சென்னை: சுவாதி கொலை வழக்கு மீண்டும் விசாரணை! ராம்குமார் குடும்பத்திற்கு இழப்பீடு
- உறியடி செய்திகள்

- Nov 3, 2022
- 1 min read

சுவாதி கொலை வழக்கில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்த இளைஞர் ராம்குமார் வழக்கை மீண்டும் விசாரிக்கவும், அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டுமென மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது......
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி, அதிகாலை யில் வேலைக்குச் செல்ல ரயில் நிலைய நடைமேடையில் காத்திருந்த இளம்பெண் பொறியாளர் சுவாதி என்பவர், இளைஞர் ஒருவரால் அரிவாளால் கழுத்து அறுத்து கொலை செய்யபட்டார்.
பட்ட பகலில் மக்கள் கூடும் ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்திய போலீசார், தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் என்பவரை கைது செய்தனர்.
கைது செய்யும் போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சிறையில் மின்சார வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம் பல்வேறு முக்கிய அரசியல் கட்சிகள், சமூக பொதுநல அமைப்பினர்கள் ராம்குமார் மரணத்தில் பல்வேறு மர்மமானசந்தேகங்கள் உள்ளதாக கடும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில்மகன் ராம்குமார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் நடந்துவந்த நிலையில், ராம்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
அதில் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் ராம்குமாரின் உடலில் 12 காயங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த வழக்கில் மீண்டும்,சுதந்திரமான விசாரணை நடத்த தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ராம்குமார் குடும்பத்துக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுவாதிக்கும் ராம்குமாருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும் நாளடைவில் ராம்குமார் சுவாதி மீது ஒருதலைக் காதல் கொண்டு அதனை அவரிடம் வெளிபடுத்தியுள்ளார். ஆனால் அதனை ஏற்காததால் சுவாதியை கொலை செய்ததாகவும் காவல்துறை தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கொலை வழக்கு விசாரணையில் இருந்தபோதே கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை,செய்துக்கொண்டதால் கொலை வழக்கு முழுமையாக விசாரிக்கப்படாமல் முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




Comments