சென்னை: கடல்நீரை குடிநீராக்கம் திட்டம்! முதல் அமைச்சர் துவக்கிவைக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு தகவல்!
- உறியடி செய்திகள்

- Apr 18, 2023
- 1 min read


சோழிங்கநல்லூர் பகுதியில் பாதாள சாக்கடை, கால்வாய்கள் சீரமைப்பு. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் துரித படுத்தப்பட்டு, இரண்டு மாதங்களில் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட உள்ளது. அமைச்சர் கே.என்.நேரு தகவல்.
சட்டமன்றத்தில் நேற்று.ஏப்.17. திங்கட்கிழமை,கேள்வி நேரத்தில் பதிலளித்து பேசிய தி.மு.கழக முதன்மைச் செயலாளர், சேலம் மண்டல கழக பொருப்பாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது.....

சோழிங்கநல்லூர் தொகுதி, பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஒக்கியம் துறை பாக்கம், உத்தண்டிசெம்மஞ்சேரி உள்ளிட்ட 14 பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு சுமார் 7.65 லட்சம் மக்கள்தொகை 5.337 தெருக்கள் கொண்ட இப்பகுதியில் ௹.52 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளும் பள்ளிக்கரனை பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் மூன்று கழிவுநீர் சேகரிப்பு மண்டலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. வேளச்சேரி - தாம்பரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் மண்டலஅமைப்புப் பணிகள்செப்.30க்கும் முடிவடையும்,


இல்லம் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகின்றது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 150, எம்.எல்.டி.புதிய திட்டம் இருமாதங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் 79 ஆயிரம் மக்கள் பயனடைவார்கள். குடிநீர் திட்டத்தில் 110, எம்.எல்.டி
தரப்படுகின்ற தண்ணீர், 150 எம்.எல்.டி.யாக சோழிங்கநல்லூரையும் சேர்த்தும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இரண்டு மாதங்களில், கழகத் தலைவர் தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி யாரால் தொடங்கிவைக்கப்பட உள்ளது. நகரத்தையெட்டிய ஊராட்சிப்பகுதிகள், உள்ளாச்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிந்த பின் நகரத்துடன் இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டபோதே நகரத்துடன் இணைக்கப்படவுள்ள பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அப்பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது....
இவ்வாறாக அமைச்சர் கே.என்.நேரு பதிளித்து பேசினார்.




Comments