சென்னை-28தொகுதி கள், ரூ.295 செலவில் மின்சுற்றுவட்டப்பாதை! அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!
- உறியடி செய்திகள்

- May 3, 2023
- 1 min read

ஆசிரியர் மணவை, எம்.எஸ்.ராஜா...
சென்னை மற்றும் புறநகர், 28. தொகுதிகளில் மின்சுற்றுப்பாதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!
தி.மு.கழகத்தலைவர்,
தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமயிலான அரசு கடந்த இரண்டாண்டுகளில், அனைத்து துறைரீதியிலும் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகளை அறிவித்து பெரும்பாலான துறைகளின் மக்களுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி தி.மு.கழக இளைஞரணிச் செயலாளர் தமிழ்நாடு
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகர் மற்றும் புறநகர் உட்பட 28 சட்ட மன்ற தொகுதிகளில் ரூ.295.97 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட 2,042 வளைய சுற்றுத்தர ஆர்.எம்.யூ.அமைப்புக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து தொடங்கிவைத்தார்.

அமைச்சர்
செந்தில்பாலாஜி
மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் .ராஜேஷ் லக்கானி, சென்னை பெருமாநகராட்சி மேயர் பிரியா, இயக்குநர்/பகிர்மானம் சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.




Comments