காலத்தை வென்று! உலகை படித்து! சாதனைகள் பல நிகழ்த்திய உன்னத தலைவன் காமராஜர்! ஒரு சிறப்பு பார்வை!
- உறியடி செய்திகள்

- Jul 16, 2023
- 3 min read

மூத்த பத்திரிக்கையாளர் ராஜா.
காலத்தை வென்ற பெருந்தலைவர் காமராஜர் - ஒரு சிறப்பு பார்வை!
*சாகும் வரை வாடகை வீடு.. புகழ், பணத்தை விரும்பாத தலைவர்.. எனவதான் அவர் பெருந்தலைவர் காமராஜர்...!
தென்னாட்டு காந்தி, கல்விக்கண் திறந்த கர்ம வீரர், படிக்காத என போற்றப்படுபவர் பெருந்தலைவர் காமராஜர். இன்று காமராஜரின் 121வது பிறந்தநாள். தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி, ஆடம்பரம், பணம், புகழ், விளம்பரத்தை அறவே விரும்பாத எளிமைமிக்கவராக வாழ்ந்த காமராஜர்.!

1903-ம் ஆண்டு ஜூலை 15-ம் ஆண்டு விருதுநகரில் பிறந்தார்,
1962-ம் ஆண்டு சாத்தூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு காமராஜர் முதல் வெற்றியை பெற்றார். 1954-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக பதவியேற்ற காமராஜர், தனது 9 ஆண்டுகால ஆட்சியில் நூறாண்டுகள் பேசும் அளவுக்கு பல சாதனைகளை செய்தார்.!

ஆட்சிக்கு வந்த உடன், ராஜாஜி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000ஆக உயர்ந்தது.. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டமே எம்.ஜி.ஆர்.ஆல் 1980களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. !

சென்னை ஐஐடி தொடங்கப்பட்டது. கல்விக்கண் திறந்த காமராஜரை கௌரவிக்கும் விதமாக தமிழக அரசு அவரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அனுசரித்து வருகிறது.
காமராஜர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். !

அவரது ஆட்சியின் கீழ் 10 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய் திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, பரம்பிக்குளம், சாத்தூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப்பாலம், ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது. காமராஜர் ஆட்சிக்காலத்தில் என்.எல்.சி, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணு மின் நிலை போன்ற எண்ணற்ற தொழிற்சாலைகளை கொண்டு வேலைவாய்ப்பை அதிகரித்தார்.!

1964-ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு இறப்புக்கு பின் லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக முன் மொழிந்தார் காமராஜர். தொடர்ந்து 1966-ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்கு பின், நேருவின் மகள் இந்திராகாந்தியை பிரதமராக்கினார் காமராஜர். இதனால் அவர் கிங் மேக்கர் என்று அழைக்கப்பட்டார். பதவி, பணம் என எதையும் தனக்கு வேண்டும் என எடுத்துக் கொள்ளாமல் வாழ்நாள் முழுவதும் சமூக தொண்டு செய்வதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட காமராஜர் 1975-ம் ஆண்டு, அக்டோபர் 2-ம் தேதி மறைந்தார்.!

3 முறை முதலமைச்சராக இருந்த காமராஜரின் சொத்துக்கள் என்றால், அவர் வீட்டில் விசிட்டர்கள் வந்தால் உட்கார 4,5 நாற்காலி, அவரின் செருப்பு, அவரின் அலாரம், தமிழ், ஆங்கிலத்தில் இருந்த 1500 புத்தகங்கள், அவரின் தாயார் சிவகாமி அம்மையாரின் படம், 2 சூட்கேஸ்களில் இருந்த கதர் ஆடைகள், அவரின் பேனாக்கள், டைம்ஸ் ஆஃப் இந்தியா, துக்ளக் பத்திரிகை, சேவிங் ரேசர் உள்ளிட்ட பொருட்கள் தான். சாகும் வரை வாடகை வீட்டில் வசித்து வந்த காமராஜரின் வங்கிக்கணக்கில் இருந்தது வெறும் 125 ரூபாய் தான்!
.
மிக சாதாரண உள்ளாச்சி அமைப்புகளில் பொருப்பு வகித்தவர்கள். கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தும் எந்த சொத்தை சேர்க்காத காமராஜரை போன்ற தலைவர் இனிமே ஒருவர் பிறந்து வந்தால் தான் உண்டு.. ஆனால் அதுவும் சந்தேகம் தான்.

அவரின் உடல் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவரின் புகழ், செயல், தொண்டு ஆகியவற்றுக்கு என்றென்றும் அழிவே கிடையாது என்பதே மறுக்க முடியாத உண்மை.!
பெருந்தலைவர் என்றும், கிங் மேக்கர் என்றும், கல்விக் கண் திறந்தவர் என்றும் போற்றப்படும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா இன்று கல்வித் திருவிழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டு மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர்.

விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜூலை 15 அன்று மகனாகப் பிறந்தவர் காமராஜர். எளிய குடும்பத்தில் பிறந்தவர், 6 வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தார். 6-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே பள்ளிச் செல்வதை நிறுத்த வேண்டிய நிலைமைக்கு ஆளானவர். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காக திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர். எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையத் தொடங்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார்!

பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை. ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார். ஜவஹர்லால் நேரு மறைந்தபோது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப் பெருந்தலைவராக காமராஜர் செயல்பட்டார்.!

காமராஜர் மர்ம வீரர் என்றும், கிங் மேக்கர் என்றும், ஏழைப் பங்காளன் போன்றும் போற்றப்பட்டவர். இளம் வளதியலேயே காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பல முறை சிறை சென்றார். நாட்டு விடுதலைக்காக 9 ஆண்டுகள் சிறையிலிருந்தார். 1940-ல் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார். 1964-ல் அகில இந்திய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நேருவின் மறைவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரை இருமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தவர் காமராஜர்.!

அதனால்தான் அவர் ‘கிங் மேக்கர்’ என அழைக்கப்படுகிறார்.
அதோடு, 1936-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலராகவும், 1937-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1940 முதல் 1954 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகவும், 1941-ல் விருதுநகர் நகராட்சி தலைவராகவும், 1946-ல் எம்.எல்.ஏ.வாகவும், 1947-ல் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவும், 1949-ல் காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினராகவும், 1952-ல் எம்.பி.யாகவும், 1954 முதல் 1963 வரை தமிழக முதல்வராகவும், 1963 முதல் 1967 வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் 1969 மற்றும் 1971ல் எம்.பி.யாகவும் பொறுப்பு15 வகித்தவர் காமராஜர்.!

1972-ல் தாமிர பத்திர விருதும், 1976-ல் பாரத ரத்னா விருதும் பெற்றவர். காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளில் 1975-ல் காமராஜர் மறைந்தார்.
பல்வேறு பெருமைக்குரிய பெருந்தலைவர் காமராஜரின் விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன.!


பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று (15ம் தேதி) கொண்டாடப்பட்டு வருகிறது.
காமராஜர் பிறந்த பிறந்த ஊரான விருதுநகரில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் இன்று காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலமாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுவதால் விருதுநகர் மட்டுமின்றி தமிழகமே விழாக்கோலம் பூண்டது!
சாலச்சிறந்த நன்றி மறவா நிகழ்வு என்பதில் எவ்விதமான மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை! என்றால் அது மிகையில்லை!




Comments