எடப்பாடி-அன்கோவுக்கு மேலும் ஒரு இடியா! அதிமுக.ஆட்சியில் துணைவேந்தர் பதவி ரூ 50 கோடிக்கு விற்பனையா!!
- உறியடி செய்திகள்

- Oct 23, 2022
- 1 min read

அதிமுக, ஆட்சியில்,தமிழ்நாட்டில் பல்கலை துணைவேந்தர் பதவி விற்கப்பட்டது.
பன்வாரிலால் புரோகித் கடும் குற்றசாட்டு!
தமிழ்நாட்டின் முன்னால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டார்....
பஞ்சாப் ஆம் ஆத்மி, அரசுக்கும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கும் கடும் பனிப்போர் நடந்துவருகிறது....
பஞ்சாப் ஆம்ஆத்மி அரசை கடுமையாக,விமர்சித்து பேசிய கவர்னர் பன்வாரிலால் புரோகித்...
தமிழ்நாட்டில் 4. ஆண்டுகள் கவர்னராக நான் செயல்பட்டுள்ளேன்.அப்போது தமிழக பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் பதவி ௹ 50 கோடி என பேரம்பேசி விற்கப்பட்டது. 27. பல்கலைகழகங்களுக்கு நான் கவர்னராகயிருந்தபோது அங்கு நியமனம் செய்துள்ளேன்.

ஊழலைகளையடுக்க நான் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன். கல்வித்துறையை தூய்மை படுத்த மேற்கொண்ட முயற்சிகளை பார்த்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை பாராட்டியுள்ளார். பஞ்சாப் அரசு, தமிழ்நாட்டின் அரசிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நான் அரசியல் சாசனப்படி செயல்படுபவன், நெடிய அனுபவம் கொண்டவன்.என்னிடம் பலர் ஆலோசனைகளை கேட்கின்றார்கள்.
அரசியல் சாசனத்திற்கு மாறாக யாரும் என்னை இயக்க வோ, கட்டளையிடவோ முடியாது.....
என்று கூறிய பன்வாரிலால் புரோகித் தொடர்ந்து பஞ்சாப் மாநில கல்வித்துறை, அரசையும் கடுமையாக விமர்சித்தார்......

ஏற்கனவே உட்கட்சி பிளவு,
ஜெ. மரணம் தொடர்பான நீதியரசர் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை முடிவு, மற்றும் தூத்துக்குடி துப்பாக்கிசூடு தொடர்பான நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை முடிவுகளால் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ள எடப்பாடி பழனிசாமி, தற்போது கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடியாக அளித்துள்ள இந்த பேட்டி யால்,அவருக்கும் - சகாக்களுக்கும் தலையில் மேலும் இடியை இறக்கியது போலாகிவிட்டதாகவும், அதிமுக ஆட்சியில் அமைச்சரவை தனது சகாக்களை கட்டுபடுத்தவும், கண்காணிக்க தவறிவிட்டதாகவும், தொடர்ந்த லஞ்ச, ஊழல், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் சேர்ப்பு, அரசுக்கு நிதியிழப்பு சேகர் ரெட்டி டைரி, குட்கா ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளும்,வலுப்பெறும் வகையில் எடப்பாடி- சகாக்களுக்கு நெருக்கடிகள் தொடரவே செய்யும் என்றும் அரசியல் பார்வை பார்வையாளர்கள், விமசர்கர்கள் வட்டாரத்தில் பரப்பானபேசும் பொருளாகியுள்ளது....
கட்டம் சரியில்லையோ!




Comments