பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை புரட்சியோ?குழந்தையின்பெற்றோருக்கு திருமணமா? நடைபயணத்தில் என்ன நடக்குமோ!
- உறியடி செய்திகள்

- Jul 9, 2023
- 2 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா....
அண்ணாமலைபுரட்சிக்கு எல்லையில்லையோ!
குழந்தையின்பெற்றோருக்கு திருமணமா?
ஜூலை 28.நடைபயணத்தில் இன்னம் என்ன என்ன நடக்குமோ! என்று சமூக வலைதள வாசிகள் விமர்சனம்!
கர்நாடக காவல் பணியிலிருந்து, நேரடி தமிழக அரசியல் களத்தில், பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், மாநிலத்தின் பா.ஜ.க. தலைவராக பொருப்பேற்று செயல்பட்டு வருபவர் அண்ணாமலை!
அரசியலில் அவரின் நடவடிக்கைகளும் குற்றச்சாட்டுக்களும், அதிரடி பேச்சுகளும் அடிக்கடி முன்னுக்குப்பின் முரணாக விமர்சிக்கப்பட்டாலும்!
வுடுப்பா வுடுப்பா தலைவர் அண்ணாமலைன்னாலே சர்ச்சைகள்தான்!
சர்ச்சைகள் என்றாலே அண்ணாமலை தான்!
அரசியலில் லே இதெல்லாம் சகஜமப்பா!
என்கிற பேச்சுக்கும் பஞ்சமில்லை!
தமிழக அரசியல் வட்டாரத்தை செய்தி சேனல்கள்களை (Breaking News) தனது அதிரடி செயல்கள், பேச்சுக்கள், அறிவிப்பு - குற்றச்சாட்டுகள் மூலம் திக் திக் திக் என பரப்பை ஏற்படுத்தி வருபவர் என்று அரசியல் விமர்சகர்கள் பலராலும் விமர்சனங்களுட்பட்டவராக அண்ணாமலையின் அரசியல் பாணி பா.ஜ.வின் மூலம் பரப்பரப்பை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது என்று அரசியல் பார்வையாளர்களால் கூறப்படுகின்றது!
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் அரசியல் அறிவிப்பு, குற்றசாட்டு. விமர்சனம், உள்ளிட்டவை எந்தளவுக்கு உண்மைத்தன்மை வாய்ந்தது என்கிற ஆராய்ச்சி வேறு,!
அது பற்றிய ஆர்வம் கொள்ள தேவையில்லை!

என்ன தான் கண்டும் காணாமல் போனாலும், பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி அது பற்றிய விமர்சனங்கள் வெளியாவதும்!
, சமூக வலைதளத்தில் விமர்சனத்திற்குள்ளாகும் பட்டியலில் அண்ணாமலை இடம்பெறவில்லை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்கிற அரசியல் வட்டார தகவல்களுக்கும் பஞ்சமில்லை!
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கி சமூகவலைதளங்களில் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ள தகவல்கள் வைரலாகி வருகிறது!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் 39 வது பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன் கொண்டாடப்பட்டதாக. கூறப்படுகின்றது!
இவருடைய பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் தென்பசியார் பகுதியில் பாஜக சார்பாக 39 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் தெரிகின்றது!
இதில் அண்ணாமலை கலந்து கொண்டு புது மணதம்பதிகள் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்க தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த தகவல்களும் வெளியாகின!
இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் அனைத்தும் வைரலாகி வந்தது.!
இந்த நிலையில் இந்த இலவச திருமணத்தில் பங்கேற்ற 39
ஜோடி மணமக்களில், 3,ஜோடி தம்பதியர்களுக்கு ஏற்கனவே திருமண தகவல்களும், அதில்
ஒரு தம்பதியரின் குழந்தைக்கு திருமணத்திற்கு முன்புதான் முதலாம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.!
இந்த விவகாரத்தை முன்வைத்து அண்ணாமலையையும், பாஜகவினரையும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் .!
இந்நிலையில் வருகிற ஜூலை 28,ந் தேதி ஏற்கனவே அறிவித்தப்படி தனது நடைப் பயணத்தை தமிழகத்தில் தொடங்கவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துவருகின்றது!
இந்த நடை பயணம் முடிவிற்குள் இன்னமும் என்ன? என்ன? சர்ச்சைகளில் சிக்கி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்த போகிறாரே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை என்கிற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் நகைச்சுவை கலந்த விமர்சனமாகவே வைரலாக தொடங்கிவிட்டதாக கூறுகின்றனர் சமூக வலைதளவாசிகள்!




Comments