சென்னை பட்டமளிப்பு விழா! 14,விருதுகள் பெற்று சாதனை படைத்த மாணவி! பேராசியராகவே விருப்பம்! பேட்டி!!
- உறியடி செய்திகள்

- Jul 8, 2023
- 1 min read

மூத்தப்பத்திரிக்கையாளர் ராஜா.
மீன்வள பல்கலை பட்டமளிப்பு விழா 14 விருதுகள் பெற்ற நாகை மாணவி!
நாகை மாவட்டத்தில் உள்ள, ஜெயலலிதா மீன்வளப் பல்கலையின் எட்டாவது பட்டமளிப்பு விழா, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலை கலையரங்கத்தில்நடந்தது.
ஆராய்ச்சி படிப்பு முடித்த, 22 பேர், முதுநிலை படிப்பை முடித்த, 51 பேர், இளநிலை படிப்பை நிறைவு செய்த, 313 பேர் என மொத்தம், 386 பேருக்கு, கவர்னர் ரவி பட்டங்கள் வழங்கினார்.!
ஆராய்ச்சி படிப்பு முடித்த, 22 பேர், முதுநிலை படிப்பை முடித்த, 51 பேர், இளநிலை படிப்பை நிறைவு செய்த, 313 பேர் என மொத்தம், 386 பேருக்கு, கவர்னர் ரவி பட்டங்கள் வழங்கினார்.
விழாவில்,
இந்தியாவில், 2.80 கோடி பேர், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம், ஆந்திராவில் இருந்து இறால் ஏற்றுமதி அதிகளவில் செய்யப்படுகிறது.
கடந்த, 2014ம் ஆண்டுக்கு பின், இந்த துறை அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இத்துறையில், தமிழகத்திற்கு இந்தாண்டு, 1,200 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீன்வளத் துறையில், நாடு முழுதுமான நம்முடைய ஏற்றுமதி வருவாய், 64,000 கோடி ரூபாயாக இருக்கிறது. என்றார் ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன்!

பட்டமளிப்பு விழாவில், ஆராய்ச்சி, முதுநிலை மற்றும் இளநிலை பட்டப் படிப்பில் சிறந்து விளங்கிய, 14 மாணவ- - மாணவியருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், இளநிலை பட்டப்படிப்பில் சிறந்து விளங்கிய மாணவி ஐஸ்வர்யா, 14 விருதுகளை பெற்று அசத்தினார். அவரைத் தொடர்ந்து, மாணவி கமலி, முதுநிலை படிப்பில், ஆறு விருதுகளை பெற்றார்.
14 விருதுகள் பெற்ற நாகப்பட்டினம் மாணவி ஐஸ்வர்யா பேசுகையில்....!
என் தந்தை விரும்பியபடி, இந்த படிப்பை தேர்வு செய்து படித்து முடித்துள்ளேன். விருதுகள் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை தாய், தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன். மேற் படிப்பு அனைத்தையும் முடித்து, பேராசிரியராக பணியாற்றுவதே என் விருப்பம்.
என்றார்!
சமூகத்திற்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை படைத்த மாணவி ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுகள்!




Comments