top of page
Search

வணிக வளாகங்களில் தமிழில் பெயர்கட்டாயம்! புதுக்கோட்டையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அதிரடி பேட்டி!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • Aug 18, 2023
  • 3 min read
ree

மூத்த பத்திரிக்கையாளர் ராஜா


வணிக வளாகங்களில் தமிழில் பெயர்கட்டாயம்! புதுக்கோட்டையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அதிரடி பேட்டி!!

வணிக வளாகங்களில் வணிக நிறுவனத்தின் பெயர் தமிழ் அவசியம் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பது கட்டாயம். நமது தமிழ் வளர்ச்சித் துறையும் தொழிலாளர் நலத்துறையும் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர் தமிழில் பெயர் வைக்காதவர்களுக்கு எச்சரிக்கையும் செய்து வருகின்றனர். தமிழில் பெயர் வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராத கட்டணமும் விதிக்கப்பட்டு வருகிறது. வரக்கூடிய 10 நாட்களுக்குள் தமிழ் வளர்ச்சித் துறையும் தொழிலாளர் நலத்துறையும் இணைந்து மேலும் இதுகுறித்து நடவடிக்கைகளை ஆய்வு செய்ய இருக்கின்றோம். மேலும் இதற்கான விதிமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டு நிச்சயமாக எதிர்காலத்தில் அனைத்து வணிக நிறுவனங்களின் வைக்கக்கூடிய பெயர் பலகை கட்டாயம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்,


செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறல் பீட விருது 2012 இல் இருந்து வழங்கப்படவில்லை விருது வழங்குவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கக்கூடிய அனுமதி காலதாமதம் ஆகி உள்ளது அந்த அனுமதியை பெற்று விரைவாக அந்த விருதுகள் வழங்கப்படும்

இந்தி திணிக்கப்படுவதற்கு தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார், திமுக அரசு அந்த கொள்கையில் வலுவாக உள்ளது. எதைப் பற்றியும் நிச்சயமாக நாம் கவலைப்பட போவது கிடையாது எங்களது தாய் மொழியான தமிழ் மொழி முக்கியம் என்பதில் அழுத்தமாக உள்ளோம்.... அமைச்சர் சாமிநாதன்பேட்டி! புதுக்கோட்டையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசியே போது கூறியதாவது!


புதுக்கோட்டைக்கு வருகை தந்த தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் புதுக்கோட்டை அரசு கிளை அச்சகத்தினை ஆய்வு செய்தார். அதன் பின்னர் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்துடன் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை ஆய்வு செய்தார். அதன் பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவில் படித்த முதல் பெண் மருத்துவர் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டியின் சிலையை பார்வையிட்டார். இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ மெய்யநாதன்,வடக்கு மாவட்ட செயலாளர் கே கே செல்லபாண்டியன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


இந்த ஆய்வு பணிகளுக்கு இடையே அரசு கிளை அச்சகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில்:

அச்சுப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்கு தேவைப்படும் இயந்திரங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும், செம்மொழி மாநாடு தற்போது நடத்துவதற்கான நிலை இல்லை இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவெடுக்கப்படும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள் அவர்களிடத்தில் பேசி உலகில் வாழும் தமிழர்களின் எண்ணங்களை பிரதிபலிக்க கூடிய வகையில் அதற்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகள் மேற்கொள்ளப்படும், குறிப்பாக மும்பையில் தமிழ் சங்கத்திற்கு தேவையான கட்டடம் அமைப்பதற்கு இருக்கக்கூடிய கட்டடங்களை எல்லாம் பராமரிப்பதற்கு கூட நிதி கேட்டார்கள் அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் நிதியையும் ஒதுக்கி அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

அதேபோல் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் கோரிக்கைகள் வருகிறது. சமீபத்தில் பூஸ்டல் பல்கலைக்கழகத்திற்கு 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அங்கேயும் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு வகையில் தமிழ் வளர்ச்சி துறை மூலம் தமிழை வளர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.!

ree

தமிழ் பாடத்திட்டத்தை பொருத்தவரை முழுக்க முழுக்க பள்ளிக்கல்வித்துறை தான் முடிவெடுப்பார்கள் ஆலோசனைகள் தேவைப்படும். பொழுது நிச்சயமாக தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அதற்கு ஏற்ற ஆலோசனைகள் வழங்கப்படும்.

