ஆலங்குடி,பாலன்நகர், மன்றத்திற்கு சிறந்த இளையோர் விருது! திருநாவுக்கரசர் எம்.பி. வழங்கி பாராட்டினார்!
- உறியடி செய்திகள்

- May 26, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா...
நேரு யுவகேந்திரா சார்பில் பாலன் நகர் இளைஞர் மன்றத்திற்கு திருச்சி எம்.பி.திருநாவுக்கரசு விருது வழங்கினார்!.
புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திரா உடன் இணைந்து செயல்படும் இளைஞர் மன்றங்களில் சிறந்த சேவை புரிந்த இளைஞர் மன்றத்தை சேவையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து மாவட்ட அளவிலான சிறந்த இளையோர் மன்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான தேர்வு குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் மன்றத்திற்கு நேரு யுவகேந்திரா சார்பில் ரூ.25000 ரொக்க பரிசுடன் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது அந்த வகையில் கடந்த ஆண்டில் மாவட்டத்தின் சிறந்த இளைஞர் நற்பணி மன்றமாக பாலன் நகர் இளைஞர் நற்பணி மன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை நேரு யுவகேந்திராவின் சார்பில் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வழங்கினார்கள்.




Comments