top of page
Search

மேதினபரிசு!சொல்லாமலே செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!! 12.மணி நேர வேலை மசோதா திரும்ப பெற்றது அரசு!!!

  • Writer: உறியடி செய்திகள்
    உறியடி செய்திகள்
  • May 1, 2023
  • 1 min read
ree

முத்தமிழறிஞர் கலைஞரின் வழிதோன்றலாய்

சொன்னதைச் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!ே மே.1.உழைப்பாளர்கள் தினத்தில் உழைப்பாளர்கள், உணர்வுகளுக்கும், சிந்தனைகளுக்கும் மதிப்பளித்து, தி.மு.கழகமும், கழக அரசும் என்றும் தொழிலாளர் நலன் சார்ந்த அரசு என்பதை மீண்டும் நினைவூட்டும் விதமாக

12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!


12 மணிநேர வேலை சட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ree

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் மசோதா ஏப்ரல் 21 ஆம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளும் கடும் அதிர்ப்புத்தி தெரிவித்திருந்தது.

ree

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற மே தின விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24-ந் தேதி அறிவித்திருந்தோம். இந்த 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக இன்று அறிவிக்கிறேன்.

12 மணிநேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும். திமுக அரசு கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச.வும் எதிர்த்தது. இது திமுகவின் ஜனநாயகத் தன்மையை காட்டுகிறது. விட்டுக் கொடுப்பதை நான் அவமானமாக கருதவில்லை. பெருமையாகவே கருதுகிறேன்.

ree

12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறிய பின்னரும் அவதூறு பரப்புகின்றனர்" என்று அவர் கூறினார்.

ree

முன்னதாக தொழிலாளர் தினம் இன்று கொண்டாப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதல்-அமைச்சருடன், திமுகவின் தொ.மு.ச.வை சேர்ந்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து மே தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.


முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் சொன்னதை செய்யும் முதல்வராக, சொல்லாமலேயே பணிகளை முன்னெடுத்துவரும் தி.மு.கழகத் தலைவர். தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தொழிலாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள். பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகின்றது...



 
 
 

Comments


SIGN UP & STAY UPDATED

Thanks for submitting!

  • Grey Twitter Icon
  • Grey LinkedIn Icon
  • Grey Facebook Icon

© 2022 by Uriyadi News

bottom of page