காவிரி கரை, குடிநீர் ஆதாரங்களில் திடீர் ஆய்வு! அமைச்சர் கே.என்.நேரு அதிரடி நடவடிக்கை!!
- உறியடி செய்திகள்

- Oct 23, 2022
- 1 min read

காவிரி கரையேரங்களில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் திடீர் ஆய்வு! அமைச்சர்.கே.என்.நேரு அதிரடி நடவடிக்கை!
காவிரியாற்றில், அமைக்கப்பட்டுள்ள ராட்சத ஆழ்குழாய்கிணறுகளிலிருந்து, எந்திரங்கள் மூலமாக குடிநீர் திருச்சி மாநகராட்சி உள்ளிட்ட பிற பல மாவட்டங்களுக்கு தண்ணீர் குழாய்களின் மூலமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக தொடர் மழையும், புயல், பருவமழை வெள்ளபெருக்காலும் காவிரியாற்றின் இருபுற கரைகளையும், தொட்டுச் செல்லும் அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தி.மு.கழக தலைவர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி திருவரங்கம் பகுதி யாத்திரி நிவாஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திறு வெறும்பூர் தலைமை நீர் சப்ளை செய்யும் காவிரியாற்றில் அமைந்துள்ளராட்சத ஆழ்குழாய்மையத்தை தி.மு.கழக முதன்மைச் செயலாளாரும் நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது ஆற்றுவெள்ளத்தில் பாதிப்புக்குள்ளான, நீரேற்ற வழித்தடங்கள், தூண்கள், குழாய்களை உடனடியாக, துரிதமாக பழுது சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை, அறிவுத்தல்கள் வழங்கி பணிகளை துரிதப்படுத்தினார்
திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் மற்றும் சம்மந்தபட்ட அதிகாரிகள் உடன் சென்றார்கள்....
மணவைஎம்.எஸ்.ராஜா




Comments