55,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திர தின உரையில் தெரிவித்து இருந்தார். அதில் அச்சகத்தில் உள்ள காலிப் பணியிடங்களும் உள்ளடங்கும்.

செம்மொழி தமிழாய்வு மையத்தின் குறல் பீட விருது 2012 இல் இருந்து வழங்கப்படவில்லை விருது வழங்குவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது ஒன்றிய அரசிடமிருந்து கிடைக்கக்கூடிய அனுமதி காலதாமதமாகி உள்ளது அந்த அனுமதியை பெற்று விரைவாக அந்த விருதுகள் வழங்கப்படும்.

அச்சு மற்றும் செய்தி ஊடகத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு ஏற்கனவே பட்டா இருந்தால் அவர்களுக்கு வழங்கப்படவில்லை தனிப்பட்ட முறையில் பட்டாக்கள் வாங்காதவர்களுக்கு உரிய முறையில் தகுதியின் அடிப்படையில் நிச்சயமாக வழங்கப்படும்.

அரசு அலுவலகங்களில் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பது அரசின் விதிமுறை அந்த அடிப்படையில் அது மீறப்படும் பொழுது அதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் மீண்டும் முறையாக தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்ற ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. அதேபோல் வணிக வளாகங்களில் வணிக நிறுவனத்தின் பெயர் தமிழில் அவசியம் இடம் பெற்று இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.‌ நமது தமிழ் வளர்ச்சித் துறையும் தொழிலாளர் நலத்துறையும் இணைந்து ஆய்வு செய்து வருகின்றனர். தமிழில் பெயர் வைக்காதவர்களுக்கு எச்சரிக்கையும் செய்து வருகின்றனர். தமிழில் பெயர் வைக்காத வணிக நிறுவனங்களுக்கு அபராத கட்டணமும் விதிக்கப்பட்டு வருகிறது. வரக்கூடிய 10 நாட்களுக்குள் தமிழ் வளர்ச்சித் துறையும் தொழிலாளர் நலத்துறையும் இணைந்து மேலும் இதுகுறித்து நடவடிக்கைகளை ஆய்வு செய்ய இருக்கின்றோம். மேலும் இதற்கான விதிமுறைகள் கட்டாயப்படுத்தப்பட்டு நிச்சயமாக எதிர்காலத்தில் அனைத்து வணிக நிறுவனங்களில் வைக்கக்கூடிய பெயர் பலகை கட்டாயம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை ஒன்றிய அரசு மூலம் இந்தி திணிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். தொடர்ந்து திமுக அரசு அந்த கொள்கையில் வலுவாக உள்ளது. எதைப் பற்றியும் நிச்சயமாக நாம் கவலைப்பட போவது கிடையாது எங்களது தாய் மொழியான தமிழ் மொழி முக்கியம் என்பதில் அழுத்தமாக உள்ளோம்.

யூடியூப் உள்ளிட்ட தளத்தை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சு ஊடகத்திற்கு என்று அதற்கான விதிமுறைகளும் வழிமுறைகளும் ஒன்றிய அரசு வகுத்துள்ள விதிமுறைகளில் உள்ளது. ஆனால் காட்சி ஊடகங்களுக்கு அதற்கான சரியான விதிமுறைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தவில்லை இது குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.!

ree

செய்தித்துறை டிஜிட்டல் உலகத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டு தான் வருகிறோம். முடிந்த அளவிற்கு நவீன மயமாக்குவதற்கு அரசின் மூலமாக என்னென்ன நடவடிக்கைகளை ஈடுபட முடியுமோ அதனை செய்துதான் வருகின்றோம்.

தேர்தல் நேரத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பிற்கு வரும்பொழுது செய்தியாளர்களுக்கு என்று நல வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் தற்பொழுது பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் கூட பத்திரிக்கையாளர்களை முன் களப்பணியாளர்களாக அறிவித்திருந்தார். 20 ஆண்டு காலத்திற்கு மேலாக பத்திரிகையில் தொடர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தால் ஓய்வூதியமாக பத்தாயிரம் என்று இருந்ததை பன்னிரண்டாயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் ஓய்வூதியம் வாங்கும் பத்திரிக்கையாளர் இயற்கை எய்து விட்டால் அவரது வாரிசுதாரருக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதற்கு தான் வாரியத்தில் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள் சாராத உறுப்பினர்கள் என்று அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களை அதில் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் அந்த ஆலோசனைகளை சொல்லி வருகின்றனர் அதற்கு ஏற்றார் போல் படிப்படியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page