35 வயதை கடந்தஎவரும் ஆளுநராகலாம்! அறிவாளி என நினைத்து உளற வேண்டாம்! ஊடகவியாளர் பார்வையில் ஆர்.என்.ரவி
- உறியடி செய்திகள்

- Apr 7, 2023
- 3 min read

B.R.அரவிந்ததாஷன்.
ஊடகவியாளர்...
பதிவிலிருந்து.....
கண்டதை உளறுவது ஆளுநருக்கு அழகல்ல !
35 வயதுக்கு மேற்பட்டவர்களை நியமிக்கலாம்.ஆர்.என்.ரவி. அறிவாளி என்றா நியமிக்கபட்டார்?
================================
இந்தியாவின் Premier Intelligence Agency-யான IB,CBI உள்ளிட்ட பல சவாலான பணிகளை செய்து Deputy National Security Advisor
ஆக செயல்பட்டவர் தான் ஆளுநராக இருக்கும் திரு.R.N.Ravi
18-09-21-ல் தமிழ்நாட்டின் 26-வது ஆளுநராக நியமிக்கப்பட்ட தினத்தில் இருந்தே வாய்க்கு வந்ததையெல்லாம் உளறிக்கொண்டு வரும் திரு.ரவி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் பேசியிருக்கும் பேச்சு அபத்தத்தின் உச்சம் மட்டுமல்ல
ஜனநாயகத்தின் கூறுகளை செருப்பால் அடித்து,இந்த நாட்டில் கொஞ்சமேனும் பிச்சமிருக்கும் உண்மை என்ற ஜட்டியை கிழித்து தொங்கவிட்டுள்ளார்
இப்படி,கடுமையாக எழுதுவதற்கு நான் கொஞ்சமும் தயங்கவில்லை
ஏன் என்றால்,
இந்தியாவில் பிரச்சனைகளை உருவாக்கி,அமைதியை சிதைத்து,கலவரங்களை ஏற்படுத்தி இந்திய நாட்டின் வளர்ச்சி அந்நிய சக்திகளால் தடுக்கப்படுகிறது
அதற்கு ஒரு உதாரணம் தான் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் என்று கூறியுள்ளார்
அதாவது,தூத்துக்குடியில் மக்கள் நடத்திய ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் 100% வெளிநாட்டு நிதிஉதவியுடன் நடத்தப்பட்டது என்று உறுதிபட மாணவர்கள் மத்தியில் பேசுகிறார்.
சில பிள்ளைகள் அதை ஆமோதிப்பது போல தலையாட்டுகிறார்கள்
இதெல்லாம் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசுகிறார் ?
2018 ம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி குமரெட்டியார்புரத்தில் போராட்டம் தொடங்கி மே-22 ம் 100 நாள் போராட்ட ஊர்வலத்தின் போது தான் துப்பாக்கிச்சூடு நடந்தது.
அப்போது R.N.ரவி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ?
IPS-ஆக பணியாற்றி 2012-ல் பணி ஓய்வு பெற்ற பிறகு
பிரபல நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தவரை மத்திய அரசு அழைத்து,

