சென்னை:வேளாண் திருவிழா! அனைவரும் வருகைதரஉள்ளன் போடு அழைக்கிறேன்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
- உறியடி செய்திகள்

- Jul 9, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா...
சென்னை:வேளாண் திருவிழா! அனைவரும் வருகைதரஉள்ளன் போடு அழைக்கிறேன்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழா 2023-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து, பார்வையிட்டார்.!
வேளாண் உற்பத்திப் பொருட்களை மதிப்புக்கூட்டுப் பொருட்களாக மாற்றிட வேண்டும் என நான் தொடர்ந்து சொல்லிவந்தது, இப்போது வேளாண் வணிகத் திருவிழா 2023 மூலமாக நனவாகியிருப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.!

நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் 8 ஜூன் வரை நடைபெறும் இந்த வேளாண் வணிகத் திருவிழா 2023-க்கு நீங்கள் எல்லோரும் வருகை தர வேண்டும் என உள்ளன்போடு அழைப்பு விடுக்கிறேன்.!
176 கண்காட்சி அரங்குகள் இந்த வேளாண் வணிகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 86 அரங்குகளில் 188 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் விளைபொருட்களும், 90 அரங்குகளில் பல்வேறு அமைப்புகள் சார்ந்த கண்காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன!

.நமது பாரம்பரிய முறைப்படி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் புதிய தலைமுறையினரையும் கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த உற்பத்திப் பொருட்கள் பல்வேறு Online தளங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.” என்று கூறினார்.
தி.மு.கழக உயர் மட்ட செயல்திட்டக்குழு உறுப்பினர், கடலூர் மாவட்ட செயலாளர் தருமபுரி மாவட்ட பொருப்பு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.!




Comments