கோவை பில்லூர் குடிநீர் திட்டம் முதல்வர் துவக்கி வைக்கிறார்! அமைச்சர் கே.என்.நேரு தகவல்!!
- உறியடி செய்திகள்

- May 9, 2023
- 2 min read


மணவை எம்.எஸ்.ராஜா....
கோவை: பில்லூர் திட்டம் முதல்வர் துவக்கிவைக்கிறார்!
ரூ.1010.19 கோடியில் வளர்ச்சி பணிகளை
தொடங்கியும், துவக்கியும் வைத்து அமைச்சர் கே.என். நேரு பேட்டி!
தி.மு.கழக முதன்மைச்செயலாளர், சேலம் மண்டல கழக பொருப்பாளர், தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று மே. 8. திங்கட்கிழமை கோவை மாவட்டத்தில் சூராவளி சுற்றுபயணம் மேற்கொண்டார், முன்னதாக பல்லடம் நகராட்சி, வடுகர் பாளையத்தில் ரூ.3.54. கோடி மதிப்பீட்டில் குளம் தூர்வாரும் பணி - கரைகளை மேம்படுத்தி பொதுமக்கள் நடைபயிற்சி ஏதுவாக அமைக்கப்பட்டுவரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.



தொடர்ந்து பொள்ளாச்சி நகராட்சியில், ரூ.170.23. கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிவுற்ற பாதாள சாக்கடைகளை மக்களின் பயன்பாட்டுக்கு அர்பணித்தார்.
தொடர்ந்து கோவை மாநகராட்சி, நஞ்சுண்டாபுரம் பகுதியில் JNNURM திட்டத்தில் ரூ.43.60 கோடியில் 40. எம்.எல்.டி. திறன் கொண்ட, புதிதாக கட்டப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் திறந்துவைத்தார்.
இதனையடுத்து௹.31.65 கோடியில் புனரமைக்கப்பட்ட செல்வம் பதி- குமாரசாமி, குளங்களையும், ரூ.19.36. கோடியில் பணிகள் முடிவுற்ற கிருஷ்ணன் குளத்தையும் மக்களின் பயன்பாட்டுக்கு அர்பணித்தவர், டாடாபாத் பகுதியில் ௹ 50. லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அறிவியல் பூங்காவையும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தார்.


மேலும் மாநகராட்சியில் நடைபெற்ற விழாவில், ரூ.1.72 கோடி மதிப்பீட்டிலான சாலைகள் சுத்தம் செய்யும் 2.இயந்திரங்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ௹.7.86 கோடி மதிப்பீலான 106. இலகுரக வாகனங்கள், 100 பேட்டரி வாகனங்களை மக்கள் பணிகளுக்கு கொடியசைத்து துவக்கிவைத்து, பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சர் நேரு, ரேஸ்கோர்ஸ் சாலையில் சீர்மிகு நகராட்சித் திட்டத்தில், ரூ.40.67. கோடி செலவில் அமைக்கப்பட்ட மாதிரி சாலையையும் திறந்துவைத்தார்....


இதன் பின்னர், தி.மு.கழக முதன்மைச் செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது...



தி.மு.கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல்அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் தலையிலான, கழக திராவிட மாடல் அரசு ஆட்சி பொருப்பேற்ற நாள் முதல், மக்களுக்கான அனைத்து துறைசார்ந்த திட்டங்களை உரிய காலத்தில், தரத்துடன் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு சென்றடையும்வரை, முதல்வர் தளபதியார் நேரடி தனி கவனத்துடன் வளர்ச்சி - திட்டப் பணிகளை கண்காணித்து தேவையான ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி, மக்கள் பணியில் நாங்களும் (அமைச்சர்கள்) அதிகாரிகளும் உற்சாகமுடன், விரைந்து பணிசெய்திடும்வகையில் அறிவுறுத்தியும் வழிநடத்தியும் வருகின்றார்.....

அதன் அடிப்படையில், கழகத் தலைவர், தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் தளபதியாரின், உத்தரவுப்படி.கோவை மாவட்டத்தில் பல்வேறு திட்ட வளர்ச்சிபணிகள் ரூ. 1010.19 கோடி மதிப்பில் துவங்கப்பட்டும். முடிவுற்றுப் பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு அர்பணிக்கப்பட்டுமுள்ளது.
‘கோவையில்,இனி இரு பக்கமும் கழிவு நீர் ஓடைகள் கட்டப்பட்டு சாலைகள் போடப்படும். கோவையை சுத்தம் செய்ய நிறைய வாகனங்கள் வந்துள்ளது. கோவைக்கு உள்ள குடிநீர் பிரச்சனை நன்கு அறிந்த ஒன்றுதான்.
சிறுவாணி தண்ணீர் தேக்கம் குறைவாக உள்ளதால், போதிய தண்ணீர் வழங்க இயலவில்லை...
கேரளா அரசும் தண்ணீர் தரவில்லை.
பில்லூர் மூன்றாவது திட்டம் விரைவில் முடிந்து விடும். ஜீன் முதல் வாரத்தில் முதல்வர் இதனை துவங்கி வைப்பார். 170 எம்.எல்.டி. தண்ணீர், பில்லூர் திட்டத்தில் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சிறுவாணி அணையில் தடுப்பணை கட்டப்படுவது தொடர்பாக முதலமைச்சர் தளபதியார் கேரளா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாங்களும் இயக்கத்தை சேர்ந்த தோழர்களிடம் வலியுறுத்தி கூறியுள்ளோம்.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிற பணிகள் அனைத்திற்கும், கழகத் தலைவர், முதல்வர் தளபதியாரின் அறிவுறுத்தல் - ஆலோசனைகளின்படி உரியமுறையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது....

சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக கழக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர், அண்ணன் துரை- முருகன் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.
இவ்வாறாக அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச் செல்வன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தார்கள்.




Comments