அமித்ஷா தமிழக வருகையும் - அதிரடி கருத்துக் கணிப்பு முடிவுகளும்! கர்நாடகா கண்டம் தொடர்கிறதா?
- உறியடி செய்திகள்

- Jun 12, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா....
அமித்ஷா தமிழக வருகையும் - தனியார் தொலைகாட்சியின் பகீர் கிளப்பும் கருத்து கணிப்பும்!
2024. நாடாளுமன்ற தேர்தல் பிரதமர் ராகுலா! மோடியா!!
கருத்துகணிப்பு ஆதரவு யாருக்கு?
அமித்ஷா தமிழக வருகையும் - அதிரடி கருத்துக் கணிப்பு முடிவுகளும்! கர்நாடகா கண்டம் தொடர்கிறதா?
தமிழ்நாட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து சென்ற உடன் பிரபல தனியார் தமிழ் தொலைகாட்சி பிரதமர் பதவி தொடர்பான கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.!
லோக்சபா தேர்தல் ஜூரம் தமிழ்நாட்டிலும் அனலடிக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் தன்னிச்சையாகவே சில தொகுதிகளை டார்கெட் செய்து களப் பணிகளை தொடங்கி இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தென்சென்னை- வேலூர் லோக்சபா தொகுதிகளை டார்கெட் செய்து ஆலோசனைகள் நடத்தினார்.
வேலூரில் தேர்தல் பிரசாரத்தையும் அமித்ஷா மேற்கொண்டார். அமித்ஷாவின் இந்த பிரசாரம் பாஜகவினருக்கு உற்சாகத்தை கொடுத்தாலும் பல்வேறு சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டிருக்கிறது.

அமித்ஷா நேற்றுதான் தமிழ்நாடு வந்து சென்றுவிட்டு திரும்பினார். இந்நிலையில் பிரபல தமிழ் தொலை காட்சியில்தமிழகத்தில் லேசாக எகிறும் மோடி 'கிராப்' - கருத்துக்கணிப்பில் வித்தியாச முடிவுகள்" என்ற தலைப்பில் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது.! சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது!
இந்த கருத்து கணிப்பு தமிழ்நாடு, புதுச்சேரியில் 2,500 பேரிடம் எடுக்கப்பட்டதாம். இக்கருத்து கணிப்பில் நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இந்தியாவின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என 71% ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக 27% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதர என்ற பிரிவில் 2% கருத்து தெரிவித்துள்ளனர். என்று பரப்பு அதிரடி தகவல்கள் வெளிவந்ததாக கூறப்படுகின்றது!
அதாவது அமித்ஷா தமிழ்நாட்டு வந்து சென்ற பின்னர் வெளியிடப்பட்ட இக்கருத்து கணிப்பிலும் பாஜக மீது கடும் அதிருப்தி இருப்பது இதன்மூலம் வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
அதனால் பிரதமர் மோடிக்கு வெறும் 27% மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.




Comments