top of page
Search

பா.ஜ.க.தேர்தல் வியுகம்! ட்ரம் கார்டு மத்திய புலனாய்வுத்துறை வசமா? அமுக்கியா வசிக்கிறது அதிமுக!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Jun 29, 2023
  • 3 min read
ree

பத்திரிக்கையாளர் ராஜா....


கூட்டணின்னா அமுக்கிவாசிக்கனமோ!

ஒன்பதாண்டு பா.ஜ.க ஆட்சியின் அரசியல் பாணி! அச்சத்திலா அதிமுக!


கட்சிகளை வழிக்கு கொண்டுவர சாம, தானம் என்ற சனாதானமோ!


குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில், தமிழக முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது விசாரணை நடத்துவது தொடர்பான மத்திய அரசின் அனுமதி கடிதம் இன்னும் கிடைக்காத நிலையில், வழக்கை எப்படி நடத்துவது என சி.பி.ஐ நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.!


தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான குட்கா கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர். !


இந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

இந்நிலையில், குட்கா ஊழல் தொடர்பாக தி.மு.க தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐக்கு மாற்றி உத்தரவிட்டது.!

இந்த வழக்கில் கிடங்கு உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீதகிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய ஆறு பேர் கடந்த 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர்.!


இந்நிலையில், இந்த வழக்கில் சி.பி.ஐ போலீஸார் சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட ஆறு பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது.

அமைச்சர் மற்றும் டி.ஜி.பி என வேறு யாருடைய பெயர்களும் இடம்பெறவில்லை.

இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட பதினொரு பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது.!

ree

இதனைத் தொடர்ந்து பதினொரு பேருக்கு எதிராக கடந்த நவம்பர் மாதம் சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், தமிழ்நாட்டில் குட்கா வழக்கு விவகாரம் தொடர்பாக தமிழக முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தலாம் என மத்திய அரசும் விசாரணைக்கு அனுமதி அளித்திருந்தது.

அந்தக் கூடுதல் குற்றப் பத்திரிகையில் பல்வேறு தவறுகள் இருப்பதால் அதனை திருத்தம் செய்தும் வழக்கில் உள்ள சாட்சிகள் குறித்த விபரங்கள் மற்றும் அவர்களின் வாக்குமூலம் தொடர்பான விபரங்களை இணைத்தும், குற்றம்சாட்டபட்டவர்களுக்கு எதிரான விசாரணை அனுமதி தொடர்பான விபரங்களை இணைத்தும், தவறுகளை திருத்தம் செய்து முழுமையாக தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு உத்தரவிட்ட சி.பி.ஐ நீதிமன்றம், கூடுதல் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐக்கு திரும்ப அளித்தது.!


இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை சென்னை சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது சி.பி.ஐ தரப்பில், பிழையைத் திருத்திய குற்றப்பத்திரிகை இன்னும் தயாராகவில்லை.!

குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கு எதிரான விசாரணை மற்றும் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக இன்னும் மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை!.

ree

மற்றவர்களுக்கு எதிராக அனுமதி கிடைத்துவிட்டது (அனுமதி கிடைத்தவர்கள் பெயர் மற்றும் கிடைக்கதவர்கள் பெயரை, நீதிமன்றத்தில் தெரிவிக்காத சி.பி.ஐ, எண்ணிக்கையை மட்டுமே தெரிவித்தனர்)

எனவே வழக்கில் கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கபட்டது.!

அப்போது நீதிபதி, அனுமதி கிடைக்காத நிலையில் வழக்கை எப்படி நடத்துவது? என சி.பி.ஐக்கு கேள்வி எழுப்பி, விசாரணையை ஜூலை 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த வழக்கில், மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை எனக்கூறி, கடந்த 2022 டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 2023 ஜூன் 26 நேற்று வரை 10 முறை இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.!

2022 டிசம்பர் 15, 2023 ஜனவரி 10, பிப்ரவரி 6, பிப்ரவரி 17, மார்ச் 20, ஏப்ரல் 18, ஏப்ரல் 25, மே 11 ஜூன் 3, மற்றும் ஜூன் 26 ஆகிய தேதிகளில் மத்திய அரசின் கடிதம் கிடைக்கவில்லை என சி.பி.ஐ கூறியதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் சமயத்தில் மேனாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது.!


இதன் பின்னர் இந்த ரெய்டை டிரம்ப் கார்டாக வைத்துக் கொண்டு அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.கவை தங்கள் வழிக்கு கொண்டு வர நடத்திய முயற்சி என்ற குற்றச்சாட்டுகள் இருந்தன.

பா.ஜ.கவின் அடிமைகளாக அ.தி.மு.கவை மாற்ற குட்கா வழக்கை கையிலெடுத்து கனகச்சிதமாக காய்நகர்த்தியதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒன்பதாண்டு கால பா.ஜ.க ஆட்சியில் தன்னாட்சி அமைப்புகளான வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ ஆகியவற்றை எதிர்க்கட்சிகளை ஒடுக்கவும், உடைக்கவும், பா.ஜ.க தலையெடுக்க முடியாத மாநிலங்களில் குறுக்கு வழியில் தங்கள் மதவாத சித்தாந்த அரசியலையும், ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் சித்தாந்தங்களை நடைமுறை படுத்திட பயன்படுத்தி வருவதாக கூறப்பட்டு வந்த அரசியல் விமர்சகர்கள், நோக்கர்கள் கருத்தை உறுதிப் படுத்தும் வகையில்தான் குட்கா வழக்கில் பா.ஜ.க வின் செயல்பாடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுவது யதார்த்தமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

கூட்டணிக் கட்சின்னா அமுக்கிவாசி என்று தன்னாட்சி அமைப்புகளை அறிவுறுத்துவது பா.ஜ.க வின் நிலைப்பாடு. எனவேதான் அரசியலில் அதிமுகவுக்கு உறுதியான நிலைப்பாடு இல்லாமல், பா.ஜ.வின் குரலாகவே ஒலித்து வருகின்றது!

என்று அரசியல் விமர்சகர்கள் கூறுவதையும் சிந்திக்கே வேண்டியே உள்ளது!


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page