top of page
Search

பா.ஜ. பின்புலத்திலா மதன்? நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகமா? பா.ஜ. ஆர்.எஸ்.எஸ் பகீர் திட்டம்!!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Mar 17, 2023
  • 2 min read
ree



மதன் ஸ்டிங் ஆபரேசனுக்கு பின்னால் யார்?

மதன் வீடியோக்கள் மிகப்பெரிய சீரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. அதை மடைமாற்றி மதன் வீடியோவில் எந்தவித அரசியலும் இல்லை என்று கருத்தை முன்வைப்பவர்களிடமிருந்தே தொடங்குவோம்.

சுதந்திர ஊடகங்கள் இயங்க ஒரு தளமாக இயங்கிய யூடியூப் என்கிற தளத்தை முற்றிலும் ஒழித்ததுதான் மதன் வீடியோ தந்த பெரும் பயன். ஒரு அரசியல் நிகழ்வு நடந்தால் அதில் யார் பாதிக்கப்படுகின்றனர் யார் பயனடைகின்றனர் என்பது தான் அரசியல் ரீதியாக பார்க்க உதவும் உறைகல்.

தமிழ்நாட்டு அரசியல் தளத்தில் யூடியூப் ஊடகங்கள் யாருக்கு எதிராய் இருந்தன என்று பார்த்தால் 2016 க்கு பின் பாஜக வை மக்களிடத்தில் அம்பலப்படுத்தியதில், மக்கள் விரோத திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் யூடியூப் ஊடகங்கள் பிரதான அங்கம் வகித்தன. பிரதான தொலைகாட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த செய்திகளை மக்களிடத்தில் விவாத பொருளாய் மாற்றி நடைமுறை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்பொழுது மதனின் வீடியோக்கள் அவர்களின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்க வைத்திருக்கின்றன.

அப்படி கேள்வி கேட்பதால் யாருக்கு சாதகம்?

நிச்சயமாக பாஜக ஆர்எஸ்எஸ் க்கு தான்.

பழி மொத்தமும் பாஜக பக்கம் திருப்பி விட முடியுமா?

ree

நிச்சயமாக இல்லை. தவறு நடந்திருக்கிறது என்றால் தவறு செய்தவர்களும் அதில் பங்குதாரர்கள்.

அவர்களின் பங்கு பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தது. ஏன் அப்படி செய்கிறார்கள்?

ஊடகத்தை அரசியல் பேச தளமாய் பார்க்காமல் அதை பொருள்ஈட்டும் தொழிலாக பார்த்தனால்.

ஏன் அப்படி பார்த்தார்கள்? அரசியல் தெளிவில்லாமல், பொறுப்பில்லாமல் உதிரிகளாய் இருந்ததனால்.

இவர்கள் உதிரிகளாய் இருந்ததனால் பலவீனத்தை பயன்படுத்தி மிக எளிதாய் பொறி வைத்து பிடித்துவிட்டார்கள். விளைவு பாஜகவை எதிர்த்து பேச ஊடகங்கள் இல்லா நிலை.

ஆக மதன் செய்த ஸ்டிங் ஆபிரேசன் எந்த சந்தேகமும் இல்லாமல் பாஜகவிற்கு சாதமாக நகர்த்தப்பட்ட காய். குறுகிய காலத்தில் பாஜக விற்கு எதிராய் தெரிந்தாலும் நீண்ட காலத்தில் பாஜக விற்கு பயன்படக்கூடிய மிக முக்கியமான வேலை இது.

இந்த விடயத்தை மறைக்க வேண்டுமானால் மக்களின் குற்ற உணர்ச்சியை தூண்டிவிட்டால் போதும். உதாரணமாக தமிழர்கள் அனைவரும் குடிக்கு அடிமைகள் என்று சங்கிகள் பரப்புவது, காவிரி பிரச்சனையின் போது நாம் தண்ணீரை வீணடிப்பதால் தான் பிரச்சனை என்று பேசுவதெல்லாம் நம்மை குற்ற உணர்வு கொண்டவர்களாக மாற்றி உண்மையான காரணத்தை/காரணமானாவர்களை காப்பாற்றவே உதவும்.

அப்படி மதன் விடயத்தில் அதன் பின்னால் இருக்கும் உண்மையான காரணகர்த்தாக்களை மறைத்து மக்களை குற்றவாளிகளாக்குவது, பாஜக வை காப்பாற்ற, மதனை குற்றவாளி கூண்டினிலிருந்து விடுவிக்கவே செய்யும்.

மக்களை குற்றவாளிகள் ஆக்கிவிட்டு அதற்கு தீர்வாய் தியாகு, மருதையன் வீடியோக்களை பார்க்க வேண்டுமாம்.

யார் இந்த தியாகு? 2009 லிருந்து 2013 வரை அவர் செய்த துரோகங்களை எப்படி எளிதாய் மறக்க முடிந்தது? கவிஞர் தாமரை அதை தனிப்பதிவாய் அப்பொழுது பதிந்திருந்தார். அடுத்து மருதையன். 2021 காலகட்டத்தில் புலிகளுக்கு எதிராய் மிக பெரிய பரப்புரையை முன்னெடுத்த 2.0 கும்பலுடன் சேர்ந்து அவதூறு பரப்பியவர். இவர்களெல்லாம் அரசியல் மேதைகளாகவே இருக்கட்டும். அவர்கள் பேசுவது முற்றிலும் புலிகளுக்கும், தமிழீழத்துக்கும் எதிரானது. அவர்களை பரிந்துரைப்பது மூலம் என்ன அரசியலை பரிந்துரைக்கிறீர்கள்? புலிகள் எதிர்ப்பு அரசியலை யா? 2.0 கும்பல் தொடுத்த அவதூறுகளுக்கு எந்தவித செயல்பாடும் இவர்களிடத்திலிருந்து இல்லை.

குற்றவாளிகள் மக்கள் இல்லை. எந்தவித அரசியல் இயக்கத்தையும் சாராது, கள அரசியலில் இல்லாது, போராட்டம் செய்யாது யூடியூப்பில் மட்டுமே அரசியல் பேசி, அதன் மூலம் பணம் பார்க்கும் உதிரிகள் தான் இங்கு குற்றவாளிகள்.


தோழர் சமரன் ரமேஷ் பதிவிலிருந்து.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page