கர்நாடகா தோல்வி தெரிந்துதான் அண்ணாமலை முன்னரே பிரஸ்மீட்! நடிகை காயத்திரி பரபரப்பு குற்றசாட்டு!!
- உறியடி செய்திகள்

- May 14, 2023
- 2 min read

பாஜக தோல்வி.. குஷியான காயத்ரி.. அண்ணாமலையின் "கர்நாடகா ஸ்டோரீஸ்" - ட்விட்டரில் மணிக்கு ஒரு சீண்டல்!
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக படுதோல்வியை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் நிலையில், மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை, தக்க நேரம் பார்த்து விமர்சித்து வருகிறார் நடிகை காயத்ரி ரகுராம்.
கர்நாடகாவில் கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரையிலான வெற்றி நிலவரப்படி காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட அதிகமாக 136 தொகுதிகளில் முன்னிலையிலும்
ஆளும் பாஜக வெறும் 64 தொகுதிகளிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளிலும், இதர வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றார்கள். இந்த தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்தித்து இருக்கும் சூழலில்,
அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை, ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார் நடிகை காயத்ரி ரகுராம்.
இந்த நிலையில் பாஜக முன்னாள் நிர்வாகியும் நடிகையுமான காயத்ரி ரகுராம், அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அதில், "கோழை இன்று பிரஸ்மீட்டைத் தடுக்க பிரஸ்மீட்டை நேற்றே முடித்தார். கர்நாடக தேர்தல் கேள்விகளுக்குப் பதிலாக திமுக ஃபைல்ஸ் ஜூலை ரிலீஸ், பி.டி.ஆர் அமைச்சர் பதவி பற்றி அவர் உருண்டார்.
திமுக ஃபைல்ஸ்களுக்கு பதிலாக 40% கமிஷன் ஊழல் கர்நாடகா ஃபைல்ஸ் பற்றி பத்திரிகைகள் கேள்வி கேட்டால் என்ன ஆகும்?" என்றும் கேள்வி எழுப்பி இருந்தார்.
மற்றொரு பதிவில், "ரெட் ஜெயண்ட் "கேரளாஸ் டோரிஸ்" உரிமையை மட்டும் வாங்கவில்லை. அண்ணாமலையின் கர்நாடக ஸ்டோரிஸ்யும் வாங்குவார்கள்." என்று பதிவிட்டு உள்ளார்.

அதே போல், "நேற்று இரவு அண்ணாமலையின் டயபர்ரூம் பாய்ஸ் ட்விட்டர் ஸ்பேஸில் பேசியவர்கள் எங்கே? வாங்க பாய்ஸ். உங்கள் முகங்களைக் காட்டு." என்று அடுத்த பதிவை வெளியிட்டு இருந்தார். அதேபோல், "கர்நாடகா ரிசல்ட் மெதுவாக வருகிறது இப்போ தேர்தலுக்கு விளம்பரம் ஹெலிகாப்டர் வரவேற்புக்காக மலர்கள் குவிந்த கூட்டம் அதிக செலவு செய்த பிறகு எல்லாம் வீணாகிவிட்டது.
மேனேஜர் அதைச் சரியாகச் செலவழித்தாரா அல்லது தனக்காக எடுத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.
இப்போ எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம். இதுதான் ஒரே வழி." என்று அடுத்த பதிவை வெளியிட்டு உள்ளார்.
அவர் வெளியிட்டு இருக்கும் அடுத்த பதிவில், "நட்சத்திர பிரச்சாரகர், பெருமைமிக்க கனடிகா வளர்ப்பு மகன், மலிவான அரசியல்வாதி தனது மலிவான அரசியலுக்காக மக்களால் தூக்கி எறியப்படுவார். அரசியலில் இருந்து மட்டுமல்ல, (தென் இந்தியா) திராவிடத்தில் இருந்தும் தூக்கி எறியப்படுவார்." என்று பதிவிட்டு இருக்கிறார்.

டெய்சி - சூர்யா சிவா இடையிலான கொச்சையான ஆடியோ தொடர்பாக விமர்சித்ததற்காக காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்ததன் விளைவாக இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதை தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக ட்விட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.




Comments