சனாதன சர்ச்சையை கிளப்பிய பா.ஜ.க.! ஆளுமையான உதயநிதி ஸ்டாலின்! ஒரு சிறப்பு பார்வை!
- உறியடி செய்திகள்

- Sep 14, 2023
- 6 min read
Updated: Sep 15, 2023

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா.....
சனாதனம் சர்ச்சை: தமிழ்நாட்டின் அரசியல் ஆளுமையான உதயநிதி!
சனாதனம் ஒழிப்பு இன்று எழுந்த புதிய சர்ச்சையல்ல! பகுத்தறிவு பகலவன் தந்தைபெரியார்-சட்டமாமேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட ஆளுமைகள் பலரால் மிக கடுமையாக எதிர்க்கப்பட்டது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது!

இதில் இன்றளவும். உயர்அதிகாரம் படைத்தவர்கள் உள்ளிட்டவர்களே, மீண்டும் சனாதனத்தை பகிரங்கமாக தூக்கிப் பிடிக்கும் நிலை தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மிக வேகமாக அதிகரித்தும் வருகிறது என்பது பொதுவெளியில் மிக கடுமையான எதிர்ப்புடனா விமர்சனமாகவும் இருக்கத்தான் செய்கிறது.!

சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு பா.ஜ.கவின் முக்கியத் தலைவர்கள் எதிர்வினையாற்றி வரும் நிலையில்,!
உதயநிதி கலந்துகொண்ட கருத்தரங்கு குறித்த போஸ்டர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாகவே வாட்சப்பில் வந்துகொண்டிருந்தன. சனாதனத்தை ஒழிப்போம் என்று மாநாடு நடத்தும்போது, அதை விரும்பாதவர்கள் மாநாடு நடத்தும் முன்பே சென்று தடை வாங்கியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்கிற கேள்வியும் சிந்திக்க வேதூண்டுகிறது!
உலகளவில், அவரது பெயரை மேலும் வலுப்படுத்தியுள்ளது மட்டுமின்றி கட்சியிலும் பொதுவெளியிலும் அவருக்கான ஏற்புத்தன்மையும் கூடியிருக்கிறது என்றுதான் கூறவேண்டும்!
சனாதன தர்மத்தை அழிக்க வேண்டும் என பேசிய பேச்சுக்கு இவ்வளவு பெரிய எதிர்வினை வருமென அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அப்படி குவிந்த எதிர்வினைகளை உதயநிதி ஸ்டாலின் எதிர்கொண்ட விதமும், அரசியல், பொதுவாழ்வு அணுகுமுறையில் குறிப்பிடதக்க இடத்திற்கு அவரை நகர்த்தியுள்ளது என்றேதான் கூறவேண்டும்!

இடதுசாரி அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன . ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் தி.மு.கழக இளைஞரணி செயலாளர். தமிழக இளைஞர் நலன் - விளையாட்டுத்துத்துறை அமைச்சர்,
உதயநிதி ஸ்டாலின், 'இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்சின் பங்களிப்பு' என்ற தலைப்பில் இருந்த கேலிச்சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு, நூல் குறித்து பேசினார்.
இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள்.
சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்.!
சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியமாகும்" என்று பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
வழக்கபோல,இந்த விவகாரத்தை அரசியலாக்க பூதாகரமாக்க தொடங்கியது பா.ஜ.க.!
.செப்டம்பர் 2ஆம் தேதி மாலையில் உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோவை வெளியிட்ட பா.ஜ.கவின் தகவல் தொழிலநுட்பப்பிரிவு பொறுப்பாளர் அமித் மால்வியா, "இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை ஒழிப்பதற்கு" உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டார்.!

