முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மக்கள் பயன்பெறும் வகையில் பணியாற்றுங்கள் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
- உறியடி செய்திகள்

- Mar 17, 2023
- 2 min read

தமிழ்நாட்டின் முதல்வர் தளபதியாரின் அறிவுறுத்தலின் படி, வளர்ச்சி திட்டங்கள் மக்களை சென்றயும் வகையில் பணியாற்றுங்கள், அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகள் மத்தியில் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர்
. மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தி.மு.கழகச் செயலாளர், தமிழ்நாடுசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் . கீதாஜீவன் எம்எல்ஏ., கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகம், அனைத்துத்துறை அதிகாரிகளுக்கு வளர்ச்சிப்பணி, திட்டப் பணிகள் செயல்படுத்துவது குறித்துஆலோசனைகள் வழங்கிஉரையாற்றினார்.!

அப்போது அவர் பேசியதாவது!
உலக நாடுகள் வியந்து பாராட்டும் வகையிலும்-இந்திய ஒன்றியத்தில் பிற மாநிலங்கள் ஆர்வமுடன்பின்பற்றும் வகையிலும், கழகத் தலைவர், தமிழ்நாட்டின் தன்னிகறற்ற முதல்அமைச்சர் தளபதி பெண்கள், மானவர்கள், விவசாயிகள். வியாபாரிகள் நடுத்தர ஏழை எளிய, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர பல்வேறு பயனுள்ள வளர்ச்சி - திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். முதல்வரின் ஆணைக்கேற்ப தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழியும் தனது கடும் முயற்சியால் பல்வேறு திட்டங்களை ஒன்றிய, தமிழக அரசுகளிடம் பெற்றுத் தந்து தூத்துக்குடி மாவட்டம் தன்னிரைவுபெற பாடுப்பட்டு வருகின்றார்......

தூத்துக்குடி மாவட்டம், அண்டை நாடு களுடன் வர்த்தத் தொடர்புகொண்டுள்ளதால், தொழில் வளர்ச்சி ஏற்றுமதியிலும், மாவட்டத்தில் நடந்துவரும் வளர்ச்சி - திட்டப் பணிகளிலும் தனி கவனம் கொண்டு கண்காணித்து வருகின்றார். ஆகவே மாவட்ட த்திலுள்ள அனைத்துத்துறை அதிகாரிகளும் தங்கள் துறைசார்ந்து நடைபெற்று வரும் பணிகளில் விழிப்புடனும், கவனமுடனும், திட்டப் பணிகள் முழுமையாக மக்களை சென்றடையும் வகையில் சிறு தவறுகளுக்குக் கூட இடமளிக்கமால் செயல்பட வேண்டும், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதியாரின் தலைமையில் நடைபெறும் மக்களுக்கான இந்த ஆட்சியில், மக்கள் ப் பணியாற்ற கிடைத்த இந்த வாய்ப்பை திறம்பட செயலாற்றி மக்கள் பயன் அடையும் வகையில் முதல்வர் தளபதியாரின் உத்தரவு அறிவுறுத்தல் ஆலோசனைகளுக்கு ஏற்ப சிறப்பாக பணியாற்றி, அரசுக்கும், ஆட்சிக்கும் மக்கள் பணியாற்ற வேண்டும்....

இவ்வாறாக அவர் ஆலோசனைகளை வழங்கி மேலும் பல்வேறு கருத்துக்களையும் வலியுறுத்தி பேசினார்.
உடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் . அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் . செந்தில்ராஜ்., கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவராஜ், சார் ஆட்சியர் . கௌரவ் குமார், மாநகராட்சி ஆணையர் . தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் . அஜய் சீனிவாசன், மாவட்ட ஊராட்சித் தலைவர் . பிரம்மசக்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.

முன்னதாக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் . பி. கீதாஜீவன் பொதுமக்களை நேரில்சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் படி மனுக்களை பரிசீலித்து அவற்றின் மீதான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.




Comments