கள்ளச்சாராயம் பற்றி எடப்பாடி கருத்து கூறலாமா? வெளிச்சத்திற்கு வந்த அதிமுக ஆட்சியின் புள்ளிவிபரங்கள்!
- உறியடி செய்திகள்

- May 18, 2023
- 3 min read
Updated: May 18, 2023

மணவை எம்.எஸ்.ராஜா....
கள்ளச்சராயம் பற்றி தனது ஆட்சியில் பல ஒட்டைகளை ஏற்படுத்தி, கண்டும்காணாதாது போலிருந்த எடப்பாடி இப்போது அதுபற்றி பேச தார்மீக உரிமை உள்ளதா?
அதிமுக ஆட்சியிலும் கள்ளச்சாராயம்! புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை!
ஒரு சமூக வளைதள பதிவின் மறுபதிவு!!
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் பலி நிகழ்ந்ததை தொடர்ந்து திமுக அரசை எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் வேலையை அவர் செய்துவிட்டு போகட்டும்.
ஆனால் வெட்கமே இல்லாமல் திட்டமிட்டு இட்டுக்கட்டி பொய் சொல்லியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாகரிகமின்றி பேசியும் தன்னை ஒரு மூன்றாம் தர அரசியல்வாதி என்பதை எடப்பாடி பழனிசாமி நிரூபித்துள்ளார்.
"கடந்த 10 ஆண்டு கழக ஆட்சியில் கள்ளச்சாராயம் என்ற ஒன்றே இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டுள்ளது பச்சை பொய். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதை டிவியில் பார்த்து தெரிந்துகொண்டதாக பச்சை பொய் சொல்லிய பழனிசாமி தனது ஆட்சியின் அவலங்களை மறைத்தாலும் மக்கள் மறக்க மாட்டார்கள்.
அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்பட்டதும் உண்மை என்பதற்கு ஊடகங்களில் ஆதாரங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
2017 ஜூலை 9: "முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் அமோக விற்பனை" (நியூஸ் 7)
2019 நவம்பர் 8: "சேலம் மாவட்ட எல்லையில் கல்வராயன்மலை பகுதியில் பள்ளி சீருடையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் வீடியோ வெளியிட்ட மாணவர்கள்"
2019 நவம்பர் 14: "சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை" (ராஜ் டிவி)
போன்ற செய்திகள் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த மாவட்டத்தில் கூட கள்ளச்சாராயத்தை தடுக்க முடியாத துப்புக்கெட்ட முதலமைச்சராக இருந்தார் என்பதை காட்டுகின்றன.
2019 ஜனவரி 11: பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் 750 லிட்டர் சாராயம் பறிமுதல். முடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் சிவகுமார் மீது வழக்கு"

