குளித்தலை, அருகே கலைஞரின் நூற்றாண்டு விழா! 1000பனைவிதைகள் நடவு! எம்.எல்.ஏ,மாணிக்கம் தொடங்கிவைத்தார்!
- உறியடி செய்திகள்

- Oct 14, 2023
- 1 min read
Updated: Oct 17, 2023

மூத்த பத்திரிக்கையாளர் ராஜா
குளித்தலை அருகே முத்தமிழறிஞர்கலைஞர் நூற்றாண்டுவிழாவில் 1000, பனைவிதைகள் நடும்பணி, எம்.எல்.ஏ. இரா. மாணிக்கம் எம்.எல்.ஏ.தொடங்கிவைத்தார்,!
தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டல்களோடு, தமிழ்நாடு முழுவதும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டையெட்டி, ஏராளமான வளர்ச்சி திட்டப் பணிகள், சமூக நலப்பணிகள், மாணவர்கள், ஏழை எளியோர், நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் துவக்கப்பட்டும், தொடர்ந்து நடைபெற்றும் வருகின்றது.!
இதே போன்ற பணிகளில் தி.மு.கழகத்தினரும் ஆர்வமுடன் ஈடுபட்டும் வருகின்றார்கள்.!

கலைத்துறை உள்ளிட்ட பொதுவாழ்வில் பல்வேறு சாதனை நிகழ்த்தியதுடன், திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் நடைபெற்ற தி.மு.கழக மாநாட்டில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு முடிவின்படி, முத்தமிழறிஞர் கலைஞர் முதன் முதலாக வாக்கு அரசியலில் ஈடுபட்டு, பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற முதல் சட்டமன்ற தொகுதி குளித்தலை என்பது அனைவரும் அறிந்ததே!
இந்நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு குளித்தலைநகர தி.மு.கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், இரா.மாணிக்கம், குளித்தலையை அடுத்த வைகைநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தாளியாம்பட்டிஆப்பமடைக் குளத்தின் கரையில் நடைபெற்றவிழா நிகழ்வில் ஆயிரம் பனைவிதைகள் நடவு செய்யும் பணியை தொடங்கிவைத்தார்.!

தமிழ்நாடு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரியம்,
சுற்றுச்சூழல் அமைப்பு,
நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும்
தொண்டுநிறுவனம்,
கோயம்புத்தூர் தனியார் பல்கலைக்கழகம், அய்யர்மலை முத்தமிழறிஞர் கலைஞர் அரசு கலைக் கல்லூரி சமூகப் பணித்துறை மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இப்பணிகளில் இணைந்து செயல்பட்டனர்.!
வைகைநல்லூர் ஊராட்சித் தலைவி சுமதி கோபால், குளித்தலைநகர தி.மு.கழக பொருளாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பிரதிநிதி வை.புதூர் செ.பெரியசாமி,
வைகைநல்லூர் ஊராட்சி செயலாளர் கதிரேசன் உட்படதி.மு.கழக நிர்வாகிகள், தன்னார்வ அமைப்பினர்கள், பல்கலை, கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.!


தொடர்ந்துதாளியாம்பட்டி அரசு கல்லூரி சாலையில் தொடக்கவிழா நடைபெற்றது.!
விழாவில் மாணவர்கள், பங்கேற்பாளர்களை பாராட்டி எம்.எல்.ஏ.மாணிக்கம் பாராட்டு - நினைவு சான்றுகள் வழங்கி உற்சாகப்படுத்தி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.!




Comments