டெல்லி மல்யுத்தவீராங்கள் மீது தாக்குதல் - கைது! அராஜகம்அறங்கேற்றம்முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
- உறியடி செய்திகள்

- May 28, 2023
- 1 min read

மணவை எம்.எஸ்.ராஜா...
டெல்லியில்_போராடிய_பெண்கள்_மல்யுத்த_வீரர்கள்,மீது தாக்குதல்,கைது!
தி.மு.கழகத் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
பெண் மல்யுத்த வீரர்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாஜக எம்பியை கைது செய்ய வலியுறுத்தி தலைநகரில்
தொடர் போராட்டம் நடை பெற்று வருகிறது. பல்வேறு தரப்பு மக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் பாஜக புகழ் மங்கி வருகிறது.

பல்வேறு பெண்கள் அமைப்புகளால், பாராளுமன்றத்திற்கு வெளியில் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட பெண்கள் மஹா பஞ்சாயத்தில் பங்கேற்க வந்தவர்களைத் தடுக்க டெல்லியில் தற்போது பெரும் அடக்குமுறை நடந்து வருகிறது. இன்று புதிய பாராளுமன்றம் திறக்கப்படும் போது, தற்போது டெல்லியின் பெரும் பகுதி சிறைச்சாலையாக மாறிவிட்டது. பெண் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள், டெல்லியின் அனைத்து எல்லைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன,


பல மெட்ரோ கேட்கள் மூடப்பட்டுள்ளன, பல்கலைக்கழக வாயில்கள் மூடப்பட்டுள்ளன, மத்திய டெல்லிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது, போராட்டம் நடத்திய பெண் மல்யுத்த வீராங்கனைகள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதிய பாராளுமன்றத் திறப்புவிழா ஆரவாரத்திற்கு மத்தியில், இந்திய
சனநாயகம் கொலை செய்யப்படுகிறது.
பாசிச மோடி ஆட்சிக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்கிற எதிர்ப்புக்குரல்களும் வலுக்க தொடங்கியுள்ளது.
செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?
தி.மு.கழகத் தலைவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் மீது இதுவரை அக்கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள்.
டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீராங்கனைகளை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது!
மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து தலைநகரில் போராடி வருகிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்போது, போராட்டம் நடத்திய அவர்களை இழுத்துச் சென்றும் - தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது. குடியரசுத் தலைவரையே புறந்தள்ளி, அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புக்கும் ஆளாகி நடைபெறும் திறப்புவிழா நாளில் அராஜகமும் அரங்கேறுவதுதான் அறமா?" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.




Comments