top of page
Search

மும்பை ஐ.ஐ.டி.யில் தமிழ்நாடு மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்! முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டணம்!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Feb 21, 2023
  • 2 min read

ree

மும்பை ஐ.ஐ.டி. மாணவர்கள் மீது தாக்குதல். தி.மு.கழகத்தலை வர்,தமிழ்நாடு முதல் அமைச்சர்.மு.க.ஸ்டாலின் கண்டணம்!


மும்பை ஐஐடியில் மர்ம மரணம் அடைந்த தலித் மாணவர் தர்ஷன் சொலான்கிக்கு நீதி கேட்டு இடதுசாரி மாணவர் அமைப்பினர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜே.என்.யு) நேற்று முன்தினம் மாலை ஊர்வலம் சென்றனர். இதைத்தொடர்ந்து ஐஐடி வளாகங்களில் தலித், இஸ்லாமியர் உள்ளிட்ட விளிம்பு நிலை சமுதாயங்களை சேர்ந்த மாணவர்கள் மர்மமான முறையிலும், தற்கொலை செய்தும் உயிரிழந்து வரும் நிலையில் இதன் பின்னணியில் சாதி, மத ஒடுக்குமுறை இருக்கிறது என்பது குறித்தான ஆவணப்படம் ஒன்று அங்குள்ள மாணவர்கள் சங்க அலுவலகத்தில் திரையிட திட்டமிடப்பட்டு இருந்தது. இதில் இடதுசாரி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அதேப்போன்று தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஜே.என்.யுவில் பயிலும் மாணவர்களும் பங்கேற்றனர்.

இதையடுத்து கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த சத்ரபதி சிவாஜியின் படம் மர்மமான முறையில் சேதம் அடைந்து இருந்தது. இதற்கு சொலான்கி மரணத்துக்கு நீதி கோரி ஊர்வலம் சென்ற மாணவர்கள் தான் காரணம் எனக்கூறி, ஏபிவிபி அமைப்பினர், ஆவணப்படம் திரையிடப்படவிருந்த அரங்கிற்கு சென்று அங்கிருந்த மற்ற மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதலின் போது அங்கிருந்த பெரியார், அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ் உள்ளிட்டோரின் படங்களையும் ஏ.பி.வி.பி மாணவர்கள் அடித்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும் இந்த தாக்குதலில், தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உட்பட பலர் படுகாயமடைந்தனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் நாசர் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காயமடைந்த மாணவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விடாமலும் ஏ.பி.வி.பி.யினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பதற்றமான சூழல் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டது.

ree

சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் லேசான காயமடைந்தவர்கள் மீண்டும் பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பியுள்ள நிலையில், பலர் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து மக்கள் அதிகாரம் முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 19 /2 /2023 அன்று இரவு ஆர்எஸ்எஸ் மற்றும் ஏபிவிபி ரவுடி கும்பல்கள் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இடதுசாரிய, அம்பேத்கரிய, பெரியாரிய, ஜனநாயக, முற்போக்கு மாணவர் அமைப்புகளை அழித்து ஒழிக்க நீண்ட காலமாகவே பாஜக, ஆர்எஸ் எஸ் கும்பல் துடித்துக் கொண்டிருக்கிறது. பாசிச மோடி, கார்ப்பரேட் எதிர்ப்பு அரசியல் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இதர மாநிலங்களை சேர்ந்த மாணவர்களால் பேசப்பட்டு வருகிறது.

சமூக பிரச்சினைகளில் மாணவர்களின்‌ பங்களிப்பு ‌பற்றி கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அண்மையில் வேங்கை வயல் என்ற கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தை கலந்த கொடுமைக்கு முடிவு கட்ட கோரி அங்கு மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். பெரியார் பிறந்த நாளையும் கொண்டாடியுள்ளனர் .மோடி கொஸ்டின் ஆவணப்படத்தை

ஏராளமான மாணவர்கள்

பார்த்துள்ளனர்.

இதை பொறுக்காத ஆர்எஸ்எஸ் கும்பல் நேற்று இரவு மாணவர் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த மார்க்ஸ், பெரியார்,பூலே படங்களை உடைத்தும் கிழித்தெறிந்தும்

ரவுடித்தனம் செய்துள்ளனர். இந்த அடா‌வடித்தனத்தை தட்டி கேட்ட மாணவர்கள் தமிழ் நாசர் உட்பட பல்வேறு மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ் நாசரின் மண்டை உடைந்து மிக ஆபத்தான முறையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோடி அரசை அம்பலப்படுத்துவர்களையும் ஜனநாயக அமைப்புகளின் மீதும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி பல்கலைக்கழகங்களை காவிமயமாக்கி வருகிறது ஏபிவிபி , ஆர் எஸ் எஸ், பாஜக பாசிச குண்டர் படை .

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரியார் ஆதரவு மாணவர் பிரவீன் கொடூரமாகத் தாக்கப்பட்டு கால் உடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பாசிசத்தின் அடையாளமே வன்முறை தானே, காலிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

ஜேஎன்யூ, ஜாமியா மிலியா, ஐஐடி போன்ற நிறுவனங்களை காவிகளின் கூடாரமாக ஆக்குவதே பாசிஸ்டு களின் நோக்கம். தமிழகத்திலும்

பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பது,

திருவள்ளுவர் சிலைக்கு காவி

சாயம் பூசி இழிவு படுத்துவது என கலவரத்தை தூண்டுவதற்காக

அடாவடியில் ஈடுபட்டு வருகிறது காவி கும்பல். இது காவி கார்ப்பரேட் பாசிசத்தின் ஒரு அங்கமே என உணர்ந்து இதற்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக்க வேண்டும்.

இந்த குற்ற கும்பலை உடனே வேரோடு நாம் பிடுங்கி எறிய வேண்டிய தேவை உள்ளது. தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் மாணவர் சமூகமும், ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுப்போம். JNU மாணவர்களுக்கு ஆதரவான போராட்டங்களை நாடு முழுவதும் கட்டியமைப்போம், மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்போம்.


 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page