அம்பேத்கார் நினைவு நாளில்! நாட்டின் ஒற்றுமை காக்க சபதமேற்ப்போம்!! கனிமொழி கருணாநிதி. வலியுறுத்தல்!!!
- உறியடி செய்திகள்

- Dec 6, 2022
- 2 min read

மணவை.எம்.எஸ்.ராஜா Sa
டிசம்பர் 6..டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள்....
அனைத்து மக்களின் முன்னேற்றம். நாட்டின் வளர்ச்சி பாதுகாப்பு, வாழ்வதாரம் காத்திட சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கார் பாதையை பின்தொடர்வோம் என்று தி.மு.கழக துணைப்பொதுச்செயலாளர், கவிஞர் கனிமொழிகருணாநிதிஎம்.பி.
வலியுறுத்தியுள்ளார்.......

1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதியன்று நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.தலைமை.யிடம் அமைந்துள்ள ஊர்) டாக்டர் அம்பேத்கரின் தலைமையில் லட்சக்கணக்கான மக்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறி புத்த மதத்தை தழுவினார்கள். இந்திய அரசியலிலும் இந்திய சமூகத்திலும் மிகப்பெரிய அதிர்வலைகளை, ஏற்படுத்திய இந்த இம்மாபெரும் நிகழ்வு நடந்து முடிந்த 52 ஆவது நாளில் திடீரென மர்மமான முறையில் அண்ணல் அம்பேத்கர் மரணமடைந்தார்.....

ஆரிய பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருந்தும் தீண்டாமைக் கொடுமையில் இருந்தும் விடுபட வேண்டுமென்றால் இந்து மதத்தில் இருந்து வெளியேறி தன்னை பின்பற்றி புத்த மதத்துக்கு மாறுங்கள் என நாடு முழுவதும் மக்களிடம் தீவிரமாக அம்பேத்கர் பிரச்சாரம் செய்து வந்த சூழ்நிலையில் திடீரென மர்மமான முறையில் அவர் மரணமடைந்தார்.
பிராமணர்கள் (ஆர்.எஸ்.எஸ்.) சூழ்ச்சி செய்து அம்பேத்கரை கொன்று விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து கொண்டு வருகிறது. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திடீர் மறைவு குறித்து தந்தை பெரியார் விடுதலை பத்திரிக்கையில்
அம்பேத்கரின் மறைவு என்னும் செய்தி திடீரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து அவரது மரணத்துக்குப் பின்னால் சில ரகசியங்கள் இருக்கலாம் என கருதுகிறேன். அதாவது காந்தியார் மரணத்துக்கு உண்டான காரணங்களும் அதற்கு ஆதாரமான சங்கதிகளும் டாக்டர் அம்பேத்கரின் மரணத்துக்கும் இருக்கக் கூடும் என்பதே ஆகும்.என்றுபெரியார் வெளிப்படையாகவே ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மீது குற்றம் சாட்டினார்......
டாக்டர் அம்பேத்கர் மேலும் சில ஆண்டுகள் உயிருடன் இருந்து திட்டமிட்டபடி தனது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டிருந்தால் இந்து மதத்தை வைத்து அரசியல் சதிசெய்யும் பிராமணர்களின் (ஆர்.எஸ்.எஸ்.)ஆதிக்கத்தை முற்றிலும் தகர்த்திருப்பார். அம்பேத்கரது திட்டம் முழுமையாக செயல்படுத்தப் பட்டிருந்தால் இன்று இந்தியாவை ஆட்டிப்படைக்கும் இடத்துக்கு பிராமணர்கள் (ஆர்.எஸ்.எஸ்) வந்திருக்கவே முடியாது.
இன்றைய சூழ்நிலையில் இருந்து பார்க்கும் போது பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சந்தேகித்தபடி அம்பேத்கர் அவர்களது மர்ம மரணத்தில் பிராமணர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ்.) நெருங்கிய தொடர்பு நிச்சயம் இருக்கும் என்பதை தெளிவாக உணர முடியும். பாசிச ஆர்.எஸ்.எஸ். பாஜக கும்பலின் பிடியில் இருந்து இந்திய சமூகத்தை விடுவிக்க வேண்டுமென்றால் அண்ணல் அம்பேத்கரின் சீர்மிகு கருத்துக்கள், கொள்கைகள், சட்டவடிவங்கள்,

முழுமையாக கடைபிடிப்பதன் மூலம்தான், இந்திய ஒன்றியம் ஏற்றதாழ்வு இல்லாத அனைவருக்குமானதாக திகழும் என்று பல தலைவர்கள் கூறியும் வருகின்றார்கள்.
இந்நிலையில் இந்த. புதுதில்லியில். நாடாளுமன்ற நடவடிக்கைகள், மக்களுக்கான, ஜனநாயக கடமையாற்றச் சென்றுள்ள, தி.மு.கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர், நாடாளுமன்ற தி.மு.கழக குழுத் துணைத் தலைவர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி எம்.பி. தனது சமூக இணைய பக்கத்தில் டாக்டர் அண்ணல் அம்பேத்கார் நினைவு நாளான இன்று, சட்டமாமேதை புரட்சியாளர் அம்பேத்காரின் கொள்கைகளை பற்றி, தொடர்ந்து பயணித்து அனைத்துத்தரப்பு மக்களின் முன்னேற்றம் பாதுகாப்பிற்கு துணை நிற்ப்போம் என்று பதிவிட்டுள்ளார்.




Comments