பா.ஜ. அண்ணாமலைக்கே ஆப்பா! தொடரும் பீதியை கிளப்பும் ஆடியோக்கள் வெளியீடு! குழப்பத்திலா தொண்டர்கள்?
- உறியடி செய்திகள்

- Mar 16, 2023
- 1 min read

மீண்டும் மதன் ரவீந்திரன் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்....
தமிழக அரசியில் வட்டாரத்தில், ஆடியோ வீடியோகலாச்சரம் பெருகி தங்கள் அரசியல் எதிரிகள், உட்கட்சியினரை வாங்கும் படலம் சமீபத்தில், கர்நாடக ஐ.பி.எஸ்.அதிகாரியாகயிருந்து தமிழக பா.ஜ.க தலைவராக பணியாற்றிவரும் அண்ணாமலை காலத்தில் அவர் சார்ந்த பி.ஜே.பி. கட்சி வட்டாரத்தில் பெருகி பல சர்ச்சைகளை அரசியல் வட்டாாரத்தில் பேசும் பொருளாக்கி வருவது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.....

இந்நிலையில் பா.ஜ. அண்ணாமலையின் எதிர்கால அரசியலில் சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல பா.ஜ. சார்ந்த அரசியல் தொடர்பு ஆடியோக்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில்தான் 10 ஆடியோ பதிவுகளில் தான் அண்ணாமலையிடம் பேசியதை மதன் ரவிச்சந்திரன் தற்போது வெளியிட்டார். எல்லா நகர்வுகளையும் தானும் , அண்ணாமலையும் இணைந்து செய்ததாகவும் பின்னர் அண்ணாமலை தன்னை கழற்றி விட்டதாக அவர் கூறினார். அதே நேரத்தில் அண்ணாமலை தன்னிடம் எந்த அளவுக்கு ஹெல்ப் கேட்டார் என்பதை மிகவும் தெளிவாக மதன் ரவிச்சந்திரன் பதிவு செய்து உள்ளார்.
கே டி ராகவன் எந்த நிலையிலும் பரிசுத்தமான நபர் அல்ல என்பதை சுட்டிக் காட்டிய மதன் ரவீந்திரன் , பல பெண்கள் ராகவனால் செக்ஸ் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டது உண்மை தான் என்பதையும் தெளிவாக பதிவு செய்து உள்ளார்.


கே டி ராகவனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் மிரட்டல் காரணமாக சாட்சி சொல்ல முன்வரவில்லை என்பதையும் மதன் தனது ஆடியோ பதிவில் தெளிவாக கூறி உள்ளார்.
இந்த நிலையில் அண்மையில் கே டி ராகவன் மீண்டும் அரசியலில் உயர்ந்த பதவிகளில் அமர்வார் என்று ரங்கராஜ் பாண்டே சுட்டி காட்டி பேசியிருந்த நிலையில் அவருக்கு எதிராக தற்போது மதன் ரவிச்சந்திரனால் வெளியிடப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் தமிழக பாஜக வட்டாரங்களில் மிகப் பெரிய அளவில் பரபரப்பையும், குழப்பத்தையும்
ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மையாகும்...




Comments