பெரிய அளவில் கவனிக்கப்படாத உதயநிதியின் பேச்சு, நாடு முழுவதும் பேசும் பொருளாக - விவாதமாக மாற்றவும் பல்வேறு வழிகளையும் கையாளவும் தொடங்கியது தமிழக பா.ஜ.க. என்கிற அரசியல் நோக்கர்களின் கருத்துக்களையும் எளிதில் புறம்தள்ளி கடந்து செல்லவும் முடியாது!
ஒரு பக்கம் பா.ஜ.க. சர்ச்சையாக்கி வந்தபோதும் தனது கருத்து பற்றி உரிய விளக்கமளித்து,பின்வாங்காத உதயநிதி ஸ்டாலின்இதற்குப் பிறகு, பேசிய பேச்சின் வீடியோ காட்சிகள் வழக்கம் போலனான தங்கள் பாணியில் பா.ஜ.க.வினர் உதயநிதி ஸ்டாலின் பேசிய வீடியோ பதிவை வெட்டியும் - ஒட்டியும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.!
என்கிற தி.மு.க.வினரின் குற்றச்சாட்டும் அலசி ஆராயப்பட வேண்டியுள்ளது.!
காரணம் தமிழக பா.ஜ.கவின் கடந்த கால நிகழ்வுகள் அப்படி என்றும் கூறப்படுகிறது.!

ஒரு கட்டத்தை கடந்த நிலையில், திட்டமிட்டு தேர்தல் அரசியலாக்கும் வகையில், தமிழக பா.ஜ.க.வின் மாநிலப் பிரிவுகள், தொடங்கி,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் இதற்குக் கண்டனம் தெரிவிக்கவும் ஆரம்பித்தார்கள்.!
இந்தியா கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளும் இது குறித்து தங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டுமென வலியுறுத்தினார்கள்.!
அடுத்தடுத்த நாட்களுக்கு, தொலைக்காட்சிகளில் தேசிய அளவிலான தலைப்புச் செய்தியாக, உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்துப் பேசியதே இருந்தது!.
ஆங்கிலத்திலும் இந்தியிலும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களில் கூட இரவு விவாதங்களில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை வைத்தே விவாதங்கள் நடத்தப்பட்டன!

.இதற்குப் பிறகு, தி.மு.கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சனாதனம் குறித்து, பல்வேறு திராவிட இயக்க ஆளுமைகளின் கருத்தை சுட்டிகாட்டி தி.மு.கழகத்தின் சனாதன எதிர்ப்பு நிலை குறித்தும்அறிக்கையை வெளியிட்டார்.!
அதிலும் சனாதனத்திற்கு எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை ஆதரித்துக் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.உதயநிதி ஸ்டாலினின் பேச்சை வைத்து, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் முயற்சிகளையும் பா.ஜ.க. மேற்கொண்டது.!
இதன் உச்சகட்டமாக,உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சாமியார். உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலைவை த்தார்!.
பொதுவாக அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துகள், சர்ச்சையாகும்போது, தான் சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதாகவும் தான் அந்த அர்த்தத்தில் பேசவில்லையென்றும் விளக்கமளிப்பது வழக்கம்.!


ஆனால், உதயநிதி அந்த உத்தியை கையாலவில்லை.இந்த சர்ச்சையில் உதயநிதி ஸ்டாலின் பின்வாங்காமல் எதிர்கொண்டார்.! சனாதன தர்மம் குறித்துத் தான் பேசியதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், இந்து மதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்க வேண்டும் என்ற பொருளிலேயே தான் பேசியதாகவும், சனாதனம் எங்கு எப்படி உருவமெடுத்தாலும் அது மக்களுக்கும் - சமூகத்திற்கும்ஏற்புடையதாகாது என்று அவர் குறிப்பிட்டார்.!
இது தொடர்பாக அடுத்த இரண்டு. நாட்களுக்கு ஊடகங்கள் அவரைத் துரத்தித் துரத்திக்கே ள் விகள் கேட்க இதே பதிலையே அவர் திரும்பத் திரும்பச் சொன்னார்.!சனாதனம் குறித்த பேச்சு சர்ச்சையான பிறகு, அந்தப் பேச்சில் உறுதியாக நின்றது அவரை எதிர்காலத் தலைவராகக் கருதுபவர்களுக்கு மகிழ்ச்சியையும் - தமிழ் சமூகத்தில் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள் பலர்!

