பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழா சர்ச்சை! பின்வாங்கியதோ சனாதனம்!!
- உறியடி செய்திகள்

- Jun 28, 2023
- 2 min read

பத்திரிக்கையாளர் ராஜா....
சர்ச்சையைக் கிளப்பிய `கறுப்பு நிற ஆடைக்குத் தடை' உத்தரவு; அந்தர்பல்டி அடித்த பெரியார் பல்கலைக்கழகம்! ஆர்.என் ரவி!
பெரியார் பல்கலைக்கழகத்தில் இன்று ஜூன்28.பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கவிருக்கிறார்.!
வள்ளலார் குறித்து சமீபத்தில் ஆளுநர் பேசியதும், தொடர்ச்சியாக பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதனம் குறித்தும் ஆளுநர் பேசிவரும் கருத்துகளும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இன்று பட்டமளிப்பு விழாவுக்காக சேலத்துக்குச் செல்லும் ஆளுநருக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கறுப்புக்கொடி காட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் திட்டமிட்டிருக்கின்றன.!
ஆளுநர் ஆர்.என்.ரவிசாதிப்பாகுபாடு, சர்ச்சைக் கேள்வி, பாலியல் வழக்கு... பெரியார் பல்கலைக் 'கலகம்'
இந்த நிலையில் பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தருவோர் கறுப்புச்சட்டை அணிந்து வரக் கூடாது என்றும், கைபேசி எடுத்து வரக் கூடாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக யாராவது கருப்புச்சட்டை அணிந்து வரக் கூடும் என்று காவல்துறை எச்சரித்ததன் அடிப்படையில், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியதாகக் கூறப்பட்டது.!

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. `பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயே கருப்புச்சட்டை அணிந்து வரக் கூடாது என பல்கலைக்கழகத்துக்குக் காவல்துறை எப்படி அறிவுறுத்தலாம்?
காவல்துறை முதல்வர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது' என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பினர். !
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட மதுரை எம்.பி சு.வெங்கடேசன், "ஆளுநர் வருகைதரும் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு மாணவர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து வரக் கூடாதென்று சேலம் மாவட்டக் காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதனத்தை ஆளுநர் அணிந்துவரக் கூடாதென்றும் காவல்துறை அறிவுறுத்த வேண்டுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார் !.

இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் டேவிட்டை தொடர்புகொண்டு பேசினோம். "ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்படாமல் இருக்கலாம் என எங்கும் சொல்லவில்லை. ஆனால் ஆர்.என்.ரவி எங்கு சென்றாலும் சனாதனத்தை பேசுவதையே வேலையாக வைத்திருக்கிறார். அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்நாட்டு அரசையும் மதிப்பதே இல்லை. எனவேதான் சேலத்துக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்திருக்கிறோம் என்கிற தகவல்களும் வெளியாகின!
. இதனையடுத்து பட்டமளிப்பு விழாவுக்கு யாருமே கறுப்புச்சட்டையே போட்டு வரக் கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. இது ஏற்புடையதல்ல" என்றார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி!
இது தொடர்பாக சேலம் மாவட்டக் காவல்துறை . ``பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு காவல்துறை இத்தகைய உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை, அவர்களாகவே சுற்றறிக்கை அனுப்பியிருக்கலாம்" என்கின்றனர்.
ஆனால், ஆளுநர் வருகையையொட்டி வாய்மொழியாக இடப்பட்ட அறிவுரையாக இது இருக்கலாம் என்றும் போலீஸார் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில், அந்தச் சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன்கருதி அந்தச் சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.!




Comments