நாகாலாந்து மாநிலத்தில் இருக்கும் போராளிக்குழுக்களோடு அமைதிப்பேச்சு வார்த்தை நடத்துவதற்கு 2014 ஆகஸ்ட் மாதம் Interlocutor ஆக நியமிக்கிறது.
பிறகு அவர் Oct 2018 -ல் Deputy National Security Advisor ஆகிறார்
இதை எதுக்கு சொல்கிறேன் என்றால்,
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் நடந்த போது நாகாலாந்து போராட்டக்குழுவோடு பேச்சு வார்த்தை நடத்தும் பொறுப்பில் இருந்தார் என்பதை தெளிபடுத்தவே..
வெளிநாட்டு நிதி உதவியோடு தான் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினார்கள் என்று அடித்துக்கூறும் ஆளுநர் R.N.ரவி,
வடகிழக்கு மாநிலங்களில் இப்போது வரை ஆயுதப்போராட்டம் நடத்தி வரும் குழுக்களுக்கு நிதியுதவி செய்வது யார்?
பல ஆண்டுகள் பேச்சுவார்த்தை நடத்தியவர் என்ற அடிப்படையில் அவர்களுக்கு நிதியுதவி அளிப்பது யாரென கூற இயலுமா ?
நாகாலாந்தில் அமைதியை ஏற்படுத்த 2015-ல் ஏற்படுத்தப்பட்ட Framework Agreement ன் படி முன்னேற்றம் இருந்தாலும்,
இப்போது வரை நாகாலாந்து இந்தியாவின் பாகம் இல்லை என்று கூறும் ஆயுதக்குழுக்களுக்கு நிதி உதவி செய்து வருவது எந்த நாடு என்று உங்களால் சொல்ல முடியுமா?
பல ஆண்டுகள் போராட்டக்குழுவோடும், கிளர்ச்சியாளர்களோடும் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்திவர்கள் அதை கண்டுபிடித்திருக்க வேண்டியது அவசியம் தானே !
ஆனால் அப்படி எதையும் கண்டுபிடித்ததாக தெரியவில்லை.
மத்திய அரசாவது கண்டுபிடித்துள்ளதா,அதுவும் இல்லை
சரி என்ன தான்
கண்டுபிடித்தனர் என்றால் !
கேள்வி எண் 1278- மக்களவையில் 09-02-21 அன்று வெளிநாட்டு நிதி உதவியுடன் செயல்படும் NGO-க்கள் உரிமம் எவ்வளவு ரத்து செய்யப்பட்டுள்ளது ?
ஏன் ரத்து செய்யப்பட்டது என்ற கேள்விக்கு உள்துறை அமைச்சகம் பதில் கொடுத்துள்ளது.
அதன் படி,
சரியான கணக்குகள் சமர்ப்பிக்காத காரணத்தால் 2011 to 2021 வரை 20,600 க்கும் அதிகமான அயல்நாட்டு நிதி உதவியுடன் செயல்பட்டு வந்த NGO-க்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
எந்த இடத்திலும்,
அவை நாட்டுக்கு எதிராகவோ,வளர்ச்சியை தடுக்கும் வகையில் பிரச்சனையை உருவாக்கியதாக உள்துறை அமைச்சகம் கூறவில்லை.
அயல்நாட்டு நிதியை பெற்று செயல்படுவதற்கு NGO-க்கள் என்ற அமைப்பை தவிர வேறு வழியில்லை.
ஆனால்,அவை கணக்குகளை சரியாக சமர்ப்பிக்கவில்லை என்ற காரணத்தாலேயே அவற்றின் உரிமம் ரத்தாகியுள்ளது.
அப்படியிருக்க,
பிரச்சனை உருவாக்கி கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று யாரை நோக்கி,
எந்த அமைப்புக்களை அல்லது எந்த அரசியல் கட்சியை நோக்கி குற்றச்சாட்டை வீசுகிறார் ஆளுநர்?
எந்த ஆதாரங்களும் இல்லை தரவுகளும் இல்லை
ஆனால்,தமிழ்நாட்டுக்கு எதிராக,மக்களுக்கு விரோதமாக,
மக்கள் வரிப்பணத்திலேயே நிகழ்ச்சி நடத்தி வாய்க்கு வந்த புரூடாவை அடித்து விடுகிறார் ஆளுநர்.
நியாயமா இது?
சரி..

