பற்றி எரியும் மணிப்பூர்! மெளனம் காக்கும் மோடி! ராகுல்2 நாள் பயணம்! முடிவுக்கு வருமா? சர்ச்சைகள்!
- உறியடி செய்திகள்

- Jun 28, 2023
- 2 min read
Updated: Jun 28, 2023

மணிப்பூரில் கலவரம் வெடித்துள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 29, 30-ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.!
பற்றி எரியும் மணிப்பூர்! மெளனம் காக்கும் மோடி! ராகுல்2 நாள் பயணம்! முடிவுக்கு வருமா? சர்ச்சைகள்!!

மணிப்பூரில் மைதேயி மற்றும் சிறுபான்மை பழங்குடி சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது முதல் தொடர்ந்து வன்முறை நிலவி வருகிறது. இதுவரை 120-க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மக்கள் வீடு மட்டுமின்றி மத்திய, மாநில அமைச்சர்களின் வீடுகளும் தீக்கரையாகியுள்ளது.
கலவரத்தை கட்டுப்படுத்த துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்ட போதிலும், மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை......!

பற்றி எரியும்.
மணிப்பூரில் அமைதி திரும்பப் பிரதமர் நரேந்திர மோடி குரல் கொடுக்க வேண்டும் என எதிர்க் கட்சிகள் வலியுறுத்திய போதிலும், இன்றைய மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அது குறித்து எதுவும் பேசவில்லை.
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் சில வாரங்களாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் அங்கே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த மாநிலமே பற்றி எரியும் நிலையில், பல இடங்களில் உயிரிழப்புகளும் கூட நிகழ்ந்துள்ளது. அங்கே இணையச் சேவையும் முடக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.!
மணிப்பூரில் மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், பெரும்பான்மையாக இருக்கும் மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்கப்பட்டால் அது தங்களுக்குப் பாதிப்பு எனக் குக்கி தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒட்டுமொத்த மணிப்பூர் மாநிலத்திலும் வன்முறை சூழ்ந்துள்ளது.
எதிர்க்கட்சிகள்: மாநிலம் முழுக்க பல அசம்பாவிதங்கள் அரங்கேறியுள்ளன. ராணுவம், அசாம் ரைபிள்ஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மாநில போலீசார் என பல்வேறு தரப்பினரும் குவிக்கப்பட்ட போதிலும், இன்னும் அங்கே அமைதி திரும்பவில்லை. பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி மணிப்பூர் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தியுள்ளார்.
❇️
மணிப்பூருக்கு உடனடியாக அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தார்கள்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமைதியை நிலை நாட்ட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினோம். அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவை மணிப்பூர் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினோம். மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஒரு உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்த வேண்டும் என அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் கோரிக்கை வைக்கப்பட்டது!

அங்கு சுமார் 45 நாட்களுக்கு மேலாக வன்முறை தொடரும் நிலையில், பிரதமர் மோடி இது குறித்துப் பேசாமல் அமைதி காப்பது ஏன்மன் கீ பாத்தின் 100 எபிசோட்களை கேட்டுவிட்டோம். இந்த முறை அது மணிப்பூர் கி பார்த்தாக இருக்கட்டும். மோடி தனது மவுனத்தைக் கலைத்து மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக வேண்டுகோள் விடுக்க வேண்டும்"இன்று 102ஆவது மன் கீ பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் மோடி கடைசி வரை மணிப்பூர் வன்முறை குறித்து எந்தவொரு கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.அவர் கடைசி வரை மணிப்பூர் வன்முறை குறித்து எதுவும் பேசவில்லை

இந்நிலையில், இரண்டு நாள்கள் பயணமாக ஜூன் 29-ஆம் தேதி ராகுல் காந்தி மணிப்பூர் செல்லவுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் பயணத்தின் போது கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்கவுள்ளார். மேலும், இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேசவுள்ளார்..
என்றும் தகவல்கள் கூறப்படுகின்றது!




Comments