தி.மு.க.வை எதிர்த்தால் பா.ஜ.கவை வளர்த்துவிட முடியுமா,அண்ணாமலை! நடிகர்எஸ்.வி.சேகர் சரமாறி கேள்வி!!
- உறியடி செய்திகள்

- Jun 9, 2023
- 2 min read

மணவை, எம்.எஸ்.ராஜா
தி.மு.க.வை எதிர்த்தால் பா.ஜ.கவை வளர்த்துவிட முடியுமா,அண்ணாமலை! நடிகர்எஸ்.வி.சேகர் சரமாறி கேள்வி!!
தமிழக பா.ஜ.க. களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டதா? இல்லை அண்ணாமலையின் கணக்கு தவறாகி போகிறதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!
பா.ஜ.க.வில் பிரமணர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுப்பதாக இலைமறை காய்மறையாக அங்கென்றும் இங்கென்றுமாக பேசப்பட்டு வந்த நிலையில், அதனை உறுதிபடுத்தும் விதமாக பா.ஜ.க. நிர்வாகிகளுள் ஒரு வருமான கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான நடிகை காயத்ரி ரகுராம் பல்வேறு விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது கடந்த சில தினங்களாக நடிகர் என்.வி.சேகர் பகீர் குற்றச்சாட்டுகளை கிளப்பி வருகிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பிராமண எதிர்ப்பு நிரூபணமாகிவிட்டது என மீண்டும்,நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்வி சேகர் குற்றம்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறப்படுவதாவது!
அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக வந்த போதிலிருந்தே அவர் யாரையும் மதிப்பதில்லை என மூத்த நிர்வாகிகளிடம் அதிருப்தி எழுந்தது. இந்த நிலையில் அண்ணாமலையின் திமுக எதிர்ப்பு செயல்பாடுகளை மூத்த நிர்வாகிகள் அமைதியாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எஸ்வி சேகர் அண்ணாமலைக்கு எதிராக பேச தொடங்கிவிட்டார். அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிராக பேசி செயல்படுகிறார். அவருக்கு ஜாதி வெறி அதிகம். பிராமணர்கள் முன்னேற கூடாது என அண்ணாமலை நினைக்கிறார் என எஸ்வி சேகர் அண்மையில் ஒன்இந்தியா அரசியல் யூடியூப் சேனலில் தெரிவித்திருந்தார்.

அது போல் பிராமணர்கள் சேர்ந்து ஒரு கட்சியை தொடங்க போகிறார்கள். அதற்கு என்னை தலைமையேற்க அழைத்தால் பாஜகவிலிருந்து விலகி செல்வேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்மையில் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் எஸ்.வி.சேகர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை யார் வேண்டுமானாலும் டெல்லியில் போய் என்னை பற்றி புகார் கொடுக்கட்டும்.
நான் இப்படித்தான் இருப்பேன். வேண்டுமானால் எஸ்வி. சேகருக்கு நான் பிளைட் டிக்கெட் போட்டுக் கொடுக்கிறேன். போய்ட்டு வரட்டும் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலையின் வார் ரூம் மூலம் எஸ்.வி.சேகரை கடுமையாக விமர்சித்து வருவதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பலமாக கசிந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் இன்று ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய எஸ்.வி.சேகர் கூறுகையில்.. நான் பிரதமர் நரேந்திர மோடியை மதிக்கிறேன். அதற்காக அவருடைய பியூனுக்கெல்லாம் நான் மரியாதை தர முடியாது. நான் வயதில் பெரியவன், என் காலில் சிறியவர் விழுவதுதான் நல்லது. பிரதமர் நரேந்திர மோடிதான் எனக்கு முக்கியம். அவருக்கு பெட்டி தூக்கும் நபருக்கெல்லாம் மரியாதை இல்லை. அண்ணாமலையை யாராவது பார்த்தால், இந்த பெட்டியை தூக்குப்பா.. என்று சொல்வார்கள். அவ்வளவுதான் அவரது முக அமைப்பு, அவ்வளவுதான் அவரது புகழ்.

பிராமணர்களை ஒழித்துவிட்டால் போதும் என அண்ணாமலை நினைக்கிறார். ஒரு பைசா கூட நான் யாரிடமும் வாங்கியதில்லை. நான் நேர்மையானவன். அக்னி வெயில் போய் கூட மண்டை சூட்டால் அண்ணாமலை உளறுகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசியலுக்கு அழைக்கப்பட்டவன் நான். எனக்கும், திருமாவளவனுக்கு நிறைய பிரச்சினைகள் வந்துள்ளன. ஆனாலும் இன்றும் நாங்கள் நண்பர்கள். சீமான், முதல்வர் ஸ்டாலின் என அனைவரும் நண்பர்கள்தான். ஆனால் அவர்களுடைய ஐடியாலஜி வேறு என்னுடையது வேறு. திமுக பொதுக் குழுவுக்கு கூட நான் அழைக்கப்பட்டேன்.
ஆனால் நான் திமுகவில் சேரவில்லை. காரணம் ஐடியாலஜிதான். அமைச்சர் செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என்கிறார். ஒரு படித்தவர் பேச்சும் பேச்சா இது. விபச்சார தடுப்புத் துறை அமைச்சர் என்றால் விபச்சார அமைச்சர் என சொல்லிவிடுவாரா. இதெல்லாம் அபத்தமாக இல்லையா? திமுகவை எதிர்த்தால் தமிழகத்தில் பாஜக ஜெயிக்கும் என தப்பு கணக்கு போடுகிறார் அண்ணாமலை.
நான் சொல்கிறேன் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருக்கும் வரை 1 சதவீதம் கூட தமிழக பாஜகவுக்கு நன்மையே நடக்காது. அண்ணாமலைக்கு ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்த செந்தில் என்பவர்தான் உறுதுணையாக இருக்கிறாராம். அவர்கள் இருவரும் ஒரே சமூகத்தினர். அண்ணாமலைதான் அடுத்த பிரதமர் என கூறிக் கொள்கிறார். அவருக்கு அடுத்து தேஜஸ்வி சூர்யா என்கிறார். ஒரு விமானத்தில் கதவை கூட எப்படி திறக்க வேண்டும் என தெரியவில்லை. இவர்களுக்கு பிரதமர் பதவிக்கான ஆசையை பாருங்கள். கட்சியின் தலைமை இனியாவதுஎன்னுடைய அனுபவத்தையும் திறமையையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறன்
இவ்வாறாக எஸ்.வி.சேகர் கருத்துக்களை கூறியுள்ளதாக பா.ஜ.க.வட்டாரத்தில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டுள்ளது.




Comments