பா.ஜ.க. பற்றி பேச, சி.வி. சண்முகத்திற்கு தகுதியில்லை! பி.ஜே.பி.நிர்வாகி நாரயணன் திருபதி ஆவேசம்!!
- உறியடி செய்திகள்

- Dec 19, 2022
- 3 min read

எடப்பாடி ஆதரவாளரான முன்னாள் அமைச்சரின் பேச்சால் அதிமுக - பாஜ கூட்டணியில் விரிசலா?: இரு கட்சி தலைவர்களின் கருத்து மோதலால் பரபரப்பு.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சால், அதிமுக-பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு கட்சி தலைவர்களும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.....
ஜெயலலிதாமறைவுக்கு பிறகு பல அணிகளாக உடைந்த அதிமுக, தற்போது சசிகலா, எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் என 4 அணிகளாக செயல்பட்டு வருகிறது. அடுத்த வரும் நாடாளுமன்ற தேர்தலில் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்றால், அதிமுக அணிகள் ஒன்று சேர வேண்டும் என்று பாஜ கருதுகிறது. இதுபற்றி பலமுறை 4 அணிகளின் தலைவர்களிடமும் கூறி வருகின்றனர். அதில் 3 பேர் சம்மதித்து விட்டனர். எடப்பாடி பழனிசாமி மட்டும் சம்மதிக்கவில்லை.
சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை கட்சியில் சேர்க்க முடியாது. ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்கலாம். ஆனால் அவைத் தலைவர் பதவி மட்டுமே தர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். இதுதொடர்பாக எடப்பாடியிடம், பாஜ தலைவர்கள் பலமுறை பேசியும் அவர் பிடிவாதமாக இருக்கிறார். இதனால், எடப்பாடியை தங்கள் வழிக்கு கொண்டு வர அவருக்கு வேண்டிய தொழில் அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. உடனே, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து பேச எடப்பாடி டெல்லி சென்றார். ஆனால், இருவரும் சந்திக்க மறுத்துவிட்டனர்.
இதன்பிறகு, திண்டுக்கல் வந்த மோடியிடம், தனியாக சந்தித்து பேச வேண்டும் என்று எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் நேரம் கேட்கப்பட்டது. ஆனால் பிரதமர் அலுவலகம் நேரம் ஒதுக்க மறுத்து விட்டது.

