பா.ஜ. அண்ணாமலைக்கு, சமானியரின் கேள்வி?
- உறியடி செய்திகள்

- Feb 24, 2023
- 2 min read

சமானியர் ஒருவர். தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலைக்கு சில கேள்விகளை முன்வைத்து எழுதியுள் கடிதம் சமூக வளைதளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை பதிலளிப்பாரா என்பது குறித்து பின்னர் பார்ப்போம்......
அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
அண்ணாமலைஜி,
உங்களிடம் ஒரு மிக முக்கிய கேள்வி.
மு.க.ஸ்டாலின் ரத்தத்தில் தேச பக்தி இல்லை என்றும் அதனால் தான் ராணுவ வீரர் கொலை செய்யப் பட்டுள்ளார் என்றும் கதைவிடுகிறீர்கள்.
அதெல்லாம் இருக்கட்டும்.
இன்னும் வெகு சிலநாட்களில், அதாவது வருகிற 27ம் தேதியன்று மேகாலயா மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளது அல்லவா?
அந்தத் தேர்தலில் மாநில முதல்வர் சங்மா அவர்களை எதிர்த்து உங்கள் கட்சியின் மாநில துணைத் தலைவரான பெர்னார்டு மரக் என்பவரை நிறுத்தியுள்ளீர்களே, அவரது பெருமையை நம் தமிழகமக்கள் அறியுமாறு சொல்ல முடியுமா?
பாவம் அண்ணாமலைஜி! அவர் ஒருபோதும் சொல்ல மாட்டார்.
மாறாக, அவர் ஏதோ ஒரு மூலையில் திமுக கவுன்சிலராக இருந்தவரைப் பற்றித்தான் வாய் கிழியப் பேசுவார். அவரை ஒரு பெரிய திமுக தலைவர் நிலையில் வைத்து நாடகமாடுவார்.
போகட்டும், நான் சொல்கிறேன், கேளுங்கள்.
மேகாலயா முதல்வரை எதிர்த்து பாஜக நிறுத்தியுள்ள அதன் துணைத் தலைவர் ஒரு தொழிலதிபர்!

என்ன தொழில் தெரியுமா?
விபச்சார விடுதி நடத்தும் தொழில்!
அதிர்ச்சியாக இருக்கிறதா?
இதோ Deccan Herald, (23 July, 22 ) மற்றும் Indian Exp., (14 Feb, 23) தரும் தகவல்கள் ---
மேகாலயாவின் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விவேகானந்த சிங் இது குறித்துக் கூறியது--
"பெர்னார்டு மரக் தனக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் விபச்சாரத் தொழில் நடத்தி வந்துள்ளார்.
அங்கே காவல்துறை ரெய்டு நடத்தி நான்கு சிறுவர்களையும், இரண்டு சிறுமிகளையும் மீட்டுக் காப்பகத்தில் சேர்த்துள்ளோம்."
அந்த விபச்சார விடுதியில் சுமார் 73 ஆசாமிகள் ஜாலியாக தண்ணி பார்ட்டி நடத்திக் கொண்டிருந்தார்கள் என்றும் போலீஸ் ரிபோர்ட் கூறுகிறது.
இதையடுத்து பாஜக தலைவர் மரக் தலைமறைவாகி விட்டார். பிறகு கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
மூன்று மாதங்களுக்கு முன், சென்ற நவம்பரில்தான் பிணையில் வெளி வந்துள்ளார் இவர்.

நண்பர்களே,
போக்சோ சட்டப்படியும், விபச்சாரத் தொழில் தடைச் சட்டப்படியும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்ட இந்த பாஜக துணைத் தலைவர் பெர்னார்டு மரக் (Bernard Marak) தற்போது பிணையில் வெளிவந்த நிலையில் இன்று மேகாலயா முதல்வரை எதிர்த்து பாஜக வேட்பாளராகக் களம் இறக்கப் பட்டுள்ளார்!!!!
இந்த விஷயத்தில் அண்ணாமலை கிடக்கட்டும், இவரது கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் என்ன சொல்கிறார் தெரியுமா?
"இதெல்லாம் அரசியல் சதி. எங்கள் மரக் அவர்கள் பலிகடா ஆக்கப் படுகிறார். அவரை வீணாக அவதூறு செய்பவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்கப் படும்."
************************
நண்பர்களே,
இந்த யோக்கியர்கள் தான் இன்று நம் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஸ்டாலின் மீதும், திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சியினர் மீதும் ஆபாசமான தாக்குதல்களை அன்றாடம் தொடுத்து வருகிறார்கள்.
இந்தக் காவிக் கயவர்களைப் பற்றிய புரிதலை வளர்த்துக் கொண்டு இவர்களை உறுதியாக எதிர்த்து நின்று இவர்களைப் பற்றிய உண்மைகளையெல்லாம் உடனுக்குடன் பகிர்வது ஒன்றே தமிழகத்தைக் காப்பதற்கான ஒரே வழி.
அன்புடன், மருதமுத்து




Comments