கலவரங்களுக்கு பின்னால் அந்நிய நாட்டு சதி இருக்கிறது.
இல்லாத பிரச்சனையை உருவாக்கி அமைதியை சிதைத்து வளர்ச்சியை தடுக்கிறார்கள்.
அதுவே இப்போது இந்தியா எதிர்கொண்டு வரும் பிரச்சனை என்கிறார் ஆளுநர் ரவி..
அதில் ஏதாவது உண்மையிருக்கிறதா!?
மத்திய என்ன சொல்கிறது தெரியுமா ?
கேள்வி எண் 4277 மக்களவையில் 29-03-22 அன்று இந்தியாவில் நடந்த கலவரங்கள் மற்றும் கும்பல் படுகொலை குறித்த கேள்வியை
சசிதரூர் MP எழுப்பினார்.
அதற்கு உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ள பதில் என்ன தெரியுமா ?
2016 to 2020 வரையிலான காலத்தில்
இந்தியாவில் 2,76,273 கலவரங்கள் நடந்துள்ளதென உள்துறை அமைச்சம் கூறுகிறது.
அதே 2016-2020 வரையிலான 5 ஆண்டு காலத்தில் 3,399 மதக்கலவரங்கள் இந்தியாவில் நடந்துள்ளதாக ஏதோ ஒரு NGO கூறவில்லை,இந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தான் கூறுகிறது.
அப்படியென்றால்,
இந்தியாவில் சராசரியாக தினந்தோறும் 150 கலவரங்களும்,
தினம் ஒரு மதக்கலவரமும் நடக்கிறதென்று அர்த்தம்
இந்த கணக்கு என்னுடையது அல்ல..
உள்துறை அமைச்சகத்தின் கணக்கு..
அந்த கலவரங்கள் அனைத்தும் அந்நிய நாட்டு நிதியுதவியுடன் தான் நடக்கிறதா
திரு.R.N.ரவி அவர்களே ?
என்ன பேசுகிறீர்கள் புரிந்து தான் பேசுகிறீர்களா இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா உங்களுக்கு ?
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது மக்களின் மீது 243 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது.
அதை ஒரே வழக்காக மாற்றி CBI விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுவரை அந்த வழக்கில் CBI தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் எந்த இடத்திலும் வெளிநாட்டு நிதியுதவியோடு தான் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக போராட்டம்
நடத்தப்பட்டதென குறிப்பிடப்படவில்லை.
தூத்துக்குடி துப்பாச்சூடு தொடர்பாக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி.அருணா ஜெகதீசன் கமிட்டியும் அப்படி எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை
ஆனால் ஆளுநர் R.N.ரவி அடித்து சொல்கிறார் அந்நிய நாட்டு சதியென?
அதுவும், IAS தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில்,தமிழ்நாட்டின் Constitutional Head என்ற உயரிய பொறுப்பில் இருப்பவர் அப்பட்டமான பொய்யை கூச்சமின்றி பேசுகிறார்.
கூடவே இந்நாட்டின் உள்துறை அமைச்சகம்,நிதியமைச்சக கண்காணிப்பு ஏஜென்சிகளின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறார்.
இப்படி கொஞ்சம் கூட பொறுப்பின்றி பொய் பேசுவதற்காக ஆளுநர் ரவி கொஞ்சமாவது வெட்கப்படவேண்டும்..
ஆளுநர் பதவியில் 35-ஐ வயதை கடந்த யாரை வேண்டுமானாலும் நியமிக்கலாம்.
ஆனால்,திரு.ரவி அவர்களே உங்களை பெரிய அறிவாளியென்று நம்பி தமிழ்நாடு ஆளுநராக நியமனம் செய்துள்ளனர்
தயவுசெய்து உங்களை சுற்றி இருக்கும் அறிவாளி என்ற இமேஜை காப்பாற்றிக்கொள்ளுங்கள்
மரியாதைக்குரிய
திரு.ரவி அவர்களே ஆதாரங்கள் இன்றி நீங்கள் அபத்தமாக அடித்துவிடுவதை அப்படியே நம்புவதற்கு இது வடக்கோ அல்லது வடகிழக்கு மாநிலங்களோ அல்ல
இந்த மாநிலத்தின் பெயர்
“தமிழ்நாடு”
உங்களுக்கு எந்த விபரங்களும் தெரியவில்லை என்பதற்கு உங்களது பேச்சே உதாரணமாக இருக்கிறது
sterilite நிறுவனம் தொடங்கப்பட்டபோது,அதை எதிர்த்து
சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டம் நடத்திய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வெளிநாட்டு தூண்டுதலின் பேரில் தான் போராடினார் என்கிறீர்களா ?
சமீபத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிலையும் தெரிவித்து விடுகிறேன்.
கேள்வி எண் 3721-மாநிலங்களவை-05-04-23 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பின்னால் "The Other Media" என்ற NGO-ன் பங்களிப்பு இருக்கிறதா என்ற கேள்வியை காங்கிரஸ் MP Naranbhai J. Rathwa எழுப்பினார்.
அதற்கு,உள்துறை அமைச்சகம் கொடுத்துள்ள பதில் என்ன தெரியுமா ?
அப்படியான புகார்கள் வரப்பெற்றுள்ளது.விரிவாக விசாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது.2018 ல் நடந்த போராட்டத்திற்கு பின்னால் NGO-க்கள் இருக்கிறதா என்பதை 5 ஆண்டுகளாக CBI விசாரித்துக்கொண்டே இருக்கிறது.
எவ்வளவு பெரிய கேலிக்கூத்து இது ?
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் 2018-ல் நடந்தது..
ஆனால்,கடந்த 2019-20 முதல் 2021-22 வரையிலான 3 ஆண்டு காலக்கட்டத்தில் ரூ.3.54 கோடி நிதியை பெற்றுள்ள அந்த NGO ரூ.2.79 கோடியை பயன்படுத்தியுள்ளனர்.

விதிகளை மீறி இருந்தால் அவர்களின் FCRA உரிமம் ரத்து செய்யப்படும் என்றே உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதெல்லாம், நாடாளுமன்ற அவையில் உள்துறை அமைச்சகம் கூறியவை.
இதையெல்லாம் நம்பும்
மனநிலையில் நீங்கள் இருக்கிறீர்களா என்று தெரியவில்லை!
ஆனால் உங்களின் உளறல்கள் அபத்தத்தின் உச்சம் மட்டுமல்ல.
இந்த நாட்டின் நாடாளுமன்றத்தை,புலனாய்வு ஏஜென்சிகளை அவமானப்படுத்தும் செயல்.
முன்னாள் IPS அதிகாரியான உங்களுக்கு
தொடர்ச்சியாக இப்படி பேசிவருவது சட்டப்படி சரி என்று தோன்றுகிறதா ?




Comments