ஆலங்குடியில் மாணவியர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்!
- உறியடி செய்திகள்

- May 22, 2023
- 1 min read

ஆசிரியர் மணவை.எம்.எஸ்.ராஜா
ஆலங்குடியில் கலாலயா நாட்டியப்பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கலாலயா நாட்டியப்பள்ளி சார்பில் பரதநாட்டிய அரங்கேற்றம் கல்லாலங்குடி வசந்தா கந்தசாமி திருமண மஹாலில் நடைபெற்றது பரதநாட்டிய அரங்கேற்ற விழாவில் நட்டு வாங்க கலைமணி பரதநாட்டிய குரு சங்கீதா ராமதாஸ் மாணவி ரியா, தாருணிகா, மஹிழ்வியா, தனிகா ஸ்ரீ, கவின் ஜெஸிகா ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா நடைபெற்றது .
சிறப்பு விருந்தினர்கள் அண்ணாமலை பல்கலைக்கழக இசைத்துறை உதவி பேராசிரியர் கிருஷ்ணராஜீ, ஆலங்குடி சிவன் கோவில் திருக்கைலாய மணி சீதா சொர்ணபைரவ சிவாச்சாரியார், ஆலங்குடி உதவி பங்கு தந்தை சித்தேரி முத்து ஆகியோர் கலந்து கொண்டு பரதநாட்டிய மாணவிகளை பாராட்டினார்கள்,....

சிறப்பு விருந்தினர்கள் ஆலங்குடி பேரூராட்சி தலைவர் ராசி முருகானந்தம், ஆலங்குடி டிஎன்பிஎல் காண்ட்ராக்டர் செல்வராஜ், புதுக்கோட்டை அரசு இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியர் டாக்டர் சரவணன், மாடர்ன் மெட்ரிக் பள்ளி தாளாளர் இளந்தென்றல், வைரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடன ஆசிரியர் குமார், மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மதியழகன், பக்க வாத்திய கலைஞர்கள் நட்டு வாங்க கலைமாமணி சங்கீதா ராமதாஸ், காஞ்சி காமகோடி புவனகிரி முனைவர் குமார், திருக்கடையூர் கமலக்கண்ணன், புல்லாங்குழல் ஆஸ்தான வித்வான் டாக்டர் கிரீஸ் குமார், தில்லை ராஜேந்திர சிதம்பரம், ராமதாஸ், பெனிட்டா தமிழ்ச்செல்வன், மற்றும் பரதநாட்டிய கலைஞர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முன்னதாக நட்டு வாங்க கலைமணி சங்கீதா ராமதாஸ் வரவேற்றார் நிகழ்ச்சியின் முடிவில் ராமதாஸ் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை சிவா....




Comments