இதனால், விரக்தியடைந்த எடப்பாடி சமீபத்தில் சென்னையில் நடந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் முதல்வர் பதவியேற்பு விழாவை புறக்கணித்தார். ஆனால், பன்னீர்செல்வம் பங்கேற்றார். ஒன்று சேர எடப்பாடி தொடர்ந்து மறுத்து வருவதால், அவர் மீது பாஜ தலைவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதே நேரத்தில், பாஜ தலைமை தனியாக சந்தித்து பேச நேரம் ஒதுக்க மறுப்பதால் விரக்தியில் உள்ள எடப்பாடி, ‘2024ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் பாஜவுக்கு முக்கியமானது.
இனி நான் இறங்கிப் போவது இல்லை. வேண்டும் என்றால் அவர்கள் என்னைத் தேடி வரட்டும். மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி வைக்காமல் விட்டால், நாம் தனித்து நின்று நமது பலத்தை காட்டுவோம்’ என்று ஆதரவாளர்களிடம் தெரிவித்து உள்ளார். இதனை உறுதிப்படுத்தும் வகையில், ‘அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்’ என்று தெரிவித்தார். ஆனால், ‘அதிமுக கூட்டணிக்கு பாஜதான் தலைமை’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார். இதே கருத்தை பாஜ தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனால், அதிமுக-பாஜ கூட்டணியில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நெய்வேலியில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் பேசுகையில், ‘திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜ தயாராகி வருகிறது’ என்று பேசினார். பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட எடப்பாடியும், அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், அதிமுக ஒன்றுப்பட்டு இருக்க வேண்டும் என்று பாஜ தலைவர்கள் பேசி வருகின்றனர். கூட்டணியில் இருந்து வெளியேற முட்டுக்கட்டை போடுவதால், பாஜ மீது பழியை போட்டு, கூட்டணியில் இருந்து விலகுவதற்காக எடப்பாடியே அவரது ஆதரவாளரான சி.வி.சண்முகத்தை இப்படி பேச வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
சி.வி.சண்முகத்தின் கூட்டணி பேச்சை பாஜ தலைவர்கள் மறுத்து உள்ளனர். திமுகவும் இந்த கருத்தை மறுத்து, கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கோவையில் நேற்று முன்தினம் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு கட்சி இந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறது என்று சொல்வதாக இருந்தால் சொல்லக்கூடியவர் அந்த கட்சியில் இருக்க வேண்டும். சி.வி. சண்முகம் பாஜவில் சேர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. நான் பாஜ கட்சி தலைமை அலுவலகம் கமலாலயம் சென்று 4 நாட்கள் ஆகிறது. இது பற்றி விசாரித்துவிட்டு சொல்கிறேன்’ .பாஜதான் தலைமை’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.
இதே கருத்தை பாஜ தலைவர்களும் தெரிவித்து வருகின்றனர். இதனால், அதிமுக-பாஜ கூட்டணியில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நெய்வேலியில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் பேசுகையில், ‘திமுகவுடன் கூட்டணி வைக்க பாஜ தயாராகி வருகிறது’ என்று பேசினார். பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட எடப்பாடியும், அவரது ஆதரவாளர்களும் திட்டமிட்டு உள்ளனர். ஆனால், அதிமுக ஒன்றுப்பட்டு இருக்க வேண்டும் என்று பாஜ தலைவர்கள் பேசி வருகின்றனர்.
கூட்டணியில் இருந்து வெளியேற முட்டுக்கட்டை போடுவதால், பாஜ மீது பழியை போட்டு, கூட்டணியில் இருந்து விலகுவதற்காக எடப்பாடியே அவரது ஆதரவாளரான சி.வி.சண்முகத்தை இப்படி பேச வைத்துள்ளதாக கூறப்படுகிறது. சி.வி.சண்முகத்தின் கூட்டணி பேச்சை பாஜ தலைவர்கள் மறுத்து உள்ளனர். திமுகவும் இந்த கருத்தை மறுத்து, கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கோவையில் நேற்று முன்தினம் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒரு கட்சி இந்த கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறது என்று சொல்வதாக இருந்தால் சொல்லக்கூடியவர் அந்த கட்சியில் இருக்க வேண்டும்.
சி.வி. சண்முகம் பாஜவில் சேர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. நான் பாஜ கட்சி தலைமை அலுவலகம் கமலாலயம் சென்று 4 நாட்கள் ஆகிறது. இது பற்றி விசாரித்துவிட்டு சொல்கிறேன்’ என்று பதிலடி தந்துள்ளார். பாஜ மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவுடன் பாஜ கூட்டணி அமைக்கும் என்று சி.வி.சண்முகம் பேச்சு வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாஜவுக்கு எப்போது, யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற சி.வி.சண்முகத்தின் ஆலோசனை தேவையில்லை.
அதற்கான உரிமையோ, தகுதியோ அவருக்கு இல்லை. காவி துண்டு போட்டவன் பாஜ தொண்டன் என்றெல்லாம் நிதானமில்லாமல் பேசி உள்ளதும் அவரின் பொறுப்பேற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. வருங்காலத்தில் அவர் பாஜ குறித்த விமர்சனங்களை தவிர்ப்பார் என்று கருதுகிறேன்’ என்று கூறி உள்ளார். இவ்வாறு அதிமுக - பாஜ கட்சி தலைவர்கள் கடும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருவதால், அதிமுக-பாஜ கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிடுமா?
ள்ளது.




Comments