சென்னை:வீட்டின்மேற்கூரை இடிந்து பலியான பெண் குடும்பத்திற்கு நிவாரணம். அமைச்சர் கே.என்.நேருவழங்கினார்
- உறியடி செய்திகள்

- Nov 4, 2022
- 1 min read

சுழற்றும் முதல்வர் - சுழலும் அமைச்சர்கள்.
சென்னை புரசைவாக்கம் பகுதியில், வீட்டின் மேற்கூரை இழந்துவிழுந்து பரிதாபமாக உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, முதல்வ ர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர்கள் கே .என்.நேரு, பி.கே.சேகர்பாபு. மேயர் ப்ரியா ஆகியோர் நேரில் சென்று நிவாரண உதவிதொகை காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார்கள்......
வடகிழக்கு பருவமழை, இதனை தொடர்ந்து ஏற்பட்ட, புயல் மழை வெள்ளம், ஆகியவற்றினை தடுக்கும் பணிகள், நிவாரணப் பணிகள், மீட்புப் பணிகள் ஆகியவற்றை தி.மு.க.தலைவர் தமிழ்நாடு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நேரிடையான கண்காணிப்பில் வைத்து அனைத்துத்துறை கண்காணிப்பு மையங்களில் நேரில் சென்று பொதுமக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் விரைந்து செய்து தர அரசு நிர்வாக இயந்திரங்களை முடுக்கிவிட்டு பணிகளை மேற்கொண்டுவருவதுடன், பாதிப்புக்குள்ளான பகுதிகள், மற்றும் பிற முக்கிய இடங்களுக்கு அமைச்சர்களை நேரில் அனுப்பி தேவையான பணிகளை அனைத்தையும்விரைந்து முடிக்க உத்தரவிட்டும், அவற்றினை தனி அக்கரையுடனும் கவனத்துடனும் கண் காணித்தும் வருகின்றார் .இதனால் சென்னை மாநகரம் முழுக்க அனைத்து விதமான நிவாரண பணிகள், உடனுக்குடன் மேற்க்கொள்ளப்பட்டும் வருகின்றது. மேலும் உதவிகள் தேவைபடுவோர் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு மையங்களும் செயல்பட்டு வருகின்றது.

இதனை தொடர்ந்து, தி.மு.கழக முதன்மை செயலாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம்- குடிநீர் வழங்கல் துறை அமைச்சர், கே.என்.நேரு சாந்தியின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து, முதல்வரின் உத்தரவுப்படி ரூ.4.லட்சத்திற்கான காசோலை இன்று வழங்கி பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன். அரசின்என்ன உதவி தேவையென்றாலும், என்னையோ, அமைச்சர்.பி.கே.சேகர்பாபு, மேயர் ப்ரியா ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் அக்குடும்பத்திரிடம் கேட்டுக் கொண்டார்.சென்னை மாவட்ட தி.மு.கழக செயலாளர், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ.தாயகம் கவி. மேயர் பிரியா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் சென்றார்கள்.




Comments