சனாதனம் குறித்த மாநாடு தி.மு.கவால் நடத்தப்பட்டதுமில்லை. அவருக்காக திட்டமிடப்பட்டதுமில்லை. த.மு.எ.க.ச. நடத்திய மாநாட்டில் அவர் தன் கருத்தைப் பேசிவிட்டு வந்திருக்கிறார். இந்த விஷயங்கள் எல்லாமே காலம்,காலமாக தந்தைபெரியாரால் முன்னெடுக்கப்பட்டு,தி.க., தி.மு.க. தலைவர்களால் பேசப்பட்டவைதான். ஆகவே,!
இதனைத் திட்டமிட்டு அரங்கேற்றியதாகச் சொல்ல முடியாது. இது இயல்பான அரசியல் நகர்வுதான்!.
ஆனால், அந்தப் பேச்சு சர்ச்சையான பிறகு, நான் பேசியதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என்று உதயநிதிசொல்லியிருப்பதுதான் முத்தமிழறிஞர் கலைஞரின் வழித்தோன்றலாகவும் மாற்றியும் உள்ளது. என்கிற திராவிட இயக்கங்கள் கருத்துக்களும் வலுப்பெற்றே வருகிறது!

வேகமாக வளரும் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை,உதயநிதி ஸ்டாலின் அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் கட்சிக்குள் பதவியளித்தபோதும் பல கடுமையான விமர்சனங்கள் அரசியலில் பேசும் பொருளாகளாக்கப்பட்டபோதும்! அதற்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டியிட வாய்ப்பளித்தபோதும், அவருக்கு அமைச்சர் பதவியளித்தபோதும் இதேபோன்ற விமர்சனங்கள் தமிழக அரசியலில் பலருக்கும் ஏற்படுத்திய அச்சத்தால்,கடுமையாக எழுந்தன.!
தி.மு.கவில்வாரிசு அரசியல் என்றும், உதயநிதி ஸ்டாலினை மிகத் தீவிரமாக முன்னிறுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் இருந்தன
.ஆனால், உதயநிதி ஸ்டாலின் தற்போது சனாதனம் குறித்து பேசிய பேச்சு, மக்களிடத்திலான தனது எளிமையான அணுகுமுறை,பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்பினரிடம் பெரும் கலக்கத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தாலும் தமிழ் மக்களிடமும், திராவிட கட்சிகளிடமும் உதயநிதி ஸ்டானுக்கு நல்ல வரவேற்பையும் - நம்பிக்கையையும் மேலும், கூடுதலாக பெற்று தந்திருக்கிறது. என்றுதான் கூறவேண்டும்!

திராவிட இயக்கங்களில் உதயநிதி ஸ்டாலினுடைய இந்தப் பேச்சு ஒரு மன மாற்றத்தை ஏற்படுத்தி அடுத்த கட்டத்திற்கு உதயநிதியை கொண்டு சென்றுள்ளது. .மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையோடு ஒப்பிட்டால், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை மிக வேகமானதாகவே நகர்கிறது. என்கிற கருத்தும் நிலவாமலும் இல்லை!
14 வயதில் இருந்து தீவிரமாக அரசியலில் ஈடுபாடுகாட்டி வந்த மு.க. ஸ்டாலினுக்கு 31 வயதில்தான் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புக் கிடைத்தது. 1989ல் முதல் முறையாக எம்.எல்.ஏவான மு.க. ஸ்டாலின், 2006ஆம் ஆண்டில் தனது 53வது வயதில்தான் அமைச்சரானார்.!
ஆனால், உதயநிதி ஸ்டாலின், 2018ஆம் ஆண்டில்தான் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார்.2019 ஆண்டு நடைபெற்ற நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி.


தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், 2019ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி தி.மு.கவின் இளைஞர் அணி செயலாளராகத் தேர்தெடுக்கப்பட்டார். உதயநிதி ஸ்டாலின்.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, அடுத்த ஆண்டிலேயே அமைச்சராகவும் பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். தி.மு.கழக கூட்டணி.பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில், உதயநிதி ஸ்டாலினைப் போட்டியிட வைத்து வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை உருவாக்கிக் கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.!

கட்சிக்கு வெளியில் இருந்தவர்கள் உதயநிதியின் இந்த வளர்ச்சியை வாரிசு அரசியல் என விமர்சித்தாலும், கட்சிக்குள் இதுபற்றி எந்த முணுமுணுப்பும் இல்லை!. இந்த காலகட்டம்வரை, தந்தையின் செல்வாக்கிலேயே அரசியல் செய்பவராக உதயநிதியை சித்தரிக்கப்பட்ட நிலையில்தான், சனாதனம் குறித்த அவருடைய சமீபத்திய பேச்சு, அவரை வேறு
கோணத்தில் தமிழக அரசியல் களம் பார்க்க வைத்திருக்கிறது!.இந்தியாவில் பல மாநிலக் கட்சிகளில் வாரிசுகளே ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள்.!
பா.ஜ.க. 2014ல் ஆட்சிக்கு வந்த பிறகு, கட்சியின் பிரதான கொள்கைகளில் தடுமாறிய பல மாநிலக் கட்சிகள் இன்றளவும் சிக்கல்களை எதிர்கொண்டுதான் வருகின்றன.!
பல பிராந்தியக் கட்சிகள் மிகச் சிறியதாகவும் சுருங்கிவிட்டன!.

ஆனால், கட்சிக்குள் தனது ஆதரவைப் பெருக்கிக்கொள்ள உதயநிதி இப்படியெல்லாம் பேச வேண்டியதில்லை!இது இயல்பாகவே நடந்த விஷயம்தான் என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள் பலர்.!
உதயநிதி ஸ்டாலினைப் பொறுத்தவரை தி.மு.கவில் இளைஞரணி செயலாளராக, வழக்கமான தனது கட்சிப் பணிகளைப் போல இப்போதுகூட இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு சென்று வந்திருக்கிறார். முதல்வர் வர முடியாத நிகழ்ச்சிகளுக்கு அவர்தான் அழைக்கப்படுகிறார்!. ஆகவே, கட்சிக்காரர்கள் தன்னை ஏற்க வேண்டும் என்பதற்காக அப்படிப் பேசினார் எனச் சொல்வதற்கும் வாய்ப்பு இல்லை!
உதயநிதியின் அரசியல், கட்சிப் பணிகள் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். ஆனால், இதில் எதிர்பாராத நிகழ்வு என்பது பா.ஜ.க. இதனை பெரிய அளவில் முன்னெடுத்துச் சென்றதுதான்" சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட கதையாக மாறியுள்ளது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்!