2019 ஆகஸ்ட் 27: "சீர்காழி அருகே எடக்குடி வடபாதி கிராம அதிமுக பிரமுகரும், வைத்தீஸ்வரன்கோவில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க தலைவருமான அஞ்சம்மாள் கைது. வைக்கோல் போரில் 47 கேன்களில் 1600 லிட்டர் சாராயம் பறிமுதல்"
2021 ஜுன் 26: "ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து கள்ளச்சார ஊறல் போட்ட அதிமுக பிரமுகர் நேரு கைது"
2021 ஜூலை 27: "கோவை வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த அதிமுக பிரமுகர் கைது. வீட்டில் 150 லிட்டர் சாராய ஊறல், 4 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சாராய மூலப் பொருட்கள் பறிமுதல்"
போன்ற செய்திகள் கள்ளச்சாராய விற்பனையில் அதிமுகவினர் கோலோச்சுவதை தெளிவாக்குகிறது.
2013 அக்டோபர் 15: "வீட்டு விசேஷத்துக்கு சாராயம் தயாரிப்பு: விழிப்புணர்வு குறைவால் தாராளம்" (தினமலர்)
2018 மே 19: "நாகை மாவட்டத்தில் பட்டப்பகலில் கல்லூரிக்கு அருகிலேயே, ரூ.20 க்கு கள்ளச்சாராயம் விற்கும் சிறுவர்கள் : பரபரப்பு வீடியோ" (நியூஸ் 18)
2019 ஜூன் 25: "கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடும் கிராமம். மனநோயாளிகளாக மாறிக்கொண்டிருக்கும் அவலம்" (நியூஸ் 7)
2019 ஆகஸ்ட் 1: "திருவண்ணாமலை கீக்களூரில் படுஜோராக நடக்கும் கள்ளச்சாராய விற்பனை" (சத்தியம் நியூஸ்)
2019 செப்டம்பர் 1: "கடலூர் மாவட்டத்தில் செல்போனில் அழைத்தால் இருக்கும் இடத்திற்கே இருசக்கர வாகனத்தில் தேடிவரும் கள்ளச்சாராயம்" (நியூஸ் 18)
2019 அக்டோபர் 23: "வேலூர் மாவட்டம் விஜயேந்திரம் கிராமத்தில் வீட்டில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை...! - வைரல் வீடியோ" (புதிய தலைமுறை)
2020 ஜனவரி 14: "கள்ளச்சாராயம் வீட்டிலேயே காய்ச்சி விற்கும் பெண்கள்" (நியூஸ் 18)
2020ஏப்ரல் 14: "யூடியூப் பார்த்து கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்கள்"(பாலிமர் நியூஸ்)
2020 ஜூன் 26: "வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே கள்ளச்சாராய கடத்தல் பாதையை அடைத்தவரை நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட 3 பேர் கைது" (தந்தி டிவி)
2020 ஜூலை 28: "மயிலாடுதுறையில் பாண்டி ஐஸ் என்ற பெயரில் கள்ளச்சாராயம் விற்பனை" (ஜெயா பிளஸ்)
போன்ற செய்திகள் அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடியதை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
"கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி யோக்கியர் போல பேசுவது தான் காலக்கொடுமை.
2018 டிசம்பர் 5: "திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழப்பு" (தினத்தந்தி)
2019 மே 26: "காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒருத்தி கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து இருவர் உயிரிழப்பு" (நியூஸ் 7)
2020 ஏப்ரல் 14: "கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து சந்திரகாசன், மாயகிருஷ்ணன், சுந்தர்ராஜன் ஆகிய 3 பேர் உயிரிழப்பு" (தந்தி டிவி)
இவை தமிழ்நாட்டு ஊடகங்கள் அதிமுக தலைமையின் மிரட்டலை மீறி வெளியிட்ட செய்திகள். ஆனால் எடப்பாடி பழனிசாமி தனது எஜமான் மோடி அரசு வெளியிட அறிக்கைகள் அவர் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டதை பார்க்கவில்லை போலும்.
கடந்த 2022ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி., குன்வர் டேனிஷ் அலி கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு (UNSTARRED QUESTION NO. 458) எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், "2020ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் உயிரிழந்தனர்" என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல, 2016-2020 ஆண்டில் நடந்த மரணங்கள் (Accidental Deaths) தொடர்பாக NCRB வெளியிட்ட அறிக்கையில், "2020ஆம் ஆண்டில் 19 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 20 பேர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானே இருந்தது. கள்ளச்சாராயத்தால் 20 பேர் உயிரிழந்தது உள்துறை பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா? தெரியாதா?, அது கவனத்திற்கு வந்திருந்தால் எடப்பாடி பழனிசாமி என்ற மானஸ்தன் முதலமைச்சர் பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை?, சம்பவங்களை உளவுத்துறை மற்றும் காவல்துறை மூலம் தெரிந்துகொண்ட பிறகும் ராஜினாமா செய்யாமல் வெட்கம் மானம் ரோஷம் இல்லாமல் முதலமைச்சர் பதவியில் ஒட்டிக்கொண்டிருந்தாரா? போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.
குற்றம் நடந்தால் யாராக இருந்தாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வெளிப்படையான ஆட்சி திமுக ஆட்சி. அத்தகைய உடனடி நடவடிக்கையை எக்கியார் குப்பம், பெருங்கரணை சம்பவங்களிலும் திமுக அரசு எடுத்துள்ளது. குற்றம் நடந்தால் மூடிமறைத்துவிட்டு நடக்கவேயில்லை என ஊடகங்கள் மூலம் மக்களை ஏமாற்றுவது அதிமுக ஆட்சி. அதனால் தான் அதிமுக ஆட்சிக் காலத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும், மரணங்களையும் மறைத்துவிட்டு, "10 ஆண்டுகளில் எந்தவொரு சம்பவமும் நடக்கவேயில்லை" என சொல்வதற்கு எடப்பாடியின் அரசியல் நாகரீகம் மட்டுமல்ல. மக்களைவெ முட்டாள்கள் என நினைப்பதுதான்ே வேதனையிலும் வேதனை! அது பற்றிய சிந்தனை எடப்பாடி பழனிசாமியிடம் துளியும் இல்லை என்பதை அவரின் பேச்சும் அறிக்கையும் வெளிக்காட்டுகின்றன.
அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்படவே இல்லை என பச்சை பொய்யை மீண்டும் சொல்வதை எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொள்ள வேண்டும்.
என்பதே கடந்த எடப்பாடி ஆட்சியில் நடந்த இத்தகைய சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே உள்ளது.




Comments