண்மையில்லை மாறி மாறி சவாரி செய்த வரலாறும் உண்டு முஸ்லிம்லீக்கை உடைத்தார் .. உங்கள் சகோதர யுத்தம் இன்னும் பச்சையாக சொல்லபோனால் அவரும் நானும் சமமா என்கிற மனப்பான்மை பிரிவு வரை வந்தது இன்றைய இயக்கங்களின் எண்ணிக்கை 50 ஐ தொடும் இதெல்லாம் திமுகவால் அல்ல உங்கள் ஈகோ அதைவிட பதவி ஆசை சமுதாய நலன் எல்லாம் இல்லை தங்களின் நலன் பதவி புகழ் இவைதானே தவிர வேறு காரணம் தேடுவது அறியாமையை காட்டுகிறது

..

இஸ்லாமிய சமுதாய இளைஞர்களை உணர்ச்சி மேலிடும் பேச்சால் "கலவரத்தில்" நிறுத்தியதில் பெரும்பங்கு இன்றைய நவீன இஸ்லாமிய இயக்கங்களுக்கு உண்டு .. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கிய சமூகத்தை இத்தனை இயங்கங்கள் இருந்தும் உயரத்தில் ஏற்றிட என்ன செய்தது என்ற கேள்விக்கான விடை ..?

..

நவீன இஸ்லாமிய இயக்கவாதிகள் திமுகவை எதிர்ப்பு என்ற நோய் சீழ் பிடித்திருக்கிறது .. இந்து முன்னணியை வர காரணமான எம்ஜிஆர் முஸ்லிம்களுக்கு ஒரு "லீக்" இருக்கும்போது இந்துகளுக்கு இருக்க கூடாத என கேட்வர்

இடஒதுக்கீட்டை எதிரித்தவர் ஜெயலலிதா இவர்களுக்கு தேன்மிட்டாய் .. இந்திய குடியுரிமை சட்டதிருத்தத்தை வெளிநடப்பு செய்து வர காரணமாக இருந்த அடிமைகள் இவர்களை மௌனமாக கடந்து செல்வார்கள் .. ஆனால் கர்நாடகவிலே ஹிஜாப் தடைக்கு திமுக ஏன் கேள்வி எழுப்பவில்லையென கத்துவார்கள்

..

ஒரு உண்மையை இவர்கள் உணர்வதே இல்லை .. இறுக பற்றிபிடித்தாலே விழமாட்டோம் என்கிற சிறிய புரிதல் கூட இல்லை .. பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமானாலும் வால் பிடிப்போம் என்கிற புத்தி சமூகத்தின் சாபகேடு .. எதற்கித்தனை பிரிவுகள் /இயக்கங்கள் .. ஏன் ஒற்றுமையாக இல்லை .. நூற்றாண்டு காணும் முஸ்லிம்லீக் அதன் பின்னால் அணிவகுக்க என்ன தயக்கம்

கருத்துவேறுபாடுகள் களைந்து பதவிபுகழ் ஆசையை துறந்து சமுதாய மேம்பாடு ஓன்றே லட்சியமாய் ஏன் ஒருங்கிணைய கூடாது .. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என படித்தது ஞாபகம் வரவில்லையா .. சமுதாய சீரழிவிற்கு காரணமாய் இருப்பது நாம் தான் என உரைக்கவில்லையா ..

..

நீங்கள் ஒருங்கிணைந்து நின்றால் பெரும் கட்சிகள் வந்து வாசல் நிற்குமே .. உங்கள் கோரிக்கைகளை உடன் செயலாகுமே .. கல்வி வேலைவாய்ப்பு உரிமைகள் யார் தயவுமின்றி கிடைக்குமே ஆனால் இஸ்லாமியர்கள் பிரிந்து கிடப்பதுதான் பாசிச இந்துத்துவாவாதிகளுக்கு தேவை அடித்தமர்த்த இலகுவாகும் ..

அதை செய்ய பெருந்திட்டதோடு காய் நகர்த்துகிறாக்கள் .. அதில் "பலியாய் " இயக்க முன்னோடிகள் விழுகிறார்கள் .. உங்களை பிரிக்க வேறாரும் தேவையில்லை .. அறிவில் சிறந்த சமூகம் இன்று அடிமாடாய் நிற்பதற்கு சிலரின் "சுயம்" மேம்பாடே என்ற ஒற்றை காரணம் தவிர வேறில்லை

..

இன்றைய காலகட்டத்தில் திமுக ஒன்றே பாதுகாவலாக நிற்கிறது.. சாதிய இயக்கங்களோ அல்லது உதிரிகட்சிகளோ பலமற்று போன பொதுவுடமைவாதிகளாலோ பயனில்லை .. உணர்ச்சி வயப்படும் இளைஞர்களை கூர்தீட்டவே உதவுமே தவிர உன்னத பாதையை உயர்வுக்கான பாதையை அது தராது .. தி.மு.கழக எதிர்ப்பென்பது பிழைப்பு, சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் அரிப்பிற்கு சொரிதல் மாத்திரமே ..

உண்மையில் பெருபான்மையில் சமூகநீதியில் சிறுபான்மையினர் நலனில் பகுத்தாய்ந்து நலம்பயக்கும் அரசை தந்துக்கொண்டிருக்கிற தி.மு.கழகத்தை வீழ்ந்த நினைக்கும் பாஜகவின் கரங்களை வலுப்படுத்த உதவுமே தவிர வேறெந்த பயனுமில்லை பலனுமில்லை ..

..

காயத்தை குருதியைக் கொண்டு கழுவாதீர்கள்.....

மௌலானரூமி


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page