அதேசமயம்சாதாரண , சமான்யமக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் தனது பேச்சு, செயல்களால், உதயநிதி குறித்த ஏற்புத்தன்மையை அதிகரிக்க இந்தப் பேச்சு உதவியிருக்கிறது என்கிற கருத்தும் முக்கியத்துவம் பெறவேச் செய்கிறது.!
உதயநிதியின் அரசியல் வளர்ச்சி குறித்து, காழ்ப்புணர்ச்சி, தனிமனித வன்ம அரசியலை திட்டமிட்டு பரப்பிவந்த பலருக்கும் அவர்களின் மனதில் இந்த பேச்சு மாற்றத்தையேஏற்படுத்தியிருக்கும். !
இந்த விவகாரத்தை தி.மு.கழகமும். சரியாகவே கையாண்டது. இதில் செய்வதறியாத நிலையில் பா.ஜ.க.வின் அடுத்தகட்ட அரசியல் நகர்வாக
அன்றைய கூட்டத்தில் இருந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பதவி விலக வேண்டும் என பா.ஜ.க. விமர்சிக்க தொடங்கியது.!
அடுத்த நாளே இரண்டரை ஆண்டுகளில், தி.மு.கழகம் ஆட்சியில் 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது என்ற செய்தியும்அதற்கடுத்து, இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் நடத்தி வைக்கப்பட்ட திருமணங்கள் உள்ளிட்ட துறைரீதியில்.தி.மு.கழகம் தனது ஆட்சிகாலத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் - முயற்சிகள் பற்றிய பட்டியலும் வெளியாகி இந்து எதிர்ப்பாளராக தி.மு.கழகத்தை.முன்னிறுத்த நினைத்தவர்களுக்கு இது பலத்த சம்மட்டியாகவும் அரசியல் களத்தில் பார்க்கப்பட்டது.!

சனாதன கருத்து பேச்சான,இந்த விவகாரத்தை, தெரிந்தோ தெரியாமலோ கையில் எடுத்ததன் மூலம், நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் என்ற பெயர் பிரபலமாக பா.ஜ.க. உதவியிருக்கிறது என்கிற கருத்தும் நிதார்சனமாகவே உள்ளது.!
உதயநிதி கலந்துகொண்ட கருத்தரங்கு குறித்த போஸ்டர்கள் ஒரு வாரத்திற்கும் மேலாகவே வாட்சப்பில் வந்துகொண்டிருந்தன. சனாதனத்தை ஒழிப்போம் என்று மாநாடு நடத்தும்போது, அதை விரும்பாதவர்கள் மாநாடு நடத்தும் முன்பே சென்று தடை வாங்கியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை? என்கிற கேள்வியும் சிந்திக்க வேதூண்டுகிறது!

தி.மு.கழக. கூட்டணி, இந்தியா கூட்டணியின் அச்சாணியாக செயல்படுகிறது. அந்த அச்சாணியைக் கழற்றிவிட வேண்டும் என நினைத்து இதைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.! அகில இந்திய அளவில் தி.மு.கவிற்கோ, உதயநிதி ஸ்டாலினுக்கோ பெயர் கிடைத்தாலும் அதனால் எந்த இழப்பும் பா.ஜ.கவுக்கு இல்லை. !,
காரணம்,தமிழ்நாட்டிற்கு வெளியில் தி.மு.கழகம். இல்லை. அதேசமயம், எப்படியோ இந்த சர்ச்சையை வைத்து இந்தியா கூட்டணியில் சிக்கல் வந்துவிடாதா என்கிற எதிர்கட்சிகூட்டணி கட்சியினரின் கருத்தும் கவனத்தை ஈர்க்க வே செய்கிறது! .

அதேசமயம் உதயநிதியின் பெயரை பிரபலமாக்கியிருப்பது தான் தி.மு.கழக- இந்தியா கூட்டணியை சிறுமைப்படுத்தி, பிளவு முயற்சியில் ஈடுபட்டவர்களின் தலையில் இடியாகவே இறங்கியுள்ளது.!
கடந்தகாலங்களில், உதயநிதி ஸ்டாலின் பேசிய பல அரசியல் கருத்துக்கள் சர்ச்சையாக்கப்படாமலில்லை,.2021ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி தாராபுரத்தில் நடந்த தேர்தல் பேரணியில், சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி இருவரும், பிரதமர் நரேந்திர மோடியின் 'சித்திரவதை' மற்றும் 'அழுத்தம்' காரணமாக இறந்ததாக உதயநிதி குற்றம் சாட்டிப் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், இந்த கருத்தை மறுத்து ட்விட்டரில் பதிவிட்டார். அருண் ஜேட்லியின் மகள் சோனாலி ஜேட்லி பக்ஷியும் இந்தக் கருத்தை மறுத்தார். இதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பியது.இந்த நோட்டீசிற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், பிரச்சாரத்தின் போது முழு உரையையும் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளத் தவறியதாகவும், ஓரிரு வரிகளை மட்டுமே தனியாக கவனித்திருப்பதாகவும் விளக்கமளித்து அந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்ததும் குறிப்பிடதக்கது.¡

தாராபுரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோதி, ''தி.மு.க.வின் இளவரசர் கட்சியில் மூத்தவர்களை ஓரம்கட்டிவிட்டு பதவி வாங்கிவிட்டார்'' என்று உதயநிதியை விமர்சித்துப் பேசினார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, 'மோதி எத்தனை மூத்த தலைவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு குஜராத் முதல்வராக பொறுப்பேற்றார் தெரியுமா?' என்று கேள்வியெழுப்பியதோடு, மேலே சொன்ன கருத்தையும் தெரிவித்தார். அந்தத் தருணத்திலும் உதயநிதி பேசியதும் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளும் நாடு முழுவதும் மிகுந்த பரப்பரப்பு செய்தியாயின!.
உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பேச்சுகள் சிலவும் இதற்கு முன்பாக பரவலாக கவனிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டதை குறித்து, ஒரு செங்கலை கையில் வைத்தபடி உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு மிகவும் பிரபலமாகி, மக்களின் கவனத்தை பெற்றதாகவேயிருந்தது.! இது காட்சியாகவும் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவிலும் வலம்வந்தது.!


பொதுவாக உதயநிதி ஸ்டாலின் ஊடகங்களிடம் பேசும்போது, மிகச் சரளமாக மனதில் பட்டதைப் பேசுவதைப் போன்ற எதார்த்த தொனி இருக்கிறது!.
குறிப்பாக, சனாதம் குறித்த அவரது பேச்சு குறித்து ஊடகத்தினர் மீண்டும் மீண்டும் அவரிடம் கேள்வியெழுப்பியபோதும், அதற்கு முன்பாக பெரியார், மு.கருணாநிதி, திருமாவளவன், ஆ. ராசா என யாரெல்லாம் சனாதனம் குறித்துப் பேசியிருக்கிறார்கள் என்ற நீண்ட ஆதாரங்களை பட்டியலிட்டு பேசியதும் கவனிக்கத்தக்கதாக வேண்டியதாகவே உள்ளது.!
ஆனால், தந்தைபெரியார், முத்தமிழறிஞர் கலைஞர், ஆ. ராசா, திருமாவளவன் ஆகியோருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருந்தது!.
மேலே குறிப்பிட்ட தலைவர்கள் அனைவரது அரசியலின் அடிப்படையாக இந்து மத எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு என்பதே!

அதைத்தான் காலத்திற்கேற்ப, சனாதன எதிர்ப்பு, கசப்புமருந்தை தேன் கழந்து கொடுத்த கதையாகவே, உதயநிதியின் பேச்சும் என்கிற கருத்தையும் எளிமையாக கடந்தும் சென்றுவிட முடியாது?

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தொடர்ந்து தனது பேச்சிலும் எழுத்திலும் சனாதன எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்குவது போன்ற திட்டங்களையும், தமிழகம் முழுவதும் சாதி - மத, வேறுபாடுகளை கடந்து அவர்கள் முன்னேறவும் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவர காரணமாகயிருந்தார்.!

அவரின் பெயர்சொல்லும் பேரனாக, திராவிட தமிழர்களின் ஒரு மித்தக்குரலாக,தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை கடைபிடிப்போர் மீதான இத்தகைய போர் தொடர வேண்டும். சாதி - மதங்களின் சாயல்கள் தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.!
உறியடி செய்திக்குழு




Comments